Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சனி வக்ர பெயர்ச்சியால் அடுத்த 141 நாட்கள் ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
கும்ப ராசியில் பயணித்து வரும் சனி பகவான் 2022 ஜூன் 05 ஆம் தேதி அதிகாலை 04.14 மணிக்கு வக்ரமாக மாறுகிறார். கும்ப ராசியில் சனி வக்ரமாவதால் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
சனி பகவான் என்றால் பலரது மனதிலும் அச்சம் எழும். ஏனெனில் சனி பகவான் ஒருவரின் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை அளிக்கக்கூடியவர். கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் சனி. இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற இரண்டரை ஆண்டுகள் ஆகும். 2022 ஆம் ஆண்டில் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு ஏப்ரல் 29 ஆம் தேதி மாறினார். கும்ப ராசியில் பயணித்து வரும் சனி பகவான் 2022 ஜூன் 05 ஆம் தேதி அதிகாலை 04.14 மணிக்கு வக்ரமாக மாறுகிறார். அதாவது பின்னோக்கி நகர ஆரம்பிக்கிறார். இந்த வக்ர நிலையில் சனி பகவான் அக்டோபர் 23 ஆம் தேதி வரை அதாவது, 141 நாட்கள் இருப்பார்.

சனி வக்ரமாவதால் அனைவரது வாழ்க்கையிலும் ஒருசில தாக்கங்கள் இருக்கும். அதில் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களும், சிலருக்கு மோசமான பலன்களும் கிடைக்கலாம். இப்போது கும்ப ராசியில் சனி வக்ரமாவதால் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு இக்காலம் சாதகமானதாக இருக்கும். பண வரவுடன் புகழும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் வெற்றி கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். ஆகவே இக்காலத்தில் ரிஷப ராசிக்காரர்கள் அவசரத்தைக் கைவிட வேண்டும். எந்த ஒரு முடிவு அல்லது முதலீடு செய்வதாக இருந்தாலும், மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பேச்சிலும், கோபத்திலும் நிதானத்தைக் கடைபிடியுங்கள். அப்படியென்றால் தான் உங்களின் வேலையில் வெற்றி கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் வாழ்க்கையில் சில புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். உங்கள் வீட்டில் அல்லது பணியிடத்தில் எந்த பொறுப்பைக் கொடுத்தாலும், அதை சரியாக முடியுங்கள். அதற்காக அளவுக்கு அதிகமாக சிந்திக்க வேண்டாம். சனி பகவான் உங்களின் கர்ம வினைகளுக்கு ஏற்பட பலன்களைத் தருவார்.

கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் கடக ராசிக்காரர்கள் இக்காலத்தில் பணத்தை புத்திசாலித்தனமாக செலவழிக்க வேண்டும். அதோடு பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வாக்குவாதங்களை தவிர்த்திடுங்கள். மேலும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறையை காட்டுங்கள். உத்தியோகத்தில் புதிய சவால்களை சந்திப்பீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும். பணியிடத்தில் வேலைப்பளுவை சமாளிக்க வேண்டியிருக்கும். வேலையின் போது விதிகளை பின்பற்றுங்கள். விதிகளை மீறினால் அவதிப்படுவீர்கள். மேலும் தவறான விஷயங்கள் மற்றும் தவறான நபர்களிடம் இருந்து விலகி இருங்கள்.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் சனி பகவான் அருளால் சொத்துக்கள் பெருகும். லாபத்திற்கான புதிய வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு சாதகமான காலம் இது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வேலையில் தடைகள் ஏற்படலாம். பண விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையின் பேச்சைக் கேட்பதன் மூலம் எத்தகைய சிரமமும் குறையும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகரிக்கும். குடும்ப தகராறுகளை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். அடுத்த 141 நாட்கள் பணத்தை முதலீடு செய்வதாக இருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் சனி பகவானின் அருளால் தொழிலில் நல்ல வாய்ப்புகள் வரும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும். இதனால் உங்களின் நிதி நிலை இந்த காலகட்டத்தில் வலுவாக இருக்கும். மொத்தத்தில் இந்நேரம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் கோபம் மற்றும் பேச்சில் நிதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்களின் கோபம் உங்கள் வேலையைக் கெடுக்கும். வாக்குவாதங்களில் இருந்து விலகி இருங்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் பேச்சில் நிதானம் இல்லாமல் இருப்பதால், காதல் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் வீண் செலவுகளால் நிதி நிலைமை வலுவிழந்து போகும். அதுவும் சேமிப்பையும் சேர்த்து செலவு செய்ய வேண்டியிருக்கும். எனவே பண விஷயங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள்.

மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் வியாபாரத்தில் சவால்கள் அதிகரிக்கலாம். இதன் காரணமாக பணத்தையும் இழக்க நேரிடும். இக்காலகட்டத்தில் புதிய வேலைகள் எதையும் செய்ய வேண்டாம். கடன் கொடுப்பதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் சிக்கிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய சவால்களை சந்திக்க நேரிடும்.



Click it and Unblock the Notifications