Just In
- 40 min ago
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- 1 hr ago
ஆண்களே! நீங்க 'அந்த' விஷயத்தில் இப்படி செயல்பட்டால்... இருவரும் இருமடங்கு உச்சக்கட்டத்தை அடையலாமாம்!
- 2 hrs ago
வாஸ்துப்படி வீட்டின் எந்த திசையில் குப்பை தொட்டியை வைக்க வேண்டும் தெரியுமா?
- 2 hrs ago
உங்க உணவுகளை சமைக்க இந்த 4 எண்ணெய்களில் ஒன்றை உபயோகித்தால் எடை வேகமாக குறையுமாம்...!
Don't Miss
- Movies
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
- Sports
19வது ஓவர் வரை கெத்து காட்டிய இந்தியா.. கடைசி 6 பந்தில் 27 ரன்கள்.. ஏமனாக மாறிய ஆர்ஸ்தீப் சிங்
- News
"சீனே மாறிடுச்சே".. ஒருத்தருமே கிட்ட இல்லயாம்.. தனித்து விடப்பட்டாரா சசி.. காரணமே "அவர்"தான் போலயே
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Finance
இந்தியா-வை தேடி வரும் உலக நாடுகள்.. டாலர்-க்கு செக்.. அமெரிக்கா திண்டாட்டம்..!
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
Scorpio Horoscope 2023: விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2023 எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
2023 ஆம் ஆண்டு வரப் போகிறது. இந்த புதிய ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள அனைவருமே ஆவலாக இருப்போம். ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் 2023 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று ஏற்கனவே கணித்து கூறப்பட்டுள்ளது. நீங்கள் விருச்சிக ராசியா? உங்களுக்கு 2023 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?
கீழே விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் ஆரோக்கியம், தொழில் வாழ்க்கை, நிதி நிலை, கல்வி, திருமண வாழ்க்கை போன்றவை எப்படி இருக்கும், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உள்ளதா போன்றவை குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் எம்மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

2023-ல் காதல்
2023-ல் விருச்சிக ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையைப் பற்றி கூற வேண்டுமானால், சற்று ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாகவே இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் குரு 5 ஆவது வீட்டில் இருப்பதால், திருமணமாகாதவர்களின் வாழ்வில் ஒருவர் வர வாய்ப்புள்ளது. அதுவே ஏற்கனவே காதலித்து வந்தால், அந்த உறவு வலுவடையும். குறிப்பாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் உங்கள் உறவில் காதல் வலுவடையும் மற்றும் காதல் அதிகரிக்கும். காதலிப்பவர்கள் திருமணம் செய்ய வாய்ப்புள்ளது. ஏப்ரல் வரை நிலைமை சாதகமாகவே இருக்கும். குரு மேஷ ராசிக்கு செல்லும் போது படிப்படியாக காதல் உறவில் பிரச்சனைகள் உருவாகத் தொடங்கும். மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையே காதல் உறவுகளில் அதிக பிரச்சனைகள் காணப்படலாம். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் அன்பு நிறைந்த மாதங்களாக இருக்கும்.

2023-ல் தொழில் வாழ்க்கை
2023-ல் விருச்சிக ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கையைப் பற்றி கூற வேண்டுமானால், சனியின் பார்வை உங்களை நிறைய முயற்சிகளை எடுக்கத் தூண்டும். ஆனால் அதை ஒழுக்கமான முறையில் செய்தால், வெற்றி பெற்று, தொழில் வாழ்வில் திடமாக இருப்பீர்கள். 2023 ஆம் ஆண்டின் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் நல்ல பலனைத் தரும் மாதங்களாக இருக்கும். இம்மாதங்களில் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது. ஆனால் ஜூன் மாதம் சற்று சிக்கலானதாக இருக்கும். தொழிலில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். அக்டோபர் மாதத்தில் வியாபாரம் காரணமாக வெளியூர் செல்லும் வாய்ப்புள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் வெற்றியைத் தரும் மாதங்களாக இருக்கும்.

2023-ல் கல்வி
2023 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, விருச்சிக ராசிக்கார மாணவர்களுக்கு ஆண்டின் முதல் காலாண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். ஏனெனில் குரு ஏப்ரல் 22 ஆம் தேதி வரை 5 ஆவது வீட்டில் இருப்பதால், சிறப்பான பலன்களை மாணவர்கள் பெறுவார்கள். ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் நல்ல முடிவுகளைப் பெறலாம். மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையே படிப்பில் பல தடைகள் ஏற்படலாம். ஆனால் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் பயனுள்ளதாக இருக்கும். ஆண்டின் முதல் பகுதி நல்ல பலன்களைக் காணும் அதே வேளையில் ஆண்டின் பிற்பாதி ஓரளவு பலவீனமாக இருக்கும்.

2023-ல் நிதி நிலைமை
2023-ல் விருச்சிக ராசிக்காரர்களின் நிதி நிலையைப் பற்றி கூற வேண்டுமானால், நிதியை சமநிலையில் வைத்திருக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும் . இந்த ஆண்டில் உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது, செலவுகள் ஆண்டு முழுவதும் ஒரே அளவில் தான் இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ராகு மற்றும் கேதுவின் நிலையால், தேவையற்ற செலவுகள் உங்கள் நிதி நிலைமையை அழிக்கும் அபாயம் உள்ளது. மேலும் குரு 6 ஆவது வீட்டிற்கு சென்று 12 ஆவது வீட்டைப் பார்ப்பதால், செலவுகள் அதிகரிக்கும். ஆனால் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நீங்கள் சற்று நிம்மதி அடைவீர்கள். ஆண்டு முழுவதும் நிதியை சமநிலையில் வைத்திருக்க கடினமாக உழைக்க வேண்டும். ஏனெனில் இதனால் உங்கள் வருமானம் அதிகரித்து, நிதி நிலை சீராக இருக்கும்.

2023-ல் குடும்ப வாழ்க்கை
2023-ல் விருச்சிக ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையைப் பற்றி கூற வேண்டுமானால், ஆண்டின் தொடக்கத்தில் சனி மூன்றாவது வீட்டில் இருப்பதால், பெற்றோரின் உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். ஜனவரி 17 ஆம் தேதி சனி நான்காம் வீட்டில் நுழைவதால் உங்களின் பணிச்சுமை அதிகரிக்கலாம் மற்றும் சனி 10 ஆவது வீட்டை பார்ப்பதால், குடும்பத்தில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கும். ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் மூத்த குடும்ப உறுப்பினர்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். உங்கள் உடன்பிறந்தவர்கள் உங்களுக்காக இருப்பார்கள். இந்த ஆண்டு உங்கள் கடமைகளை நிறைவேற்றி வெற்றி பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

2023-ல் குழந்தைகள்
2023-ல் விருச்சிக ராசிக்காரர்களின் குழந்தைகளுக்கு ஆண்டின் தொடக்கம் சிறப்பாக இருக்கும். ஜனவரி பிப்ரவரி-மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் குழந்தைகள் தொடர்பான சில ஊக்கமளிக்கும் தகவல்களை வெளிப்படுத்தலாம். திருமண வயதில் உள்ள பிள்ளைகளுக்கு இந்த ஆண்டில் திருமணமாகும். உங்கள் பிள்ளைகள் வேலை அல்லது வணிகத்தில் முயற்சி செய்தால் வெற்றி பெறுவார்கள். அதேப் போல் படித்துக் கொண்டிருந்தால் வெற்றி பெறுவார்கள். ஆனால் ஆண்டின் நடுப்பகுதி பலவீனமாக இருக்கும். ஏப்ரல் மாத இறுதியில் இருந்து ஆகஸ்ட் இறுதி வரை கடினமாக இருக்கும். இந்த நேரத்தில் அவர்களுக்கு வேலையில் தடைகள் இருக்கலாம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்கலாம். ஆனால் செப்டம்பர் மாதத்தில் நிலைமைகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பும். நவம்பர் அல்லது டிசம்பரில் நீங்கள் நிம்மதியும் திருப்தியும் அடைவீர்கள்.

2023-ல் திருமண வாழ்க்கை
2023-ல் விருச்சிக ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் வியாழன் ஐந்தாம் வீட்டிலும், சனியின் பார்வை ஐந்தாம் வீட்டிலும் இருப்பதால், அதிக அன்பை உணர்வீர்கள். திருமணம் செய்து கொள்ள விரும்பினால் அது வெற்றிகரமாக நடக்கும். இருப்பினும் இந்த நேரத்தில் செவ்வாய் ஏழாவது வீட்டில் பிற்போக்கு நிலையில் இருப்பதால், உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே மோதல்கள் ஏற்படலாம். கேது 12 ஆவது வீட்டில் சஞ்சரிப்பதன் விளைவாக உங்கள் இருவருக்கும் இடையே உறவுப் பிரச்சினைகள் உருவாகலாம். ஏப்ரல் 22 அன்று குரு உங்கள் 6 ஆவது வீட்டிற்குள் நுழைந்து 12 ஆவது வீட்டைப் பார்க்கும் போது, பிரச்சனைகள் சரியாகத் தொடங்கும். ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொள்ளத் தொடங்குவீர்கள். வருடத்தின் கடைசி சில மாதங்கள், திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

2023-ல் வியாபாரம்
2023-ல் விருச்சிக ராசிக்காரர்களின் வியாபாரத்தைப் பொறுத்தவரை, ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். ஜனவரி மாதத்தில் வியாபாரிகள் வெளிநாட்டில் உள்ள தொடர்புகளின் மூலம் ஆதாயமடைவார்கள். வணிக வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இருக்கும். ஆனால் பிப்ரவரி மற்றும் ஏப்ரல் இடையே வணிக பதட்டங்கள் உயரக்கூடும். மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் நீங்கள் குறுக்குவழியில் முன்னேறுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் நீங்கள் சட்டச் சிக்கல்களை சந்திக்கலாம். செப்டம்பரில் தொடங்கும் தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. நவம்பர் மற்றும் டிசம்பரில் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளன.

2023-ல் சொத்து மற்றும் வாகனம்
2023-ல் விருச்சிக ராசிக்காரர்கள் ரியல் எஸ்டேட்டில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஆண்டின் முதல் மாதம் சற்று பலவீனமாக இருக்கும். சொத்தை விற்க வேண்டிய நிலை கூட ஏற்படும். இந்த ஆண்டு நீங்கள் சில பெரிய சொத்துக்களை வாங்கலாம். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் நீங்கள் ஒரு புதிய வீடு அல்லது நிலத்தை வாங்கலாம். வாகனம் வாங்குவதற்கான உகந்த காலம் ஜனவரி 22 முதல் மார்ச் 12 வரை ஆகும். இந்த ஆண்டில் வாங்கிய கார் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதன் பிறகு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் கார் வாங்குவது நன்றாக இருக்கும்.

2023-ல் ஆரோக்கியம்
2023-ல் விருச்சிக ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தைப் பற்றி கூறு வேண்டுமானால், சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆண்டின் ஆரம்பம் சாதகமாக இருக்கும். ஜனவரி 17 ஆம் தேதிக்கு பின் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் உங்கள் போட்டியாளர்கள் சற்று வலுவாக இருப்பார்கள். இது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஏப்ரல் 22 ஆம் தேதி குரு 5 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் சில கிரகங்களின் சேர்க்கையும் நிகழ்வதால், இது ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் எந்த உடல் பிரச்சனைகளையும் புறக்கணிக்காதீர்கள். சிக்கல்களைத் தவிர்க்க மருத்துவரை அவ்வப்போது சந்தியுங்கள். இந்த நேரத்தில் நீங்கள் வயிறு அல்லது பெரிய குடல் பிரச்சினைகள் ஏற்படலாம். கண் நோய்கள் மற்றும் உடல் வலிகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் பிற தொடர்புடைய பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆனால் அக்டோபர் மாதத்திற்கு பின் ஆரோக்கியம் மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)