For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழ்வில் வெற்றி பெற சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறிய ரகசியங்களை தெரிஞ்சுக்கணுமா? இத படிங்க..

|

வாழ்க்கை என்பது அனைத்து வகையான ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கியது. வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்திருப்பது கிடையாது. இந்த உண்மையை அனைவரும் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது வாழ்வில், பல்வேறு விதமான இன்னல்களை அனுபவித்திருப்பர். பிரச்சனைகள் அனைவருக்கும் ஒரே விதமாக ஏற்படுவது கிடையாது அல்லவா?

குடும்பம், நண்பர்கள், வேலை என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் பிரச்சனையானது ஏற்படுகிறது. பிரச்சனையே சந்திக்காத மனிதனும் கிடையாது, பிரச்சனையை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கும் மனிதனும் கிடையாது. இது தான் நிதர்சனமான உண்மை.

MOST READ: சீனா கண்டுபிடிச்ச கொரோனா தடுப்பூசி நவம்பரில் வந்துவிடுமாம்.. ஆனா அது இந்தியாவுக்கு கிடைக்குமா?

சரி, வாழ்வில் ஏதோ ஒரு பிரச்சனை குறுக்கிடுகிறது. இப்போது என்ன செய்யலாம்? பிரச்சனையை கண்டு பயந்து ஒதுங்கி சென்றுவிடலாமா? இது சரியான முடிவா? இல்லை. வாழ்வில் குறுக்கிடும் ஒவ்வொரு பிரச்சனையையும் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். பிரச்சனையை கண்ட பயந்து ஓடுவது சரியான முடிவாக இருக்காது. பிரச்சனையை எதிர்கொண்டால் மட்டுமே அதனை கடந்து செல்ல முடியம். எப்பெருமாமே இதனை பற்றி விரிவாக கூறியுள்ளார். ஆம், வாழ்க்கை, இலட்சியத்தில் நாம் வெற்றி பெற உதவக்கூடிய சில ரகசியங்களை சிவபெருமானே எடுத்துரைத்துள்ளார்.

MOST READ: ஆப்பிளோட முழு சத்தும் கிடைக்கணுமா? அப்ப அத இந்த டைம்-ல சாப்பிடுங்க...

தேவி பார்வதியுடன் சிவபெருமான் ஓர் ஆழ்ந்த உரையாடலை மேற்கொண்டிருந்தார். அப்போது, பார்வதி தேவிக்கு, வெற்றிக்கான ரகசியங்களாக சிவபெருமான் கூறியவற்றை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். அனைவருக்கும் உதவக்கூடிய சில ரகசியங்களை இப்போது நாமும் தெரிந்து கொள்வோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன உறுதி வேண்டும்

மன உறுதி வேண்டும்

நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் விடாமுயற்சியும், உறுதிப்பாடும் இருந்தாலே போதும், அவற்றை சிறப்பாக செய்து முடித்து விடலாம். நீங்கள் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் நல்ல முறையில் நடந்தேற வேண்டுமென்றால், மனதில் நிலையான உறுதி இருக்க வேண்டியது அவசியம். மன உறுதி ஒன்றை தவிர வேறொன்றும் தேவையில்லை.

அடுத்தவர் பேச்சை தவிர்க்கவும்

அடுத்தவர் பேச்சை தவிர்க்கவும்

பெரும்பாலானோர், சமூகத்திற்காகவும், சுற்றத்திற்காகவும் வாழ்கின்றனர். நாம் தான் இந்த சமூகம். சமூகம் தான் நாம். சுற்றியிருப்போர் பேச்சை கேட்டு நம்மை மாற்றி கொள்வது சரியல்ல. உங்களை பற்றி பிறர் தவறாக பேசுகிறார்கள் என்றால், அவர்கள் அப்படிதான் என்று விட்டுவிட வேண்டும். தவறான மனிதர்கள், தவறாக தான் பேசுவார்கள். அவர்களை நம்மால் திருத்த முடியாது. எனவே, அவர்கள் தவறாக பேசுகிறார்கள் என்பதற்காக உங்களது கடின உழைப்பையும், முயற்சியையும் வீணாக்குவது எந்த விதத்தில் நியாயம்.

ஆசிரியர்களை எப்போதும் மதியுங்கள்

ஆசிரியர்களை எப்போதும் மதியுங்கள்

நமக்கு நல்லறிவை வழங்கியது நமது ஆசிரியர்கள் தானே. பொன்னையும், பொருளையும் யார் வேண்டுமானாலும் கொடுக்க முடியும். ஆனால். நல்லறிவை கொடுப்பது ஆசிரியர்கள் மட்டும் தான். எனவே, நமக்கு கல்வி புகட்டிய ஆசிரியர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். நல்லறிவு ஒன்று போதும், நம்மை எந்த இடத்திற்கும் அழைத்து சென்றுவிடும்.

சீரான மனநிலை வேண்டும்

சீரான மனநிலை வேண்டும்

உங்களது மனதை காட்டிலும் சிறந்த சக்தி இவ்வுலகில் இல்லை என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். உங்கள் மனதில் தோன்றிய செயலை எந்தவொரு மாற்றுக் கருத்துமின்றி செயல்படுத்துவதன் மூலம், உங்களது வாழ்வையும், ஏன், உலகையும் கூட மாற்றிட முடியம். எனவே, பிறர் கருத்துக்களால் உங்களது மனதை அசுத்தப்படுத்திட அனுமதிக்காதீர்கள். இந்த உலகிலேயே நீங்கள் தான் சிறந்த மனிதர் என்பதை முதலில் நீங்கள் நம்ப வேண்டம். மேலும், தேவைக்கு அதிகமாக ஒருபோதும் யோசிக்கவும் கூடாது.

சுய கட்டுப்பாடு தேவை

சுய கட்டுப்பாடு தேவை

பிறர் ஒருவரால் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளால், சுய கட்டுப்பாட்டை இழக்கும் ஒருவரை போன்ற பலவீனமாக நபர் யாரும் இருக்க முடியாது. சொல்ல போனால், மனிதர்களால் மட்டுமின்றி. சில விஷயங்களால் கூட ஒருவர் தன்னை மறந்து தடுமாறுவர். அதனால், தாங்கள் நினைத்த ஒன்றை சரியான வழியில் மேற்கொள்ள முடியாமல் போய்விடும். எனவே, உங்களை பலவீனப்படுத்தும் எந்தவொரு செயல்களையும், மனிதர்களையும் எப்போதும் அனுமதிக்காதீர்கள். எந்தவொரு சூழலிலும், சுய கட்டுப்பாடு கொண்டு ஒருவரே அனைத்திலும் வெற்றி பெறுவர்.

நன்கு சாப்பிடவும்

நன்கு சாப்பிடவும்

நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை நன்கு அறிந்து தான் சாப்பிடுகிறோம். எனவே, எப்போதும் ஆரோக்கியமான உணவை சாப்பிட முயற்சியுங்கள். ஆரோக்கியமற்ற உணவுகளை ஒருபோதும் சாப்பிட வேண்டாம். உங்களது வாழ்க்கை இலட்சியத்தை அடைய, உங்களது உடலுக்கு ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே, அந்த ஆற்றல் கிடைக்க வேண்டுமென்றால், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தான் சாப்பிட வேண்டும்.

சிவபெருமான் கூறியுள்ள இத்தகைய சிறு சிறு வாழ்க்கை ரகசியங்களை பின்பற்றும் பட்சத்தில் அனைவருமே வாழ்வில் சுலபமாக வென்றிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Secrets Of Success By Lord Shiva In Tamil

Here are some secrets of success by lord shiva in tamil. Read on...