Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
2023 சனி பெயர்ச்சியால் உருவாகும் விபரீத ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது..
2023 ஆம் ஆண்டு நிகழும் சனிப்பெயர்ச்சியால் விபரீத ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த எதிர் ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். ஆனால் இந்த ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்கள் நற்பலன்களைப் பெறவுள்ளார்கள்.
2023 ஆம் ஆண்டு வரவுள்ளது. இந்த புதிய ஆண்டின் தொடக்கத்திலேயே சனி பகவான் ராசியை மாற்றவுள்ளார். நவகிரகங்களில் சனி பகவானுக்கு தனி இடம் உண்டு. ஏனெனில் சனி பகவான் ஒருவரின் கர்மத்திற்கு ஏற்ப பலன்களை அளிப்பவர். இவர் 2023 ஜனவரி 17 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார். இந்த கும்பம் சனி பகவானின் சொந்த ராசியாகும்.

2023 ஆம் ஆண்டு நிகழும் இந்த சனிப்பெயர்ச்சியால் விபரீத ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த எதிர் ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். ஆனால் இந்த ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்கள் நற்பலன்களைப் பெறவுள்ளார்கள். அதுவும் செல்வம், மரியாதை மற்றும் முன்னேற்றம் என அனைத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். 2023-ல் நடக்கும் சனிப் பெயர்ச்சியின் போது ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் இந்த 10 ஆவது வீட்டில் விபரீத ராஜயோகம் உருவாகிறது. இது வேலை மற்றும் பணியிடத்தின் வீடாக கருதப்படுகிறது. எனவே இந்த ராசிக்காரர்கள் இந்த புத்தாண்டில் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். நல்ல பண ஆதாயத்திற்கான வாய்ப்புக்கள் உள்ள. மேலும் இந்த ராசிக்காரர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதோடு, அதனால் நல்ல பண ஆதாயத்தையும் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு 2023-ல் புதிய வேலை கிடைக்கும்.

துலாம்
2023-ல் நடக்கும் சனிப் பெயர்ச்சியின் போது துலாம் ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் இந்த வீட்டில் விபரீத ராஜயோம் உருவாகவுள்ளது. இது அன்பு, உறவு மற்றும் குழந்தைகளின் வீடாக கருதப்படுகிறது. எனவே இந்த புதிய ஆண்டில் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வெற்றியையும் லாபத்தையும் பெறுவார்கள். குழந்தைகளால் நற்செய்திகளைப் பெறுவீர்கள். முககியமாகஇந்த புத்தாண்டில் பொருள் இன்பங்கள் அதிகரிப்பதைக் காண்பீர்கள்.

தனுசு
2023 ஆம் ஆண்டில் தனுசு ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் 3 ஆவது வீட்டில் விபரீத ராஜயோகம் உருவாகிறது. இந்த வீடு தைரியத்தின் வீடாகும். எனவே இந்த தனுசு ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டில் அதக நம்பிக்கை நிறைந்திருப்பார்கள். பணியிடத்தில் பதவி உயர்வு மற்று வருமான உயர்வைப் பெற வாய்ப்புக்கள் உள்ளன. முக்கியமாக தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications