For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ணனுக்கும்,அர்ஜுனனுக்கும் இருந்த முன்ஜென்ம பகை என்ன தெரியுமா? அர்ஜுனன் பிறந்ததே கர்ணனை கொல்லத்தான்

நர-நாராயணா அவதாரத்தின் நோக்கமே பூமியில் பேரழிவை ஏற்படுத்தி பல அதர்மங்கள் புரிந்த சகஸ்ரகவச்சன் என்னும் அரக்கனை வதைப்பதுதான்.

|

இந்து புராணங்களில் கூறியுள்ளபடி சொர்க்கலோகத்தில் பல அப்சரஸ்கள் இருந்தனர், அதில் மிகவும் முக்கியமானவர் ஊர்வசி, சொல்லப்போனால் அனைத்து அப்சரஸ்களையும் விட அழகில் சிறந்தவர் ஊர்வசிதான் என்று கூறப்படுகிறது.

Secrets behind Apasara Urvashi birth

ஊர்வசியின் பிறப்பிற்கு பின்னால் பல சுவாரஸ்யங்களும், ரகசியங்களும் உள்ளது. அதன்படி ஊர்வசி நர-நாராயணா என்பவர்களால் உருவாக்கப்பட்டவர். இவர்கள்தான் அடுத்த பிறவியில் அர்ஜுனனாகவும், கிருஷ்ணராகவும் பிறந்ததாக புராணங்கள் கூறுகிறது. இந்த பதிவில் நர-நாராயணா பற்றியும், ஊர்வசியின் பிறப்பு பற்றியும் விரிவாக பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நர-நாராயணா

நர-நாராயணா

நர-நாராயணா என்பவர்கள் தர்மத்தை பாதுகாப்பதற்காக தோன்றிய ஜோடி அவதாரங்கள் என்று நம்பப்படுகிறது. நர-நாராயணா அவதாரத்தின் அர்த்தம் என்னவெனில் இதில் நர என்பது மனித ஆன்மாவையும், நாராயணா என்பது தெய்வீக சக்தியையும் குறிக்கிறது. மனிதனும், கடவுளும் இணைந்து தர்மத்தை பாதுகாக்க தோன்றிய அவதாரம்தான் இவர்கள்.

பத்ரிநாத்

பத்ரிநாத்

மகா புனிதஸ்தலமான பத்ரிநாத் நர-நாராயண அவதாரத்தின் தோற்றத்துடன் தொடர்புடையது. விஷ்ணு புராணத்தின் படி நர-நாராயணாதான் தங்களின் அடுத்த பிறவியில் அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணராக பிறந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் மறுபிறவி எடுத்ததற்கு வலிமையான காரணம் இருந்தது.

பகவத்கீதை

பகவத்கீதை

குருஷேத்திர போரில் தயங்கி நின்ற அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் வழங்கிய உபதேசம்தான் பகவத்கீதை ஆகும். அர்ஜுனனுக்கு கீதா உபதேசம் செய்த போது நாம் இருவரும் கடந்த ஜென்மத்தில் நர-நாராயணாவாக பிறந்ததையும், தர்மத்தை பாதுகாப்பதுதான் தங்களது கடமையாக இருந்ததையும் கூறினார். அந்த ஜென்மத்தின் பணியை இந்த ஜென்மத்தில் தொடர வேண்டும் என்று அர்ஜுனனிடம் கூறினார்.

MOST READ: இந்த 5 ராசிக்காரங்கள காதலிக்கிறவங்க ரொம்ப பாவம் ஏன் தெரியுமா?

கடந்த ஜென்மம்

கடந்த ஜென்மம்

அர்ஜுனனும், கிருஷ்ணரும் பூமியில் அவர்களுடன் முந்தைய அவதாரத்தில் அவர்கள் நர-நாராயணா என்னும் முனிவர்களாக பிறந்தனர். அவர்கள் புனித இடமான பத்ரிநாத்தில் கடுமையான தவம் செய்தனர்.

சிவபெருமான் அவர்களின் தவத்தை பாராட்டினார்

சிவபெருமான் அவர்களின் தவத்தை பாராட்டினார்

நர-நாராயணாவின் தவத்தை மெச்சிய சிவபெருமான் அவர்களின் மதிப்பை உலகத்திற்கு காட்ட விரும்பினார். எனவே தன்னுடைய திவ்ய அஸ்திரமான பாசுபத அஸ்திரத்தை தவம் செய்து கொண்டிருந்த நர-நாராயணா முனிவர்கள் மீது வீசினார். ஆனால் பாசுபத அஸ்திரம் அவர்கள் அருகில் வந்தவுடன் தனது சக்தியை இழந்தது. இதன்மூலம் அவர்கள் இருவரும் நிர்விகல்ப சமாதி என்னும் உயர்ந்த நிலையை அடைந்ததாக சிவபெருமான் அறிவித்தார்.

சகஸ்ரகவச்சன்

சகஸ்ரகவச்சன்

நர-நாராயணா அவதாரத்தின் நோக்கமே பூமியில் பேரழிவை ஏற்படுத்தி பல அதர்மங்கள் புரிந்த சகஸ்ரகவச்சன் என்னும் அரக்கனை வதைப்பதுதான்.

MOST READ: பேய்கள் பற்றி ஒவ்வொரு மதத்திலும் கூறப்பட்டுள்ள ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?

கர்ணன்

கர்ணன்

நர-நாராயணாவால் சகஸ்ரகவச்சனை அழிக்க முடியவில்லை. அதற்கு காரணம் சூரியபகவான் அவனை பாதுகாத்ததுதான். எனவே தங்கள் அடுத்த பிறவியில் சகஸ்ரகவச்சனை நாங்கள் நிச்சயம் வதைப்போம் என்று நர-நாராயணா சபதம் எடுத்தனர். சகஸ்ரகவச்சன்தான் அடுத்த பிறவியில் கர்ணனாக பிறந்தார், அவரை குருஷேத்திர போரில் நர-நாராயணாவின் மறுபிறவிகளான அர்ஜுனனும், கிருஷ்ணரும் சேர்ந்து வதைத்தனர்.

இந்திரனின் சோதனை

இந்திரனின் சோதனை

நர-நாராயணாவின் தவத்தின் வலிமை அதிகரித்த போது இந்திரன் அதனை கண்டு அஞ்சினார். அவர்களின் தவத்தால் தனது பதவிக்கும், அரியணைக்கும் ஆபத்து ஏற்படலாம் என்று நினைத்தார். எனவே அவர்கள் இருவரையும் சோதிக்க நினைத்தார்.

தவத்தின் வலிமை

தவத்தின் வலிமை

நர-நாராயணாவின் தவத்தை கெடுக்க நினைத்த இந்திரன் தனது அவையில் இருந்த அனைத்து அப்சரஸ்களையும் அவர்களின் தவத்தை கெடுக்க அனுப்பி வைத்தார். ஆனால் அவர்கள் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.

ஊர்வசி

ஊர்வசி

அவர்களின் தவத்தின் வலிமையை கண்ட இந்திரன் அவர்களின் முன்தோன்றி தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இந்திரனை மன்னித்த நாராயணா இந்திரனின் அவைக்கு அனைவரையும் ஊர்வசியை பரிசாக வழங்கினார். இந்திரனின் அவையில் இருந்த அப்ஸரஸ்களில் ஊர்வசிதான் அழகில் சிறந்தவர் என்று பாகவத புராணம் கூறுகிறது.

MOST READ: வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் மோசமான விளைவுகள் என்னென்ன தெரியுமா?

மற்றொரு கதை

மற்றொரு கதை

ஊர்வசியின் பிறப்பு பற்றி மற்றொரு கதையும் உள்ளது. நாராயணா ஒரு மலரை எடுத்து தனது தொடையின் மீது வைத்தார், அந்த மலரில் இருந்து ஊர்வசி தோன்றினார். ஊர்வசி என்று அவருக்கு பெயர் வைக்க காரணம் அவர் தொடையில் இருந்து தோன்றியதுதான். சமஸ்கிருதத்தில் உரு என்றால் தொடை என்று அர்த்தம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secrets behind Apasara Urvashi birth

Read to know the interesting story behind apsara Urvashi's birth.
Story first published: Friday, July 26, 2019, 12:13 [IST]
Desktop Bottom Promotion