Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இதுல ஒன்ன தேர்வு செய்யுங்க... உங்களோட ஸ்ட்ராங் சைடு என்னன்னு நாங்க சொல்றோம்...
பலருக்கு அவர்களது திறன்கள், திறமைகள் தெரியாது. குறிப்பாக ஒருவருக்கு அவர்களது வலுவான பக்கம் என்னவென்பதே தெரியாமல் இருக்கலாம். உங்களுக்கு உங்களுடைய வலுவான பக்கம் என்னவென்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
ஒருவரது திறன்கள், திறமைகள் மற்றும் குணங்களை சைகாலஜி மூலம் சொல்ல முடியும். உதாரணமாக, ஒருவர் பொருட்களை ஒழுங்குபடுத்தும் விதத்தை வைத்தே அவரது திறமைகள் மற்றும் தன்மையை பற்றி சொல்லலாம். இதற்கு என்றே சைகாலஜி என்று ஒரு தனி படிப்பு உள்ளது. சைகாலஜி என்பது மனம் மற்றும் நடத்தை பற்றிய படிப்பு. உளவியலாளர்கள் உளவியல் செயல்முறைகள், மூளை செயல்பாடுகள் மற்றும் நடத்தை ஆகியவற்றைப் படிப்பதிலும், புரிந்து கொள்வதிலும் தீவிரமாக ஈடுபடுவார்கள்.

பலருக்கு அவர்களது திறன்கள், திறமைகள் தெரியாது. குறிப்பாக ஒருவருக்கு அவர்களது வலுவான பக்கம் என்னவென்பதே தெரியாமல் இருக்கலாம். உங்களுக்கு உங்களுடைய வலுவான பக்கம் என்னவென்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு சிறிய சோதனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதுவும் ஒரு 4 முட்டையை ஒரு முட்டை பெட்டியில் எப்படி அடுக்கி வைக்க நினைப்பீர்கள் என்பதை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

முட்டை சோதனை
4 முட்டையை முட்டை பெட்டியில் அடுக்கி வைக்கும் விதத்தைக் கொண்டு ஒருவரது வலுவான பக்கம் என்னவென்பதை கூறலாம். கீழே முட்டைகளை அடுக்கி வைக்கும் 4 விதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு விதமும் ஒருவரது வலுவான பக்கத்தைக் குறிப்பவையாகும். வாருங்கள் அவை என்னவென்பதைக் காண்போம்.

அ
உங்களின் வலுவான பக்கம் படைப்பாற்றல். நீங்கள் எப்போதும் அற்புதமான யோசனைகளுடன் இருப்பீர்கள், உங்களால் ஓரிடத்தில் நீண்ட நேரம் உட்காரவோ அல்லது போரடிக்கும் பணிகளை செய்யவோ முடியாது. ஒரே நேரத்தில் 15 வேலைகளை செய்யக்கூடியவர்கள் மற்றும் எப்போதும் சுற்றியிருப்பவர்களின் கவனத்தை ஈர்ப்பவராக இருப்பீர்கள்.
நீங்கள் எப்போதும் ஒரு விஷயத்தின் சாரத்தை மட்டுமே காண்பீர்கள். நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் சுருங்கச் சொல்லி புரிய வைக்கக்கூடியவர். உங்களின் ஆளுமை மற்றவர்களை ஈர்த்து போற்றும் வகையில் இருக்கும். எனவே உங்களின் வலிமையைப் பாராட்டுவதோடு, பெருக்கிக் கொள்ளுங்கள்.

ஆ
உங்களின் வலிமை லாஜிக் மற்றும் பகுப்பாய்வு மனம். நீங்கள் ஒரு சிறந்த அமைப்பாளர். உங்களின் கடின உழைப்பு, முறையான தன்மை மற்றும் விடாமுயற்சி போன்ற பண்புகள் தான், ஏராளமான பணிகளில் ஒரு இணக்கமான கட்டமைப்பை உருவாக்க உதவுகின்றன. உங்களின் பகுப்பாய்வு மனப்பான்மை, உங்களை ஒரு சிறந்த தலைவராக அல்லது நிர்வாகியாக காட்டும். விரைவில் வெற்றியை அடைய முயற்சிக்கும் போது, நிறைய தகவல்களை சேகரிப்பதை நிறுத்துங்கள். உங்களின் தனித்துவமான மனதை நம்புங்கள். இதனால் உங்களின் இலக்குகளை நீங்கள் அடைவீர்கள்.

இ
உங்களின் வலிமை என்னவென்றால், அது நெகிழ்வுத்தன்மை. இதனாலேயே நீங்கள் பல சிரமங்களுக்கு இடையே சூழ்ச்சி செய்யவும், புதிய விஷயங்களைக் கற்று வளரவும், உங்களைச் சுற்றி ஒரு அழகான உலகத்தை உருவாக்கவும் முடிகிறது. உங்கள் மனதின் நெகிழ்வுத்தன்மை, உங்களை எங்கும் வெற்றி பெற அனுமதிக்கும். புதிய ஒன்றைப் பெற நீங்கள் உங்கள் திறமைகளுடன், ஆர்வத்துடன் செய்தால், தனித்துவமாக வெளிப்படுவீர்கள்.

ஈ
உங்களின் வலுவான பக்கம் உறுதியும், தீர்மானமும் ஆகும். தலைமைத்துவ திறன்கள் மற்றும் விரைவாக பகுப்பாய்வு செய்து முடிவுகளை எடுக்கும் திறன் போன்றவை தொழில் இலக்குகளை எளிதில் அடைய உதவும். மேலும் உங்களைச் சுற்றியுள்ளவர்கள், உங்களின் கவனம் செலுத்தும் விதம் மற்றும் முன்னேற்றத்தைக் கண்டு பாராட்டுவார்கள். தன்னம்பிக்கை, விரைவான முடிவெடுக்கும் திறன் மற்றும் லாபகரமான யோசனைகளைக் காணும் திறன் போன்றவை நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெற உதவும். உங்களைப் பொறுத்தவரை, தைரியமும், லட்சிய இலக்குகளை அமைத்து அதை நோக்கி செல்வதும் தான் முக்கிய விஷயம்.
Image Courtesy: brightside



Click it and Unblock the Notifications