For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

September Horoscope 2022: செப்டம்பர் மாசம் 12 ராசிக்கும் எப்படி இருக்கப் போகுது தெரியுமா?

|

2022 ஆம் ஆண்டின் ஒன்பதாவது மாதத்தில் நுழைய உள்ளோம். கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து ஒவ்வொரு மாதமும் பலன்கள் வேறுபடும். அந்த வகையில் செப்டம்பர் மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. உங்களுக்கு 2022 ஆம் ஆண்டின் ஒன்பதாவது மாதமான செப்டம்பர் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் செப்டம்பர் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என செப்டம்பர் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் தொழிலில் பலவிதமான முடிவுகளை பெறுவார்கள். பணிபுரிபவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். குடும்பச் சூழல் அமைதியாக இருக்கும். வீட்டில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். காதலிப்பவர்கள் தங்கள் அன்புக்குரியவருடன் பேசும் போது சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. நிதி நிலை சாதகமாக இருக்கும். பல்வேறு ஆதாரங்களில் இருந்து வெற்றிகரமாக வருமானம் ஈட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். தொழில்முனைவோர் தங்களின் நிறுவனங்களில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். மாணவர்களுக்கு இது சாதகமான மாதமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் பலவிதமான விளைவுகளை சந்திக்கக்கூடும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையிடம் பேசும் போது கவனமாக பேச அறிவுறுத்தப்படுகிறது. பொருளாதார நிலை சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் பேசுவது நல்லது.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் பெரும் வெற்றியைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் இம்மாதத்தில் நன்மைகளைப் பெறுவார்கள். தொழில் காரணமாக பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இம்மாதம் சிறந்த மாதமாக இருக்காது. குடும்பத்தைப் பொறுத்தவரை, உடன்பிறந்தவர்களின் ஆதரவைப் பெறுவதோடு, சில மோதல்களையும் சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும். நிதியைப் பொறுத்தவரை, சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் எவ்வித பிரச்சனையும் இருக்காது.

கடகம்

கடகம்

தொழில் செய்யும் கடக ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். தொழில் தொடர்பான சில அருமையான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு சாதகமான மாதமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இம்மாதத்தில் குடும்பத்தினரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். நிதியைப் பொறுத்தவரை, சாதகமான விளைவுகளைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக சாதகமான பலன்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. குடும்ப வாழ்க்கையில் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. காதல் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நிதி நிலைமையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். முதலீடுகளை ஒத்தி வைப்பது நல்லது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அஜீரண கோளாறு, அசிடிட்டி போன்ற பிரச்சனைகளால் சிரமப்படலாம்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதம் தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை சாதகமாக இருக்கும். இம்மாதத்தில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். வியாபாரிகளுக்கு இம்மாதம் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. வீட்டில் அமைதி இம்மாதத்தில் சமரசம் செய்யப்படலாம். திருமணமானவர்களுக்கு இம்மாதம் சாதகமாக இருக்காது. நிதியைப் பொறுத்தவரை, இம்மாதம் பயனுள்ளதாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பிரச்சனை எதுவும் இருக்காது. ஆனால் ஆரோக்கியத்தை கவனிக்க மறக்காதீர்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் தங்கள் வேலையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மருத்துவம், பொறியியல், இயந்திரவியல் ஆகிய துறைகளில் படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். திருமணம் மற்றும் காதல் உறவுகள் நன்றாக இருக்கும். இருப்பினும் சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவற்றைத் தவிர்த்திடுங்கள். நிதியைப் பொறுத்தவரை, பணத்தை செலவழிக்கும் போது கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது. ஆனால் சிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் யோசனைகள் பாராட்டப்படும். தொழிலதிபர்கள் இம்மாதத்தில் நன்மையைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு இம்மாதம் சாதகமாக இருக்கும். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். திருமணமான தம்பதிகளுக்கு இடையே அன்பு வளரும். நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறுசிறு பிரச்சனைகள் தொடர்ந்து வரலாம்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் தங்கள் தொழிலில் வெற்றியைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு இது ஏற்றத்தாழ்வு நிறைந்த மாதகமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். திருமணம் மற்றும் காதல் உறவுகள் கடினமாக இருக்கும். இந்த மாதம் முழுவதும் நீங்களும் உங்கள் துணையும் கருத்து வேறுபாடுகளை கொள்ள நேரிடும். பிரச்சனையை பொறுமையாக அணுக அறிவுறுத்தப்படுகிறது. நிதி நிலை அதிர்ஷ்டமாக இருக்கும். பல்வேறு வழிகளில் இருந்து வருமானம் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இம்மாதம் சிறப்பாக இருக்கும்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக சாதகமாக இருக்காது. இம்மாதத்தில் சில சிரமங்களையும், சவால்களையும் சந்திப்பார்கள். பொறுமையாக இருக்க வேண்டும். வணிகர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மாணவர்களுக்கு இம்மாதம் சாதகமாக இருக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடித்து திருமணம் செய்ய வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக, இம்மாதத்தில் கணிசமான தொகையைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. பணியிடத்தில் சம்பள உயர்வு கிடைக்கும். ஆரோக்கியம் சீரற்றதாக இருக்கும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக நல்ல மாதமாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். வணிகர்கள் அதிர்ஷ்ட வாய்ப்புக்களைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இம்மாதத்தில் உங்கள் கவனம் ஆன்மீக மற்றும் மத விஷயங்களில் இருக்கும். திருமண வாழ்க்கையும் காதலும் அற்புதமாக இருக்கும். நிதி நிலையும் சாதகமாக இருக்கும். உங்கள் முந்தைய கடன்கள் அனைத்தையும் அடைத்துவிடுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த மாதம் கொஞ்சம் கடினமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். பணியிடத்தில் நற்பெயரைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணம் மற்றும் காதல் உறவுகள் நன்றாக இருக்கும். நிதியைப் பொறுத்தவரை, செலவுகள் அதிகம் இருக்கும். சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும். மொத்தத்தில் இம்மாதத்தில் சுதந்திரமாக வாழ்வீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

September 2022 Monthly Horoscope In Tamil

Check out the monthly horoscope of September 2022 for all zodiac signs. Read on.
Desktop Bottom Promotion