Latest Updates
-
IPL 2026: தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த டாப் சிஎஸ்கே வீரர்கள்! இதுல உங்களுக்கு பிடிச்சவங்க யாரு? -
கோடிகளில் சம்பாதிக்கும் அதிர்ஷ்டம் மற்றும் திறமையுடன் பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
ஈவ்னிங் டைம்-ல காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க.. ருசியானதும்.. கண் பார்வையும் மேம்படும்.. -
சொந்த நட்சத்திரம் செல்லும் கேது: மார்ச் 29 முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ் அனைத்தும் கிடைக்கப்போகுது.. -
IPL 2026: தோனி ஏன் 'தல' அழைக்கப்படுகிறார்? எப்போதிருந்து தோனிக்கு இந்த பெயர் வந்தது தெரியுமா? -
கொத்தவரங்காய் கெட்டி குழம்பு ரெசிபி...இந்த மாதிரி செஞ்சு பாருங்க...சாதத்தோட சாப்பிட அட்டகாசமாக இருக்கும்...! -
மதியம் சீக்கிரம் சமையலை முடிக்கணுமா? அப்ப இந்த துவையலை செய்யுங்க.. சூடான சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவின் இதயம் என்று அழைக்கப்படும் மாநிலம் எது தெரியுமா? டெல்லியும் அல்ல, மும்பையும் அல்ல...! -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல அழற்சி அதிகமா இருக்கு-ன்னு அர்த்தமாம்.. -
குரு-புதன் உருவாக்கும் நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த 4 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...!
சனிபகவானால் 140 நாட்கள் சந்தோஷமும் சங்கடமும் யாருக்கு வரப்போகுது தெரியுமா?
நீதி பகவான் சனிபகவான் மகரம் ராசியில் இருந்து வக்ரமடைந்திருக்கிறார். 140 நாட்கள் வக்ர நிலையில் சஞ்சரிக்கிறார். இந்த கால கட்டத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பாதிப்பு ஏற்படு
கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் கிரகங்களின் சஞ்சாரமும் மனிதர்களுக்கு சில நன்மை தீமைகளை தரும். சனிபகவான் ஆயுள்காரகன், மனிதர்களின் ஆயுளை நிர்ணயம் செய்பவர். திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனிபகவான் இந்த மாதம் 11 ஆம் தேதி முதல் வக்ரமடையத் தொடங்கியிருக்கிறார். செப்டம்பர் 29ஆம் தேதி வரை வக்ர நிலையில் சஞ்சரிப்பார். இந்த வக்ர சஞ்சாரத்தினால் சில ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும் பணக்கஷ்டம் நீங்கும். 140 நாட்கள் சனியின் வக்ர சஞ்சாரத்தினால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு என்னென்ன சாதக பாதகங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.

சனிபகவான் மெதுவாக நகரும் கிரகம். ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் தங்கியிருந்து பலன்கள் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய கிரகம் சனி. மகரம் ராசியில் உள்ள சனிபகவான் சுமார் 140 நாட்கள் வக்ரகதியில் சஞ்சரிப்பார் சனி ஏற்கனவே மெதுவாக நகரும் கிரகம். வக்ரம் பெற்றால் சனிபகவான் இன்னமும் மெதுவாக நகர்வார். சனி வக்ரம் பெற்றால் தான் தர வேண்டிய பலன்களை தர தடையும், தாமதம், இழப்பும் எற்படும். சுப பலன் தர வேண்டிய சனி வக்கிரம் பெற்றால் சுப பலனை தரமாட்டார்.
வக்ரம் பெற்ற சனிபகவான் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலனை தரப்போகிறது என்று பார்க்கலாம். பாவ கிரகங்கள் வக்ரம் பெறுவதால் நன்மையே நடக்கும். சனியால் பாதிக்கப்பட்டவர்கள் இனி நன்மையை அடையப்போகிறார்கள்.
கொரோனா வைரஸ் காலத்தில் ஜோதிடம் பலன் தருமா என்று கேட்கலாம். எத்தனையோ பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டிருகிறது. வருமானம் இல்லை, கடன் தொல்லை ஏற்பட்டு போராட்டமே வாழ்க்கையாக போய்விட்டது. கொரோனா நெருக்கடியில் இருந்து மீண்டு விடலாம்.

மேஷம்
செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களுக்கு சனியின் குடைச்சல் அதிகமாகத்தான் இருந்தது. என்னடா வேலை இது என்று அலுப்பும் சலிப்பும் ஏற்பட்டது. கொரோனா முடக்கத்தினால் வேலையில் பிரச்சினை ஏற்பட்டு நிம்மதி இழந்திருந்த நீங்கள் இனி நிம்மதி பெருமூச்சு விடுவீங்க. தடைபட்டு வந்த சுப காரியங்கள் நிறைவேறும். சொந்தக்காலில் நிற்பீர்கள். கணவன் மனைவி உறவில் நெருக்கம் கூடும். அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய தொழில், வியாபாரம் தொடங்கலாமா என்று யோசிப்பீங்க. சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வுடன் கூடிய இடமாற்றமும் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சாதனைகள் நிகழும் காலம். சுப விரையங்கள் ஏற்படும். வாங்கிய கடன்களை திரும்ப செலுத்துவீர்கள். மருத்துவ செலவுகள் வரலாம். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியம் சீராகும். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும் காலம் கணிந்து வருகிறது.

ரிஷபம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். எதிர்காலம் பற்றி பயத்தை காட்டி விடுவார் சனிபகவான். கைவிட்டு போன பொருட்களை மீட்டெடுப்பீங்க. தொழில் வியாபாரத்தில் மாற்றங்கள் செய்வீர்கள். கொரோனா பிரச்சினையால் தொழில் நஷ்டமாகி கடன் வாங்கும் நிலைக்கு போயிருந்த உங்களுக்கு சில நன்மைகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. உங்க பெர்சனல் வாழ்க்கையை பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் அதுவே குடும்ப வாழ்க்கையில் வேட்டு வைத்து விடும்.

மிதுனம்
புதனை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர சஞ்சாரத்தினால் குடும்ப வாழ்க்கையில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து போங்க. தொழில் முடக்கம், நிதி நிலையில் நெருக்கடி என தவித்து வருகிறீர்கள். இனி கவலை வேண்டாம் திடீர் அதிர்ஷ்டங்கள் வரலாம் நெருக்கடிகள் தீரும் பண வருவதில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும். யாரிடமும் எதையும் பேசுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேசுங்க. கணவன் மனைவி இடையே பேச்சுவார்த்தையில் கவனமாக இருக்க வேண்டிய காலமிது. மாணவர்கள் அக்கறையுடன் படித்தால் மட்டுமே தேர்வுகளை நன்றாக எதிர்கொள்ள முடியும். உங்க ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க கொஞ்சம் அசால்டாக இருந்தாலும் மருத்துவ செலவு செய்ய வேண்டியிருக்கும் கவனம்.

கடகம்
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த 140 நாட்களும் சந்தோஷமான காலகட்டமாக அமையும் உங்களுக்கு வரும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். தொழிலில் இருந்த பிரச்சினைகள் தீரும் நிதி நெருக்கடிகள் நீங்கும் மறைமுக போட்டிகள் குறையும். திடீர் பணவரவுகள் வந்து உங்களை திக்கு முக்காட வைக்கும். படிக்கும் மாணவர்களுக்கு இது நல்ல காலகட்டம் நன்றாக படித்து தேர்வுகளை எழுதுங்க. கணவன் மனைவி இடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். அட அதுக்கு போயா சண்டை போட்டோம் என்று சமாதானம் பேசி கொஞ்சிக்கொள்வீர்கள்.

சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே, கணவன் மனைவி இடையே ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் தீரும். நோய் பாதிப்புகள் தீரும் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். பணப்பிரச்னை தீரும். சிலருக்கு திடீர் பண வருமானமும் வரும். அநாவசியமான செலவுகளை தவிர்த்து விடுங்கள். வம்பு வழக்குகளில் இருந்து வந்த பிரச்சினைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கு இது சாதகமான காலகட்டம் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

கன்னி
புதனை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, உங்களுக்கு வேலையில் இருந்த முடக்கம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் தீரும். சனியின் வக்ர சஞ்சார காலமான 140 நாட்களும் உங்களுக்கு வருமானம் நன்றாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. மாணவர்கள் நன்றாக படித்தால் மட்டுமே தேர்வுகளை எதிர்கொள்ள முடியும்.

துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, இது நல்ல காலகட்டம். நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். பணம் வருமானம் வரும் அதே நேரத்தில் செலவுகளை கட்டுப்படுத்துங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் கடன் வாங்கி கொடுக்காதீங்க. உங்க ஆரோக்கியத்திலும் அம்மாவின் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும். உங்களின் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உயர்கல்வி யோகம் கைகூடி வரப்போகிறது மாணவர்களை தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.

விருச்சிகம்
செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே, உங்களுக்கு சனியின் வக்ர சஞ்சாரத்தினால் நிறைய சந்தோஷங்கள் வரும். சங்கடங்கள் தீரும். உங்களின் பணவரவு நன்றாக இருக்கும். உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. கால்களில் பிரச்சினைகள் வரலாம் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. எந்த காரணத்திற்காகவும் கடன் வாங்காதீங்க. படிப்பில் அக்கறையோடு இருந்தால் மட்டுமே மாணவர்களை தேர்வுகளை நன்றாக எதிர்கொள்ள முடியும்.

தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, உங்களுக்கு சனியின் வக்ர சஞ்சாரத்தினால் நன்மைகள் நடைபெறும் என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாகவும் அக்கறையாகவும் இருங்க. குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் அவ்வப்போது வந்து போகும். விட்டுக்கொடுத்து போங்க. மாணவர்களுக்கு மறதி வரலாம் கவனமாக படிங்க. புதிய பிசினஸ் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் பெரிதாக பண முதலீடு எதுவும் செய்யாதீங்க.

மகரம்
சனிபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே, உங்க ராசி அதிபதி சனி உங்களுக்கு நன்மைதான் செய்வார் என்றாலும் சிலருக்கு நிதி நெருக்கடிகள் வரலாம். வேலையை கவனமாக செய்யுங்க. புது வேலை எதுவும் வேண்டாம் இருக்கிற வேலையை தெளிவாக கவனமாக செய்யுங்க. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. கொரோனா லாக் டவுன் காலம் விரைவில் முடிவுக்கு வரும் இழந்தவைகளை மீட்பீர்கள்.

கும்பம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த சனி வக்ர சஞ்சாரத்தினால் விரைய செலவுகள் குறையும். நீங்கள் முதலீடு செய்த திரும்ப வரும். செய்யும் தொழிலில் நிறைய லாபம் வரும். உங்களோட உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். கொரோனா லாக் டவுன் காலத்தில் சொந்த பந்தங்களுடன் கூடியிருக்கும் நீங்கள் உற்சாக மனநிலையில் இருப்பீர்கள். மனரீதியாக பிரச்சினைகள் தீரும்.

மீனம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே, உங்களுக்கு பணவருமானம் வரும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உங்க தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்க ஆரோக்கியத்தில் பாதிப்புகள் வரும் கவனமாக இருங்க, தொழில் முடக்கத்தினால் நஷ்டமாகியிருச்சே என்று கவலையில இருந்தீங்க. இனி கொஞ்ச நாளைக்கு பெரிய அளவில முதலீடு எதுவும் செய்யாதீங்க. மாணவர்கள் படிப்பில அக்கறை காட்டுங்க கவனமாக படித்தால் மட்டுமே தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











