Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...! -
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
இதில் உங்கள் மூக்கு எந்த வடிவத்தில் இருக்குனு சொல்லுங்க? உங்களைப் பற்றிய ரகசியங்களை நாங்க சொல்றோம்!
உங்கள் கண்கள், மூக்கு, வாய், முகம் என பல வகையான உடல் பண்புகள் உங்களை தனித்துவமாக்குகின்றன.
உங்கள் கண்கள், மூக்கு, வாய், முகம் என பல வகையான உடல் பண்புகள் உங்களை தனித்துவமாக்குகின்றன. அந்த வகையில் நமது முகத்தின் முக்கிய அங்கமாகும், இது நமது ஒட்டுமொத்த தோற்றத்தை நிர்ணயிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு மூக்கின் வடிவமும் தனித்துவமானது மற்றும் வித்தியாசமானது, மேலும் நமது ஆளுமையைப் பற்றி விவரிக்கிறது.

மூக்கின் வடிவம் நம்மைப் பற்றி வேடிக்கையான மற்றும் நகைச்சுவையான தகவல்களை வெளிப்படுத்துகிறது, மேலும் மூக்கு வெவ்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் இருக்கிறது, இது ஒவ்வொன்றும் எதைக் குறிக்கிறது என்பதை பகுப்பாய்வு செய்வது மிகவும் சுவாரஸ்யமானது. உங்கள் மூக்கின் வடிவம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சிறிய மூக்கு
உங்கள்சிறிய மூக்கு நண்பர் வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களுடன் ஒருபோதும் பிரச்சினை வைத்துக் கொள்ளாதீர்கள். அது அவர்களின் இயல்பாக இருக்கலாம், ஆனால் அவர்கள் திடீரென கோபப்பட்டு வெடித்துச் சிதறுவார்கள். அவர்களின் தனிப்பட்ட விஷயத்தில் ஒருபோதும் தலையிடாதீர்கள்.

நீளமான மூக்கு
நீளமான மூக்கு உள்ளவர்கள் தலைவனாகப் பிறந்தவர்கள், நல்ல வணிக உணர்வு கொண்டவர்கள். அவர்களின் கூர்மையான உள்ளுணர்வ அவர்களுடைய வெற்றிக்கான பாதையை எளிதாக செதுக்கலாம். அவர்களின் மிகப்பெரிய பிரச்சனைகள் பெரும்பாலும் அவர்களின் மிகப்பெரிய பலத்தால்தான் வருகின்றன.

பெரிய மூக்கு
இந்த மூக்கின் பாலம் குறுகியதாகவோ அல்லது நீளமாகவோ இருக்கலாம். ஆனால் அவை பரந்த நுனிகளைக் கொண்டுள்ளன, அவை உண்மையில் பெரிய நாசியுடன் இருக்கும். பெரிய மூக்கு சக்தி, உற்சாகம், தலைமைத்துவம், ஈகோ மற்றும் வேலை செய்வதற்கான ஆசை ஆகியவற்றுடன் தொடர்புடையது. அவர்கள் தங்கள் சொந்த எண்ணங்களைக் கொண்டுள்ளனர், மேலும் அவர்கள் ஒருவரின் கீழ் வேலை செய்வது கடினம்.

பட்டன் மூக்கு
பட்டன் மூக்கு மிகவும் அழகான மூக்கு வடிவமாகும். பட்டன் வடிவ மூக்கைக் கொண்ட பெண்கள் கற்பனைத்திறன் உடையவர்கள் என்றும் பொதுவாக தங்கள் மூக்கின் வடிவத்தைப் பற்றி பெருமிதம் கொள்வதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் குறிப்பாக அக்கறை, அன்பு, நம்பிக்கை, வளர்ப்பு மற்றும் கனிவானவர்கள். இருப்பினும், பட்டன் மூக்கு கொண்ட நபர்கள் தங்கள் உணர்ச்சி உறுதியற்ற தன்மைக்கு அறியப்படுகிறார்கள்.

சதைப்பற்றான மூக்கு
சதைப்பற்றான மூக்குக் கொண்டவர்கள் வேகமானவர்கள், அவர்கள் வேகமாக சிந்தித்து இன்னும் வேகமாக செயல்படுவார்கள். அவர்கள் புத்திசாலிகள் மற்றும் அதிக நேரத்தை வீணடிக்க மாட்டார்கள், இது சில நேரங்களில் கொஞ்சம் ஆக்ரோஷமாக தெரிகிறது. ஆனால், அவர்கள் மிகவும் விசுவாசமான மற்றும் அக்கறையுள்ள கூட்டாளர்களாக இருக்கிறார்கள்.

கிரேக்க மூக்கு
கிரேக்க மூக்கு முற்றிலும் நேரான மூக்கு, இது அழகான குறுகிய நாசியைக் கொண்டுள்ளது. கிரேக்க மூக்குடன் பிறந்தவர்கள் மிகவும் திறமையானவர்கள் மற்றும் லாஜிக்கான சிந்தனைகளால் இயக்கப்படுகிறார்கள். அவர்கள் இயற்கையாகவே புத்திசாலிகள், எனவே நம்பகமானவர்கள். அவர்கள் எப்போதும் உங்கள் பின்னால் இருப்பார்கள் என்று நீங்கள் முழுமையாக நம்பலாம்.

ரோமன் மூக்கு
இவர்கள் உங்கள் கவனத்தை சிரமமின்றி தன் பக்கம் இழுக்கும் சக்தி கொண்டவர்கள். இந்த மூக்கைக் கொண்டவர்கள் மிகவும் தலைசிறந்தவர்கள் மற்றும் இயற்கையாகவே லட்சியம் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் வார்த்தைகளால் மற்றவர்களை பாதிக்க முடியும், மேலும் தாக்கத்தை ஏற்படுத்துவது எப்படி என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவர்களின் மேலாண்மை திறன்கள் நிச்சயமாக பாராட்டத்தக்கவை.



Click it and Unblock the Notifications











