For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாணக்கிய நீதி படி உங்களின் இந்த ரகசியங்களை வெளியே கூறினால் உங்க வாழ்க்கை அவ்வளவுதானாம் தெரியுமா?

சாணக்கிய நீதி படி உங்களின் இந்த ரகசியங்களை வெளியே கூறினால் உங்க வாழ்க்கை அவ்வளவுதானாம் தெரியுமா?

|

இந்தியாவை செதுக்கியதில் சாணக்கியரின் பங்கு என்பது மிகவும் முக்கியமானது. ஆசிரியர், தத்துவ மேதை, பொருளாதார அறிஞர், ராஜகுரு, எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவராக சாணக்கியர் இருந்தார். அனைத்திற்கும் மேலாக தான் ஏற்ற அனைத்து துறையிலும் நிபுணராக விளங்கியதுடன் தலைமைத்துவத்துடன் இருந்தார்.

Secrets of Chanakya For Happy Life

பாரம்பரியமாக கௌடில்யர், விஷ்ணு குப்தா என அடையாளம் காணப்படுகிறார். இவரின் சாணக்கிய நீதியும், அர்த்தசாஸ்திரமும் இந்த அரசியல் வரலாற்றின் முக்கியமான நூல்களாகும். அவரது எண்ணங்களும், சிந்தனைகளும் அனைத்து மக்களின் வாழ்க்கையிலும் நன்மையை பயக்கக்கூடியது. உலகின் அனைத்து விஷயங்களின் மீதும் இவருக்கென தனிப்பார்வை இருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மகிழ்ச்சிக்கான ரகசியங்கள்

மகிழ்ச்சிக்கான ரகசியங்கள்

புத்திக்கூர்மை வாய்ந்த சாணக்கியர் அவர் வாழ்க்கையில் நிறைய விஷயங்களைப் பற்றி எழுதியுள்ளார். நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பினால் யாருடனும் விவாதிக்கக்கூடாத சில விஷயங்கள் உள்ளது என்று சாணக்கியர் கூறியுள்ளார். அவை என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

பண இழப்பு

பண இழப்பு

மற்றவர்களிடம் கலந்துரையாட வேண்டாம் என்று சாணக்கியர் கூறும் முதல் விஷயம் நிதி நெருக்கடி. நீங்கள் நிதி இழப்பை சந்திக்கிறீர்கள் என்றால் அதனை உங்களுக்குள்ளேயே வைத்திருங்கள். உங்களின் பண இழப்பையும், வறுமையையும் ஒருபோதும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

MOST READ: வெறும் வயிற்றில் செய்யும் இந்த செயல்கள் மற்றும் சாப்பிடும் உணவுகள் உங்கள் உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்

ஏன் சொல்லக்கூடாது?

ஏன் சொல்லக்கூடாது?

இதற்குக் காரணம், உங்கள் பணப் பிரச்சினையைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ளும்போது, அவர்கள் ஒருபோதும் உங்களுக்கு உதவ மாட்டார்கள், அவர்கள் ஆதரவைக் காட்டினாலும் அது போலியானதாகவே இருக்கும். சாணக்கியரை பொறுத்தவரை சமூகத்தில் உள்ள ஏழைகள் மதிக்கப்படுவதில்லை. எனவே, ஒருவர் தனது வறுமையை தனக்குத்தானே வைத்துக் கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட பிரச்சினைகள்

தனிப்பட்ட பிரச்சினைகள்

சாணக்கியரின் கூற்றுப்படி எப்போதும் ஒரு ரகசியமாக வைக்க வேண்டிய இரண்டாவது விஷயம் உங்களின் தனிப்பட்ட பிரச்சினைகள். சாணக்கியர் கூறுகிறார், தங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நபர்கள் எப்போதும் கேலி செய்யப்படுவார்கள், அவமதிக்கப்படுவார்கள். உங்களுக்கு பின்னால் அவர்கள் சிரிப்பார்கள்.

மனைவியின் நடத்தை

மனைவியின் நடத்தை

நீங்கள் ரகசியமாக வைத்துக்கொள்ள மூன்றாவது விஷயம் உங்கள் மனைவியின் தன்மையைப் பற்றியது. இதனை ரகசியமாக வைத்திருப்பவர்கள் வாழ்க்கையில் புத்திசாலிகளாக அறியப்படுவார்கள். மற்றவர்களுக்கு முன்னால் தங்கள் மனைவியை பற்றி தேவையில்லாமல் பேசுகிறவர்கள் அவர்கள் விரும்பாத சில விஷயங்களையும் தவறுதலாக கூறிவிட வாய்ப்புள்ளது. இது அவர்கள் உறவுக்குள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

MOST READ: வாஸ்து சாஸ்திரத்தின் படி இந்த சமையலறை தவறுகள் உங்கள் வாழ்க்கையில் தீராத துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம்

ஏழைகளால் அவமதிக்கப்படுவது

ஏழைகளால் அவமதிக்கப்படுவது

எப்போதும் ஒரு ரகசியமாக இருக்க வேண்டிய நான்காவது விஷயம், கீழ் நிலையில் இருப்பவர்கள் அல்லது சமூகத்தின் புறக்கணிக்கப்பட்டவர்களால் அவமதிக்கப்பட்டதை ஆகும். இதுபோன்ற ஒரு சம்பவத்தை நீங்கள் பகிர்ந்து கொண்டால், மக்கள் உங்களை கேலி செய்யலாம் என்று சாணக்கியர் நினைத்தார். இது இறுதியில் உங்கள் பெருமைக்கும் ஈகோவிற்கும் தீங்கு விளைவிக்கும். இதனால் உங்கள் தன்னம்பிக்கையை இழக்க நேரிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secrets of Chanakya For Happy Life

According to Chanakya Niti, you should not discuss with anyone if you want to lead a happy life.
Desktop Bottom Promotion