For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சனி அமாவாசை நாளில் நிகழும் சூரிய கிரகணம் ஒவ்வொரு ராசியையும் எப்படி பாதிக்கிறது தெரியுமா?

சூரிய கிரகணம் சனி அமாவாசை நாளில் நிகழ்கிறது. பொதுவாக சனி அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இப்போது சனி அமாவாசை நாளில் நிகழும் சூரிய கிரகணம் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

|

2021 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் 04 டிசம்பர் 2021 அன்று நிகழவுள்ளது. பூமிக்கும், சூரியனுக்கும் இடையே சந்திரன் கடந்து செல்லும் போது தான் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இம்முறை நிகழ்வது ஒரு பகுதி கிரகணம் ஆகும். இந்த கிரகணம் விருச்சிக ராசியில் நிகழ்கிறது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாமல் இருந்தாலும், தென்னாப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதி, அண்டார்டிகா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் கடல் பகுதியில் தெரியும்.

இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 5 மாத குழந்தை உயிர் பிழைக்க உதவுங்கள் ப்ளீஸ்

Shani Amavasya 2021: Effects Of Shani Amavasya On Different Zodiac Signs In Tamil

இந்த சூரிய கிரகணம் சனி அமாவாசை நாளில் நிகழ்கிறது. பொதுவாக சனி அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நாளில் லட்சுமி தேவியை வழிபடுவது நல்லது. இப்போது சனி அமாவாசை நாளில் நிகழும் சூரிய கிரகணம் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியின் 8 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் உடல்நிலையில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். சனி அமாவசையில் நிகழும் சூரிய கிரகணத்தால் கெட்ட பலன்கள் கிடைக்காமல் இருக்க, கருப்பு நிற பசு அல்லது மூத்த சகோதரருக்கு சேவைகளை செய்யுங்கள்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியின் 7 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. ஏழாவது வீடு வாழ்க்கைத் துணையைக் குறிக்கிறது. எனவே சனி அமாவாசையில் நிகழும் சூரிய கிரகணம் உங்கள் துணையுடனான உறவை பாதிக்கும். இந்நாளில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எனவே கிரகணத்தின் மோசமான தாக்கத் தவிர்க்க உணவு உண்பதற்கு முன் ஒரு துண்டு பிரட்டை நெருப்பிற்கு அர்ப்பணிக்க வேண்டும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியின் 6 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. ஆறாவது வீடு ஆரோக்கியம், எதிரி மற்றும் நண்பர்களைக் குறிக்கிறது. எனவே இந்த கிரகணத்தால், உங்கள் எதிரிகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார்கள். ஆகவே கவனமாக இருங்கள். நண்பர்களை உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள். இந்த கிரகணத்தின் தாக்கத்தைத் தவிர்க்க நாய்க்கு பிரட் துண்டுகளை கொடுங்கள்.

கடகம்

கடகம்

கடக ராசியின் 5 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த ஐந்தாவது வீடு கல்வி, குரு, குழந்தைகள் மற்றும் அறிவு ஆகியவற்றைக் குறிக்கிறது. எனவே இந்த சூரிய கிரகணம் இந்த அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த கிரகணத்தின் தீய விளைவுகளைத் தடுக்க, பறவைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் 4 ஆம் வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. நான்காவது வீடு தாய், நிலம் மற்றும் வாகனத்தைக் குறிக்கிறது. எனவே உங்கள் தாயுடனான உறவு பாதிக்கப்படும் மற்றும் நிலம், கட்டிடம் மற்றும் வாகனம் ஆகியவற்றையும் பாதிக்கும். இக்காலத்தில் தாயின் ஆதரவைப் பெற சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். கிரகணத்தின் கெட்ட விளைவுகளைத் தடுக்க, இந்நாளில் ஒரு ஏழைக்கு உணவளியுங்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசியின் 3 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. மூன்றாவது வீடு உடன்பிறப்புகளைக் குறிக்கிறது. எனவே இந்த கிரகணத்தினால் உடன்பிறப்புக்களுடனான உறவில் கசப்பு ஏற்படலாம். இந்த கிரகணத்தின் கெடு பலன்களைத் தவிர்க்க, சமய பணிகளில் ஈடுபடுவதோடு, தவறான செயல்களுக்கு ஆதரவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

துலாம்

துலாம்

துலாம் ராசியின் 2 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இரண்டாம் வீடு செல்வத்தைக் குறிக்கிறது. எனவே இந்த கிரகணத்தால், உங்களின் நிதி அல்லது பண விஷயத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கிரகணத்தின் தீய பலன்களைத் தவிர்க்க, கோவில் தேங்காய், தேங்காய் எண்ணெய் அல்லது சிறிது பாதாமை தானமாக வழங்குங்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியின் முதல் வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் இந்த கிரகணத்தின் போது மிகவும் ஆற்றலின்றி சோர்ந்து இருப்பதைப் போன்று உணரக்கூடும். இந்த கிரகணத்தின் தீய விளைவுகளைத் தவிர்க்க, சூரிய பகவானுக்கு நீரை சமர்பணம் செய்யுங்கள்.

தனுசு

தனுசு

தனுசு ராசியின் 12 ஆம் வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த வீடு மகிழ்ச்சி மற்றும் செலவுகளைக் குறிக்கிறது. எனவே இந்த கிரகணத்தால் உங்களின் மகிழ்ச்சி குறையும் மற்றும் செலவுகள் அதிகரிக்கும். சூரிய கிரகணத்தின் தாக்கத்தைக் குறைக்க, உங்கள் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளைத் திறந்து வைத்து, வீட்டில் போதுமான அளவு வெளிச்சம் படுமாறு செய்ய வேண்டும்.

மகரம்

மகரம்

மகர ராசியின் 11 ஆம் வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. 11 ஆவது வீடு வருமானம் மற்றும் ஆசை நிறைவேறுவதைக் குறிக்கிறது. ஆகவே இந்த கிரகணத்தால் உங்கள் ஆசைகள் நிறைவேறுவதில் சிரமம் இருக்கும் மற்றும் உங்கள் வருமானத்தில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே சூரிய கிரகணத்தின் தீய பலன்களைத் தவிர்க், இந்நாளில் இரவு தூங்கும் போது தலைக்கு அடியில் 5 முள்ளங்கி அல்லது 5 பாதாமை வைத்து தூங்கி, மறுநாள் காலையில் அதை கோவிலுக்கு தானம் செய்யுங்கள்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசியின் 10 ஆம் வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த வீடு தொழில் மற்றும் தந்தையின் வெற்றியைக் குறிக்கிறது. ஆனால் இந்த கிரகணத்தினால் உங்கள் தந்தையின் தொழிலில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். மேலும் உங்கள் தொழிலில் முடிவு எடுப்பதில் சிரமத்தை சந்திக்கக்கூடும். இந்த கிரகணத்தின் தாக்கத்தைக் குறைக்க, தலையில் வெள்ளை நிற தொப்பை அல்லது தலைப்பாகையைஅணியுங்கள்.

மீனம்

மீனம்

மீன ராசியின் 9 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. ஒன்பதாவது வீடு அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. எனவே இந்த கிரகணத்தின் போது உங்கள் அதிர்ஷ்டம் உங்களுக்கு முழு ஆதரவாக இருக்காது. கிரகணத்தின் தீய பலன்களைத் தவிர்க்க, கோவியில் வெல்லத்தை தானம் செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Shani Amavasya 2021: Effects Of Shani Amavasya On Different Zodiac Signs In Tamil

Shani Amavasya 2021: Effects of shani amavasya on different zodiac signs in Tamil. Read on to know more...
Desktop Bottom Promotion