Just In
- 6 min ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
- 9 hrs ago
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- 10 hrs ago
நீங்க விரும்பி சாப்பிடும் இந்த பொருட்கள் உங்களுக்கு சீக்கிரம் வழுக்கை வர வைக்குமாம்... ஜாக்கிரதை!
- 12 hrs ago
உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் அளவுக்கதிகமா கொலஸ்ட்ரால் இருக்குனு அர்த்தமாம்... உஷார்!
Don't Miss
- News
ராணி எலிசபெத் கொடுத்த மது விருந்தை மறுத்தவன் நான்.. அமைச்சர் துரைமுருகன் கலகல பேச்சு
- Movies
ஐக்கிய அரபு அமீரக அமைச்சரை சந்தித்த கமல்ஹாசன்.. டிரண்டாகும் போட்டோ!
- Sports
மிரட்டும் மழை.. உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு..? இந்தியாவின் பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Finance
ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. உங்க சகவாசமே வேண்டாம் என வெளியேற திட்டமிடும் சிஸ்கோ!
- Automobiles
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Technology
10 மாதம் ஆற்றில் கிடந்த ஐபோன்: உரிமையாளரை தேடிச் சென்ற அதிசியம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
கருட புராணத்தின் படி ஒருவரை மரணம் நெருங்கிவிட்டதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
மனிதனாக பிறந்த அனைவருக்குமே மரணம் குறித்த பயம் எப்போதுமே இருக்கத்தான் செய்யும். செல்வந்தராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், ஆரோக்கியமானவராக இருந்தாலும், பலவீனமானவராக இருந்தாலும், மரண பயம் என்பது அனைவருக்கும் பொதுவானது. இந்த தொடர்ச்சியான கவலை பெரும்பாலும் தனடோபோபியா (மரண பயம்) மூலம் பாதிக்கப்படுவதற்கு வழிவகுக்கிறது.
மரணமில்லா வாழ்க்கை என்பது சாத்தியமில்லாத ஒன்று. பெரும்பாலான மக்கள் நல்ல செயல்களும் பாவங்களும் தங்கள் அடுத்த பிறப்பை பாதிக்கின்றன என்ற உண்மையை நம்புவதன் மூலம் வாழ்கின்றனர்; மிக முக்கியமாக சொர்க்கம் அல்லது நரகத்திற்கான பாதையை நம்புபவர்கள் அனைத்து மதத்திலும் உள்ளனர். இந்து புராணங்களில் முக்கிய புராணமான கருட புராணம் மரணம் குறித்த சில விஷயங்களை விளக்குகிறது. மரணம் நெருங்குவதை உணர்த்தும் அறிகுறிகளாக கருட புராணம் கூறும் அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பசியிழப்பு
மரணம் நெருங்கிய ஒருவரை எதுவும் அவர்களை உற்சாகப்படுத்தாது, அவர்களுக்கு பிடித்த உணவின் வாசனை கூட அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காது. வழக்கமாக மக்கள் சொல்வார்கள், இதுபோன்ற நோய் அறிகுறி வழக்கமான நோயின் போது சாதாரணமானது. ஆனால், மனதிலிருந்து எந்த உணர்வுமின்றி உண்ணக்கூடிய பொருட்களை உட்கொள்வதை நீண்ட காலமாக மறுப்பது எச்சரிக்கையாக இருப்பதற்கான அறிகுறியாகும். கட்டாயமாக உணவளிப்பது கூட அவர்களின் விருப்பத்தை உள்ளிருந்து பெற உதவாது.

அதீத உடல் பலவீனம்
மரணம் நெருங்கியவர் உணவு அல்லது திரவங்களை உட்கொள்வதை தெளிவாக நிராகரிப்பார், இறுதியில் இது ஆற்றல் இல்லாமைக்கு வழிவகுக்கும், இது தலை அல்லது கைகளை தூக்குவது அல்லது சாய்ந்து படுப்பது போன்ற அடிப்படை வேலைகளைக் கூட தடுக்கலாம். அவர்களின் தொண்டையில் திரவங்களை உறிஞ்சுவதற்கு கூட அவர்களுக்கு ஆற்றல் இல்லாமல் இருக்கலாம்.
MOST READ: ஆண்களின் விந்தணுக்கள் தரமாக இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? உங்களோடது எப்படி?

விழிப்புணர்வு இழப்பு
ஒருவரின் உடல் தொடர்ந்து செயல்படாத போது, தூக்கமின்மை அல்லது குழப்பமான தூக்க முறைகள் மிகவும் இயல்பானதாகிவிடும். ஆனால் எதற்குமே பதிலளிக்காதது ஒரு பயங்கரமான அறிகுறியாகும். மரணம் நெருங்கும்போது, ஒரு நபர் மனித இருப்பு அல்லது வாழ்க்கையின் எந்த வடிவத்திற்கும் உணர்ச்சியற்றவராக தோன்றலாம். எதுவும் இல்லை என்பது போல் அவர்கள் மக்களை பார்க்கக்கூடும்.

யோசிக்காமல் பேசுவது
மரணம் நெருங்கும்போது எப்போதாவது புன்னகைக்கும் அல்லது நிகழ்காலத்துடன் தொடர்பில்லாத ஒன்றை உச்சரிப்பார்கள். அவர்கள் முற்றிலும் ஆதாரமற்ற ஒன்றைப் பற்றி பேசலாம் அல்லது கடந்த கால விஷயங்களை நினைவில் வைத்துக்கொண்டு, அவர்களை அறியாமலே பேசிக்கொண்டே போகலாம். இந்த நேரம், மூளைக்கு இரத்த ஓட்டம் குறைவாக கிடைக்கும் நேரமாகும்.

இலேசாக உணர்வது
மரணத்தை நெருங்கிவிட்ட ஒருவர் எந்தவிதமான கனத்தையும் உணர மாட்டார் மற்றும் இறகு போல லேசாக உணர்வார். அவர்களைச் சுற்றியுள்ள எதுவும் அவர்களை யதார்த்தத்திற்கு அழைத்துச் செல்லவில்லை, அவர்கள் மாற்று உலகத்தை நம்பத் தொடங்குகிறார்கள்.

உலகத்திலிருந்து துண்டித்துக் கொள்வது
நீண்டகால பராமரிப்பில் உள்ள ஒருவர் தன்னை வெளி உலகத்திலிருந்து துண்டித்துக்கொள்வது வழக்கம், ஆனால் எப்போதாவது அவர்கள் மீண்டும் உள்ளே வருவார்கள். ஆனால், அன்புக்குரியவர்களுடன் கூட தொடர்பு கொள்ள மறுப்பது அவர்களுக்கு தேவையான ஆதரவை அந்த நபர் கடைசியாக எடுத்துக்கொண்டதற்கான அறிகுறியாக இருக்கலாம்.