For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் அந்தப்புர ரகசியங்கள்... அதிர்ச்சியாகாம படிங்க...!

இந்தியா வரலாறு ஏராளாமான மன்னர்களையும், அரசிகளையும் கண்டுள்ளது. இந்தியாவின் மன்னர்கள் வெளிப்படையாக வீரத்துடன் இராஜ்ஜியத்திற்காக போரிட்டனர்.

|

இந்தியா வரலாறு ஏராளாமான மன்னர்களையும், அரசிகளையும் கண்டுள்ளது. இந்தியாவின் மன்னர்கள் வெளிப்படையாக வீரத்துடன் இராஜ்ஜியத்திற்காக போரிட்டனர். தங்கள் இராஜ்ஜியத்தின் மக்களுக்காக உழைத்தனர், தங்கள் பெருமையை உலகிற்கு பறைசாற்ற வானுயர்ந்த அரண்மனைகளையும், கோவில்களையும் கட்டினர். இருப்பினும் பெரும்பாலான அரசர்களின் தனிப்பட்ட வாழ்க்கை புதிரானதாகவே இருந்தது.

Secrets of Ancient Indian Kings

உண்மையில் அவர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் நீண்ட காலமாக தங்கள் ரகசியங்களை மறைத்து வைத்திருந்தார்கள், இருப்பினும், அரச சுவர்களுக்குள் சில உளவாளிகள் இருந்தனர், அவர்கள் அனைத்தையும் அறிந்தவர்களாக இருந்தார்கள். அவர்கள் தங்கள் அரசர்களின் ரகசியங்களை நாடு முழுவதும் அறியும்படி செய்தனர். அவ்வாறு வெளிவந்த சில அதிர்ச்சியை ஏற்படுத்தும் அரச ரகசியங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மகாராஜா கிஷன் சிங், பாரத்பூர்

மகாராஜா கிஷன் சிங், பாரத்பூர்

ராஜஸ்தானை சேர்ந்த பல பிரபுக்கள் உலக மக்களால் புகழப்படும் விதத்தில் வாழ்ந்து வந்தனர். ஆனால் பாரத் பூரை சேர்ந்த மகாராஜா கிஷன் சிங் தன்னுடைய விசித்திரமான குணம் மற்றும் மோசமான தன்மையால் பிரபலமானவராக இருந்தார். அவர் 40 பெண்களை முறைப்படி திருமணம் செய்து கொண்டு அவர்களை தலைமை ராணியாக வைத்திருந்தார்.

கிஷன் சிங்கின் விசித்திர குணம்

கிஷன் சிங்கின் விசித்திர குணம்

திவான் ஜராமணி தாஸ் தனது "மகாராஜா" புத்தகத்தில் கிஷன் சிங்கின் பைத்தியக்காரத்தனத்தின் ஒரு அத்தியாயத்தை கூறியுள்ளார். கிஷன் சிங் நீச்சலில் மிகவும் ஆர்வம் கொண்டவர், தனது ஆர்வத்தை பூர்த்தி செய்து கொள்ள அவர் எதையும் செய்ய தயாராக இருந்தார். அதனால் பிங்க் மார்பிள் கற்களால் நீச்சல் குளம் அமைத்தார். மேலும் அதற்கு சந்தன கட்டைகளை கொண்டு படி அமைத்தார்.

குளிக்கும் முறை

குளிக்கும் முறை

இவர் நீச்சல் குளத்திற்கு வரும்போது அவரது மனைவிகள் உடையின்றி அவரை வரவேற்க வேண்டும். ஒவ்வொரு படிக்கட்டிலும் ஒவ்வொரு ராணியுடன் அவர் விளையாடுவார். அதுமட்டுமின்றி இரவில் விளக்குகள் அணைக்கப்பட்ட அறையில் ராணிகள் மெழுகுவர்த்தியுடன் நடனம் ஆட வேண்டும். எந்த ராணியின் மெழுகுவர்த்தி கடைசியாக அணைக்கிறதோ அவர்தான் அன்று இரவு மகாராஜாவுடன் தூங்க முடியும். ஆனால இவர் 29 வயதிலேயே இறந்து விட்டார்.

MOST READ: 900 பேரை கொடூரமாக கொன்ற இந்தியாவின் ஆபத்தான தொடர் கொலைகாரன்... இரத்தத்தை உறையவைக்கும் வரலாறு...!

ஃபிரூஸ் ஷா துக்ளக்கின் ரகசியம்

ஃபிரூஸ் ஷா துக்ளக்கின் ரகசியம்

1354 ஆம் ஆண்டில், ஃபிரூஸ் ஷா துக்ளக்கின்அரண்மனை வளாகம் ஹரியானாவின் ஹிசாரில் கட்டப்பட்டது. ஆட்சியாளர் ஃபிரூஸ் ஷா துக்ளக் தனது துணை குஜ்ரிக்காக இதைக் கட்டியிருந்தார். இந்த அரச குடியிருப்பு குஜ்ரி மஹால் என்று ஏன் அழைக்கப்படுகிறது என்பதற்குப் பின்னால் உள்ள காரணம் இதுதான்.

ஃபிரூஸ் ஷா துக்ளக்கின் காதல்

ஃபிரூஸ் ஷா துக்ளக்கின் காதல்

ஃபிரூஸ் ஷா துக்ளக் மன்னராவதற்கு முன் இளவரசராக இருந்தபோதே இந்த சம்பவம் நடந்தது. அவருக்கு வேட்டையாடுவதில் அதிக ஆர்வம் இருந்தது. அவர் வேட்டையாடும் காட்டிற்குள் உள்பகுதியில் தங்களது குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள் வசிக்கும் இடம் இருந்தது. குஜ்ரி என்ற பெண் தினமும் அங்கு வந்து பால் விற்று தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். ஃபிரூஸ் ஷா இங்குதான் குஜ்ரியைக் கண்டு காதலில் விழுந்தார்.

குஜ்ரி மஹால்

குஜ்ரி மஹால்

அவரை சந்திப்பதற்காகவே ஃபிரூஸ் ஷா அந்த வனப்பகுதிக்கு அடிக்கடி செல்லத் தொடங்கினார். விரைவிலேயே குஜ்ரியும் அவரை காதலிக்கத் தொடங்கினார். ஃபிரூஸ் ஷா டெல்லிக்கு தன்னுடன் வந்து அரியணையில் அமருமாறு கேட்டபோது குஜ்ரி அதற்கு மறுத்துவிட்டார். எனவே அவரை சந்திக்க ஹிசார் நகரில் குஜ்ரி மஹாலை கட்டத் தொடங்கினார். மேலும் அதனை சுற்றி தனக்கும் ஒரு அரண்மனையைக் கட்டிக்கொண்டார்.

MOST READ: பெண்களின் கன்னித்தன்மை போனவுடன் அவர்களின் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

மகாராணா கும்பா, ராஜஸ்தான்

மகாராணா கும்பா, ராஜஸ்தான்

வரலாற்றில் சுட்டிக்காட்டியுள்ளபடி, 1443 ஆம் ஆண்டில், கும்பல்கரின் மகாராணாவான ராணா கும்பா, கும்பல்கர் கோட்டையின் கோட்டைச் சுவர்களைக் கட்டும் முயற்சியில் முதலில் தோல்வியுற்றார். அதன்பின் அவரின் ஆன்மீககுரு மனித பலி கொடுக்கும்படி ரகசியமாக அறிவுறுத்தினார். வெட்டப்படும் நபரின் தலை விழும் இடத்தில் சுவர்களைக் கட்டவும், உடல் விழும் இடத்தைச் சுற்றி கோட்டையும் கட்டவும் கூறப்பட்டது. கோட்டைச் சுவர்களுக்கு வழி வகுக்க அவர் ஆயிரக்கணக்கான ஆண்களை ரகசியமாகக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

ஷாஜகான்

ஷாஜகான்

இந்தியாவின் ஆக்ராவில் உள்ள புகழ்பெற்ற கல்லறை தாஜ்மஹால், ஒரு முகலாய ஆட்சியாளரான ஷாஜகானின் முடிவில்லாத அன்பைக் குறிக்கும் வணக்கத்தின் ஒரு அடையாளமாக உள்ளது. ஆனால் இது பிரசவத்தால் ஏற்படும் மரணத்தின் அடையாளமாகும் என்பது பலரும் அறியாதது.

MOST READ: இந்த குணம் இருப்பவர்களை ஒருபோதும் காதலிக்காதீங்க... இவங்க செக்ஸ் அடிமையா இருக்க வாய்ப்பிருக்கு...!

மும்தாஜின் மரணம்

மும்தாஜின் மரணம்

மும்தாஜின் மரணத்தின் பின் இருக்கும் உண்மை என்னவெனில், ஷாஜகானுடன் தனது 14 வது குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு, மும்தாஸ் தனது 39 வயதில் இறந்தார். மும்தாஜ்தான் ஷாஜகானுக்கு மிகவும் பிடித்த மனைவியாக இருந்தார், அவரின் அழகால் ஷாஜகான் மும்தாஜை சுற்றியே இருந்தார். இதனால் அவருக்கு ஒருபோதும் மும்தாஜைத் தவிர வேறு எந்த மனைவியுடனும் குழந்தை பிறக்கவில்லை. குறுகிய காலத்தில் மீண்டும் மீண்டும் குழந்தை பிறந்ததால் ஏற்பட்ட சிக்கல்களால் அவர் இறந்தார். ஆனால் அவர் உடனடியாக தனது உறவினர்களில் ஒருவரை மணந்தார், அவரது மனைவி இறந்த பிறகு அவரது துக்கத்தை இதன்மூலம் தணித்தார். அதற்குப்பிறகு அவர் 8 பெண்களை மணந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secrets of Ancient Indian Kings

Read to know the never heard before secrets of Indian kings
Desktop Bottom Promotion