Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
செப்டம்பர் மாசம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமான மாசமா இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
செப்டம்பர் மாதத்தில் 5 கிரகங்களின் மாற்றங்களால் ஒருசில ராசிக்காரர்களின் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாகவும், அதிர்ஷ்டமானதாகவும் இருக்கப்போகிறது.
செப்டம்பர் மாதம் வந்துவிட்டது. ஜோதிடத்தைப் பொறுத்தவரை, செப்டம்பர் மாதம் மிகவும் முக்கியமான மாதமாகும். ஏனெனில் இந்த மாதத்தில் 5 கிரகங்கள் இடம் மாறுகின்றன. அதில் செவ்வாய், புதன், குரு, சூரியன் மற்றும் சுக்கிரன் போன்ற கிரகங்கள் தங்களின் நிலைகளை மாற்றுகின்றன. இந்த கிரகங்களின் மாற்றங்களால் ஒருசில ராசிக்காரர்களின் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாகவும், அதிர்ஷ்டமானதாகவும் இருக்கப்போகிறது.

சொல்லப்போனால் இந்த ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி வரையான காலம் ஒரு வரப்பிரசாதம். இப்போது செப்டம்பர் மாதம் எந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாகவும், அதிர்ஷ்டமானதாகவும் இருப்பப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களின் மனம் இம்மாதத்தில் மிகவும் சந்தோஷம் நிறைந்ததாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வணிகத்தில் நிலைமைகள் மேம்படும். நண்பர்களின் உதவி கிட்டும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இம்மாதம் மிகவும் அற்புதமாக இருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். இம்மாதத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களின் மனம் மகிழ்ச்சியான உணர்வுடன் இருக்கும். இம்மாதத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மிகுதியாக இருக்கும். முன்னோர்களின் பணத்தை பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சியான முயற்சிகள் வெற்றி பெறும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிட வாய்ப்புக்கள் கிடைக்கும். இம்மாதம் லாபம் நிறைந்ததாக இருக்கும். உங்களின் வேலையில் வெற்றி கிடைக்கும். உங்களின் மரியாதை அதிகரிக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களின் நம்பிக்கை இம்மாதத்தில் அதிகரிக்கும். கலை அல்லது இசையின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வணிக நிலைமைகள் மேம்படும். மனம் சந்தோஷம் நிறைந்திருக்கும். பண பரிவர்த்தனைகளுக்கு சிறந்த காலம். இம்மாதத்தில் முதலீடு செய்வது நன்மை பயக்கும். லாபகரமான மாதம் இது. புதிய வேலைகளைத் தொடங்குவதற்கான பொன்னான காலம். இம்மாதத்தில் உங்களின் கௌரவம் மற்றும் மரியாதை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களும் இம்மாதத்தில் நம்பிக்கை மிகுந்தவராக இருப்பார். எவ்வித சொத்தில் இருந்தும் பணத்தைப் பெறுவீர்கள். இக்காலத்தில் செய்யும் எந்தவொரு வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். பண பரிவர்த்தனைகளுக்கான சாதகமான காலம் இது. இம்மாதத்தில் லாபம் அதிகம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். பிரச்சனைகள் முழுமையாக நீங்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் மற்றும் உங்கள் கௌரவம் அதிகரிக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இம்மாதம் மன அமைதியுடன் இருக்கும். குடும்பத்தில் ஏதேனும் சுப காரியங்கள் அல்லது விஷேசங்கள் நடக்கலாம். புத்தம் புதிய ஆடைகளை பரிசாக பெறுவீர்கள். நண்பர்களின் உதவியுடன், உங்கள் வருமானம் அதிகரிக்கும். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இம்மாதத்தில் உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications