Latest Updates
-
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்! -
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
Mothers Day 2026: 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்! -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆசீர்வாதத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் -
May 2026 Money Horoscope: மே மாதத்தில் பண மழையில் நனையபோவது இந்த 4 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
முள்ளங்கியை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
வெயில் கொடுமையா? இந்த 4 செடிகள் இருந்தா போதும்… வீடே ஏசி போல ஜில்லுனு இருக்கும்! -
செஃப் தீனா ஸ்டைல் சிக்கன் தொக்கு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
வரலாற்றின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவரின் ஒரு பயணம் எப்படி உலக வரலாற்றை மாற்றியது தெரியுமா?
சனி வக்ர நிலையில் மகரம் செல்வதால் ஜூலை 12 முதல் ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
2022 ஜூலை 12 ஆம் தேதி வக்ர சனி மகர ராசியை அடைந்து அக்டோபர் 23 வரை இந்நிலையிலேயே பயணிக்கிறார். இதனால் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
2022 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்த ஆண்டில் பல முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. அதுவும் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் சனி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி சென்றார். ஜோதிடத்தின் படி, சனியின் ராசி மாற்றம் அனைத்து ராசி மக்களையும் நிச்சயம் பாதிக்கும். சனியின் இந்த ராசி மாற்றத்தால், ஏழரை சனி சில ராசிகளுக்கு தொடங்கியது மற்றும் சில ராசிக்காரர்களின் சனி தாக்கத்தில் இருந்து விடுபட்டார்கள்.

ஆனால் சனி இப்படி ராசியை மாற்றிய சில மாதங்களிலேயே வக்ர நிலையில் கும்ப ராசியில் பயணிக்கத் தொங்கினார். இந்நிலையில் 2022 ஜூலை 12 ஆம் தேதி வக்ர சனி மகர ராசியை அடைந்து அக்டோபர் 23 வரை இந்நிலையிலேயே பயணிக்கிறார். இதனால் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
வக்ர சனி பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் சில நல்ல வாய்ப்புக்கள் உருவாக வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொண்டால், வாழ்வில் நல்ல முன்னேற்றம் அடையலாம். இக்காலத்தில் தந்தை வழி சொத்துக்களால் நிறைய ஆதாயம் பெறுவீர்கள். வேலையை மாற்ற நினைத்தால், அதற்கான வாயப்புக்களும் உருவாகும். மொத்தத்தில் இந்த காலம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்
வக்ர சனிப் பெயர்ச்சி ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் நடக்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல சவால்களை சந்திக்கலாம். நிதி நிலைமை சராசரியாக இருக்கும். புதிய முயற்சியைத் தொடங்க திட்டமிட்டால், சற்று எச்சரிக்கையுடன் தொடருங்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணிபுரிபவர்கள் சில உற்சாகமான வாய்ப்புக்களைப் பெறலாம். தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வேலையாட்களால் சில சிரமங்கள் ஏற்படலாம். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறவுகளை மேம்படுத்தலாம்.

மிதுனம்
மிதுன ராசியின் 8 ஆவது வீட்டில் வக்ர சனி பெயர்ச்சி நிகழ்கிறது. இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்கும். இதன் காரணமாக பல உடல்நல பிரச்சனைகளை சந்திப்பீர்கள். எனவே ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க பரிந்துரைக்கப்படுகிறது. சில எதிர்பாராத செலவுகள் உங்களை தொந்தரவு செய்யலாம். சில பழைய முதலீடுகளும் உங்களுக்கு சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். நீங்கள் ஏதேனும் புதிய திட்டத்தைத் தொடங்க திட்டமிட்டால், சிறிது காலம் காத்திருங்கள். திருமணமானவர்களுக்கு துணையுடன் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. திருமண வாழ்க்கை சராசரியாக இருக்கும்.

கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டில் வக்ர சனி பெயர்ச்சி நடக்கிறது. இதனால் இக்காலம் சராசரியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் சில உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக உங்களுக்கு சாதகமாக இருக்கலாம். உங்கள் கடந்த கால முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் நல்ல பலன் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

சிம்மம்
சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டில் வக்ர சனி பெயர்ச்சி நடக்கிறது. இதனால் இக்காலம் உங்களுக்கு நன்றாக இருக்கும். இக்காலத்தில் நீங்கள் கடன் வாங்குவீர்கள். மேலும் சிக்கிய பணத்தை திரும்பப் பெற வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில பிரச்சனைகள் தொந்தரவு செய்யக்கூடும் என்பதால் சற்று கவனமாக இருங்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வணிகர்கள் தங்கள் தொழிலாளர்களின் ஆதரவைப் பெற மாட்டார்கள். திருமணமான சொந்த பந்தங்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருமணம் செய்ய விரும்புபவர்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் வக்ர சனி பெயர்ச்சி நடக்கிறது. இதனால் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பண விஷயத்தில் கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம். கூடுதல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற உங்கள் பேராசை உங்களை ஒரு கடினமான சூழ்நிலையில் தள்ளலாம். நீண்ட கால முதலீடுகளுக்கு சாதகமான காலம். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். உங்கள் துணையின் ஆதரவு கிடைக்கும். உங்கள் உறவை வலுப்படுத்த உங்கள் துணையுடன் சில தரமான நேரத்தை செலவிட அறிவுறுத்தப்படுகிறது.

துலாம்
துலாம் ராசியின் 4 ஆவது வீட்டில் வக்ர சனி பெயர்ச்சி நடக்கிறது. இதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு அர்தாஷ்டம சனி தொடங்குகிறது. இக்காலத்தில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சரியாக உணரமாட்டீர்கள். உங்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டம் அதிகரிக்கலாம். எனவே ஆரோக்கியமாக இருக்க சில யோகா மற்றும் பிராணாயாமம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் பணத்தை சொத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டால், சற்று கவனமாக இருங்கள். வேலை செய்பவர்களுக்கு அல்லது வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த காலம் சில சவாலான சூழ்நிலைகளை கொண்டு வரலாம். இக்காலத்தில் எந்த வகையான புதிய வேலைகளையும் தொடங்காதீர்கள். திருமணமானவர்கள் சிறு மோதல்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால், அது உங்கள் உறவுகளில் சிக்கலை உண்டாக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டில் வக்ர சனி பெயர்ச்சி நடக்கிறது. இதனால் இக்காலம் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நிதி நிலை மேம்படும். கடன் வாங்குவதற்கு சாதகமான காலம். வியாபாரிகளுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய திட்டங்கள் இக்காலத்தில் உங்கள் கதவைத் திட்டும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் உங்கள் துணையுடன் உங்கள் உறவு மேம்படும்.

தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் வக்ர சனி பெயர்ச்சி நடக்கிறது. இப்பெயர்ச்சியால் தனுசு ராசிக்கு ஏழரை சனி தொடங்குகிறது. எனவே இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இக்காலம் சாதகமாக இல்லை. எனவே ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருங்கள். நீண்ட கால முதலீட்டின் மூலம் பலன்களைப் பெறுவீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலை விரிவுபடுத்த இக்காலம் சாதகமானத. மாணவர்கள் நல்ல முடிவுகளைப் பெற கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும். திருமண வாழ்க்கை நல்லிணக்கமும் அமைதியும் நிறைந்ததாக இருக்கும்.

மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் வக்ர சனி பெயர்ச்சி நடக்கிறது. இதனால் நிதி ரீதியாக கலவையான பலன்களைப் பெறுவீர்கள். எந்த விதமான நிதி பரிவர்த்தனைகளையும் செய்கிறீர்கள் என்றால் எச்சரிக்கையாக இருங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இதயம் சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. நீங்கள் யாரையேனும் காதலித்து உங்கள் காதலை இக்காலத்தில் தெரிவித்தால், சாதகமான முடிவு கிடைக்காது. திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் உறவு மேம்படும். மாணவர்கள் விரும்பிய முடிவுகளைப் பெறலாம் போகலாம்.

கும்பம்
கும்ப ராசியின் 12 ஆவது வீட்டில் வக்ர சனி பெயர்ச்சி நடக்கிறது. இப்பெயர்ச்சியால் கும்ப ராசிக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் தொடங்கவுள்ளது. எனவே ங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. உணவில் கவனம் செலுத்துங்கள். பணியிடத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். புதிய வேலையைத் தேட முயற்சி செய்யுங்கள். தொழில்முனைவோர் எந்தவிதமான புதிய முயற்சிகளையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் தேடி வரும். திருமணமானவர்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடலாம். சில எதிர்பாராத செலவுகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். இந்த காலத்தில் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.

மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டில் வக்ர சனி பெயர்ச்சி நடக்கிறது. இதனால் மன ரீதியாக சற்று குழப்பத்தில் இருப்பீர்கள். நிதி ரீதியாக பல நன்மைகளைப் பெறுவீர்கள். உங்கள் நிலுவையில் உள்ள வேலைகள் இந்த காலத்தில் முடிக்கப்படலாம். வியாபாரிகள் இக்காலத்தில் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்கலாம். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் சில சிறந்த வாய்ப்புக்களைப் பெறுவார்கள். கடந்த கால முதலீட்டில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், உங்கள் உறவு படிப்படியாக மேம்படும்.



Click it and Unblock the Notifications