For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாதுக்கள் ஏன் நீளமான முடி வைத்திருக்கிறார்கள் தெரியுமா? அதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரிய

சாதுக்கள் அனைவருக்கும் இருக்கும் பொதுவான ஒரு ஒற்றுமை அவர்கள் அனைவரும் ஜடாமுடி என்னும் நீண்ட கூந்தலை வைத்திருப்பார்கள்.

|

அனைத்து மதங்களிலும் சாமியார்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு மதத்திலும் கடவுளுக்கு தங்களை அர்பணித்தவர்களுக்கு வெவ்வேறு பெயர்கள் உள்ளது. இந்து மதத்தை பொறுத்தவரை இவர்களுக்கு சாதுக்கள், பாபா, அகோரி, சந்நியாசி என்று பல பெயர்கள் உள்ளது. இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கடவுளுக்கு தங்களை அர்பணித்தவர்களாக இருப்பார்கள்.

Secret behind hairstyle of Sadhus

சாதுக்கள் பொதுவாக குங்குமநிற ஆடைகளை அணிவார்கள். இவர்கள் உலக ஆசைகளை துறந்து மோட்சத்திற்காக கடவுளுக்கு தங்களை அர்ப்பணித்து இருப்பார்கள். சாதுக்கள் அனைவருக்கும் இருக்கும் பொதுவான ஒரு ஒற்றுமை அவர்கள் அனைவரும் ஜடாமுடி என்னும் நீண்ட கூந்தலை வைத்திருப்பார்கள். இவர்களின் கூந்தலுக்கு பின்னால் இருக்கும் ரகசியத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாதுக்களின் சிகை அலங்காரம் குறித்த பழைய கருத்து

சாதுக்களின் சிகை அலங்காரம் குறித்த பழைய கருத்து

சாதுக்கள் தங்களை எதையும் கட்டுப்படுத்துவதை விரும்பமாட்டார்கள். இதன் ஒரு பகுதியாக அசாதாரணமான மற்றும் சுகாதாரமற்ற முறையில் முடியை வளர்க்கிறார்கள். இதுதான் பொதுக்கருத்தாக உள்ளது, ஆனால் இதற்கு பின்னால் பல ரகசியங்கள் உள்ளது.

சாதுக்களின் சிகை அலங்கார ரகசியம்

சாதுக்களின் சிகை அலங்கார ரகசியம்

சாதுக்கள் இப்படி நீண்ட முடி வளர்க்க நீண்ட காலம் எடுத்துக் கொள்வார்கள். இவ்வாறு வளர்ப்பதோ அல்லது இதனை பராமரிப்பதோ சிரமமானது மட்டுமல்ல வழிகளும் நிறைந்ததாகும். இவர்கள் முடிவெட்ட வேண்டுமென்று விரும்பினால் அதற்கு நீண்ட நேரத்தையோ செலவழிக்க வேண்டும். மேலும் இந்த முடி அவர்கள் தலையின் மேற்பரப்பில் பிரமிடு போன்ற தோற்றத்தை உண்டாக்கும்.

MOST READ: இந்த ராசிகளில் பிறந்தவங்க யாரையுமே நம்பமாட்டாங்களாம் தெரியுமா?

நீண்ட நாட்கள்

நீண்ட நாட்கள்

சாதுக்கள் ஒருமுறை ஒரு வடிவத்தில் தலையை சீவி விட்டால் பல மாதங்கள் அதேநிலையில் இருப்பார்கள். அவர்கள் தங்கள் துணிகளை துவைக்க மாட்டார்கள், தலையையும் கழுவ மாட்டார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தங்களின் இடுப்பு வரை முடியை வளர்த்திருப்பார்கள். இந்த சுமையை அவர்கள் சாகும்வரை சுமப்பார்கள்.

சிகை அலங்காரம் கூறுவது என்ன?

சிகை அலங்காரம் கூறுவது என்ன?

சாதுக்கள் இப்படி முடி வளர்ப்பது கூட ஒருவகை விரதம்தான். கும்பமேளாவின் பொது எண்ணற்ற வெளிநாட்டவர்கள் இதே சிகை அலங்காரத்துடன் கலந்து கொள்கிறார்கள். இது கடவுளின் அன்பை பெறுவதற்கு வழியாக இருப்பதாக சாதுக்கள் நம்புகிறார்கள். இந்த விரதம் அவர்களுக்கு மோட்சத்தை வழங்கும் என்பது சாதுக்களின் நம்பிக்கையாகும்.

MOST READ: பெண்களின் பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று மற்றும் ஏற்படுவதில்லை இந்த நோய்களும் ஏற்படுமாம்...!

ஆண் மற்றும் பெண் சாதுக்கள்

ஆண் மற்றும் பெண் சாதுக்கள்

ஆண் மற்றும் பெண் சாதுக்கள் இருவருமே ஒரே மாதிரியான சிகை அலங்காரத்துடன்தான் இருப்பார்கள். இவர்கள் இந்தியா முழுவதும் பரவி இருப்பார்கள். இதனை மற்ற நாட்டு மக்களும் பின்பற்றுகிறார்கள். 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வெளியில் இருந்து மக்கள் இதை ஒரு சிகை அலங்காரமாக எடுத்துக்கொள்வது நமது பண்டைய நாகரிகத்தின் ஒரு பகுதியாக பெரியதல்லவா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: hair style முடி
English summary

Secret behind hairstyle of Sadhus

Here we talking about the secret behind hairstyle of sadhus.
Story first published: Monday, September 23, 2019, 18:05 [IST]
Desktop Bottom Promotion