Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் உண்மையான குணாதிசயத்தை தெரிஞ்சுக்கணுமா? இத படிங்க...
செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாயின் தாக்கம் இருக்கும். இப்போது ஒன்பதாவது மாதமான செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் உண்மையான குணாதிசயம் என்னவென்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, எப்படி ஒரு ராசியைக் கொண்டு ஒருவரின் குணாதிசயத்தைக் கூற முடியுமோ, அதேப் போல் ஒரு மாதத்தைக் கொண்டும் குணாதிசயம் மற்றும் வாழ்க்கை பற்றி அறிய முடியும். தற்போது செப்டம்பர் மாதத்தில் நுழைந்துள்ளோம். நாட்காட்டியின் படி, செப்டம்பர் ஆண்டின் ஒன்பதாவது மாதமாகும். நியூமராலஜியின் படி, செப்டம்பர் மாதம் செவ்வாய் பகவான்/கிரகமாக கருதப்படுகிறது. நவகிரகங்களில் செவ்வாய் தைரியம் மற்றும் வலிமையின் காரணியாக கருதப்படுகிறது.

எனவே செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாயின் தாக்கம் இருக்கும். இப்போது ஒன்பதாவது மாதமான செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் உண்மையான குணாதிசயம் என்னவென்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கடின உழைப்பாளி
செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகள். இவர்கள் தங்களின் கடின உழைப்பால் தங்கள் வாழ்க்கையில் நிறைய சாதிப்பார்கள். மேலும் இம்மாதத்தில் பிறந்தவர்கள் ஒரு பிரச்சனைக்கு மிகவும் வேகமாக தீர்வு காண முயல்வார்கள்.

திறந்த மனதுடையவர்கள்
செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவர்கள் மற்றும் அதிக சகிப்புத்தன்மை கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்களின் கருத்துக்கள், விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகளை மதிப்பவர்கள். வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை ஏற்றுக் கொள்வார்கள். மனதில் பட்டதை சற்றும் தயங்காமல் வெளிப்படையாக கூறுவார்கள்.

உண்மையாக இருப்பார்கள்
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையாக இருப்பார்கள். மிகவும் விசுவாசமானவர்கள். பொய் கூறுபவர்களை ஆதரிக்கமாட்டார்கள். உண்மையின் பக்கம் நின்று அதிகம் வாதிடுவார்கள். வாழ்க்கையை நன்கு புரிந்து வாழக்கூடியவர்கள்.

மிகவும் கண்ணியமானவர்கள்
செப்டம்பரில் பிறந்தவர்கள் மிகவும் கண்ணியமானவர்கள். மற்றவர்களின் உணர்வுகளை புண்படாமல் பார்த்துக் கொள்வார்கள். எப்போதும் தாழ்மையான நபராக இருக்க முயற்சிப்பார்கள். மேலும் இவர்கள் தங்களின் கண்ணியமான மற்றும் அடக்கமான குணங்களால் மற்றவர்களை எளிதில் ஈர்ப்பார்கள்.

தூய்மையான இதயம்
செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் மென்மையான மற்றும் தூய்மையான இதயம் கொண்டவர்கள். இவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள். அன்பானவர்கள், மற்றவர்களுடன் நன்கு பழகக்கூடியவர்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்கள் முன் தங்களை வலிமையாக காட்ட அதிக முயற்சிப்பார்கள்.

சிறந்த வாழ்க்கைத் துணை
செப்டம்பரில் பிறந்தவர்கள் தங்கள் உறவுகளில் சிறந்து விளங்குவார்கள். தங்கள் வாழ்க்கைத் துணையை எப்போதும் பாராட்டுவார்கள். ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் எப்போதும் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் இருப்பார்கள். இவர்களைப் பொறுத்தவரை, ஒருவரின் ஈகோவை திருப்திப்படுத்துவதை விட ஆரோக்கியமான உறவைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியமானது. திருமண வாழ்க்கை சந்தோஷம் நிறைந்து இருக்கும். மேலும் இவர்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும் பெறுவார்கள். சில நேரங்களில் இவர்களின் பழக்கவழக்கங்கள் திருமண வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தலாம்.

சிறந்த தொழில் எது?
செப்டம்பரில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வேலையையும் சிறந்த முறையில் செய்து முடிக்க முயற்சிப்பார்கள். ஜோதிடத்தைப் பொறுத்தவரை, செப்டம்பரில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் விரைவில் வெற்றி காண்பார்கள். செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், நல்ல ஆலோசகர்கள் மற்றும் அரசியல்வாதியாக நிறைய வாய்ப்புள்ளது.

குறைபாடுகள் என்ன?
செப்டம்பர் மாதம் செவ்வாயைக் குறிக்கிறது. எனவே செவ்வாயின் தாக்கம் இந்த மாதத்தில் பிறந்தவர்களின் மீது அதிகம் இருப்பதால், இவர்கள் மிகவும் வேகமாக கோபப்படுவார்கள். தங்களுக்கு வரும் கோபத்தை சற்றும் மறைக்காமல் உடனடியாக வெளிப்படுத்துவார்கள். இவர்களால் உறவில் எந்த ஒரு மாற்றத்தையும் தாங்கிக் கொள்ளமாட்டார்கள். மேலும் தங்களுக்கும் வாழ்க்கைத் துணைக்கும் இடையே மூன்றாம் நபர் குறுக்கிடுவதை இவர்கள் விரும்பமாட்டார்கள்.



Click it and Unblock the Notifications