Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
ஆண்டின் கடைசி சனி அமாவாசையில் உருவாகும் சுப யோகத்தால் சனி பகவானின் அருளைப் பெறும் 5 ராசிக்காரர்கள்!
ஆண்டின் கடைசி சனி அமாவாசையான இன்று பத்ம மற்றும் சிவ யோகம் உருவாவதால், இந்த சனி அமாவாசை இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
2022 ஆம் ஆண்டின் கடைசி சனி அமாவாசை ஆகஸ்ட் 27 ஆம் தேதி வருகிறது. அமாவாசையில் சனி அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. சனிக்கிழமையில் அமாவாசை வருவதால், அது சனி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் தானம் மற்றும் திதி கொடுப்பது நல்லது. இந்த சனி அமாவாசையில் சுப யோகங்கள் உருவாகின்றன.

ஆண்டின் கடைசி சனி அமாவாசையான இன்று பத்ம மற்றும் சிவ யோகம் உருவாவதால், இந்த சனி அமாவாசை இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த இரண்டு யோகங்களும் சுப யோகங்கள். இந்த சுப யோகங்கள் சனி அமாவாசையில் உருவாகியிருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு சனியின் சிறப்பு அருள் கிடைக்கும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

சனியின் தாக்கம்
சனி பகவான் தற்போது மகர ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இதனால் தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு ஏழரை சனி நடைபெறும். மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு கண்டக சனியின் தாக்கம் இருக்கும். சனி தோஷம், ஏழரை சனி, கண்டக சனியால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். இவர்கள் சனி அமாவாசை நாளில் சனி பகவானை வழிபடுவது நல்லது. முக்கியமாக இந்நாளில் ஒருசில நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் சனி தோஷத்தின் விளைவுகளைக் குறைக்கலாம்.

சனி அமாவாசை பரிகாரங்கள்
* ஏழரை சனி அல்லது சனி தோஷம் உள்ளவர்கள் சனி அமாவாசை நாளில் சனி ரக்ஷா ஸ்தோத்திரத்தை முறையாக படிக்க வேண்டும்.
* இது மட்டுமின்றி, தஷ்ரத் கிருத சனி ஸ்ரோட்டையும் பாராயணம் செய்ய வேண்டும்.
* சனி பகவான் கோவிலுக்கு சென்று, சனி பகவானை வழிபட வேண்டும். ஆனால் சனி பகவானை வணங்கும் போது எப்போதும் அவரது கண்களை நேரடியாக பார்த்து வணங்கக்கூடாது.
* சனி பகவானுக்கு கடுகு எண்ணெய் மற்றும் கருப்பு எள்ளு தீபம் போடுவது நல்லது.
* முக்கியமாக இந்நாளில் சனி சாலிசாவை பாராயணம் செய்வதன் மூலம், ஏழரை சனி மற்றும் சனி தோஷத்தின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
* காகத்திற்கு உணவளிக்க வேண்டும். இது உங்கள் முன்னோர்களை சாந்தப்படுத்தி, சனி தோஷத்தில் இருந்து விடுவிக்கும்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்நாளில் சனியின் அருள் கிடைக்கும். கடின உழைப்பிற்கான நற்பலன் கிடைக்கும். சனி பகவானின் ஆசீர்வாதத்தால் வருமானம் உயரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள உருவாகும். பணிபுரிபவர்களின் கௌரவம் மற்றும் செல்வாக்கு அதிகரிக்கும். இந்நாளில் பணியிடத்தில் கொடுக்கப்படும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து, உயர் அதிகாரிகளின் மரியாதையைப் பெறுவார்கள்.

மிதுனம்
மிதுன ராசியில் ஏற்கனவே சனியின் தாக்கம் உள்ளது. இந்நாளில் ஆன்மீக நடவடிக்கைகளில் நம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரகமாக முடிக்கப்படும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சனி அமாவாசை அன்று நல்ல பண வரவு கிடைக்கப் போகிறது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல உறவு கிடைக்கும். வெளியூர் சென்று படிக்க விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புக்களும், தொழில் தொடங்க விரும்புவோருக்கு சனி பகவானின் அருள் கிடைக்கும். முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். நல்ல பொருள் வசதியும் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

துலாம்
துலாம் ராசியிலும் சனியின் தாக்கம் உள்ளது. ஆனால் இந்த சனி அமாவாசை வாழ்வில் உள்ள பல பிரச்சனைகளை நீக்கும். இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கி, சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் இந்நாளில் நல்ல பலனைப் பெறுவார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவார்கள். வேலையில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் அருளால் வரும் நாட்கள் நன்றாக இருக்கும். கடின உழைப்பிற்கான நல்ல பலனைப் பெறுவீர்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்திலும் முன்னேற்றம் ஏற்படும். பணியில் இருந்த தடைகள் நீங்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும். ஆனால் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications











