Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
மகரத்தில் சனி, சுக்கிரன், புதன் சேர்க்கையால் டிசம்பர் இறுதியில் இந்த 4 ராசிகளுக்கு சூப்பரா இருக்கப் போகுது..
மகர ராசியில் சனி, சுக்கிரன், புதன் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த கிரக சேர்க்கையால் டிசம்பர் மாதத்தின் இறுதி நாட்களில் சில ராசிக்காரர்கள் எதிர்பாராத பல நற்பலன்களைப் பெறவுள்ளார்கள்.
2022 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் பல பெரிய கிரகங்கள் ராசியை மாற்றி, பலரது வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி ஏற்படுத்தும் தாக்கம் நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம். நாம் தற்போது 2022 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் உள்ளோம். இந்த டிசம்பர் மாதத்தில் சுக்கிரனும், புதனும் இரண்டு முறை ராசியை மாற்றுகிறார்கள். அதில் மாதத்தில் தொடக்கத்தில் புதனும், சுக்கிரனும் தனுசு ராசிக்கு அடுத்தடுத்து சென்றனர்.

அதைத் தொடர்ந்து ஆண்டின் இறுதி நாட்களில் புதனும், சுக்கிரனும் மகர ராசிக்கு செல்கின்றனர். இந்த மகர ராசியில் ஏற்கனவே சனி பயணித்து வருகிறார். இதனால் மகர ராசியில் சனி, சுக்கிரன், புதன் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த கிரக சேர்க்கையால் டிசம்பர் மாதத்தின் இறுதி நாட்களில் சில ராசிக்காரர்கள் எதிர்பாராத பல நற்பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் சனி, புதன், சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் மேஷ ராசிக்காரர்கள் ஏராளமான நற்பலன்களைப் பெறவுள்ளார்கள். பணிபுரிபவர்கள் தங்களின் வேலையில் வெற்றியை பெறுவார்கள். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புள்ளது. நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.

கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டில் புதன், சுக்கிரன், சனி சேர்க்கை நிகழ்கிறது. இதனால் கடக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. நிதி நிலை வலுவாகும். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வரன் கிடைக்கும். திருமணமானவர்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் சனி, புதன், சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் கன்னி ராசிக்காரர்களுக்கு இது பொற்காலமாக இருக்கும். இக்காலத்தில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படவும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.

மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டில் சனி, சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் மீன ராசிக்காரர்கள் ஏராளமான நன்மைகளைப் பெறப் போகிறார்கள். இந்த காலகட்டத்தில் வருமானம் உயர வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலை வலுவாகும். வெளியூர் செல்வதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல லாபத்தை தரும் ஒரு பெரிய ஒப்பந்தத்தை முடிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications