Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
மகரத்தில் இருக்கும் சனியால் ஜனவரி 17 வரை இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும்...
மகர ராசியில் சனி பகவான் ஜனவரி 17 வரை இருப்பதால், 3 ராசிக்காரர்களின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதோடு, தொழிலில் வெற்றியும் கிடைக்கும். இப்போது இந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ஜோதிடத்தில் சனி பகவான் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். ஏனெனில் இவர் ஒருவரின் செயல்களுக்கு ஏற்ற பலன்களை அளிப்பவர். கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் சனி. இது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டுகள் ஆகும். இவர் 2022 ஏப்ரல் மாதத்தில் தான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு வந்தார். அதன் பின் ஜூன் மாதத்தில் கும்ப ராசியில் வக்ரமாகி, ஜூலை மாதத்தில் வக்ர நிலையில் மகர ராசியை அடைந்தார். பின்பு 2022 அக்டோபர் 23 ஆம் தேதி மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார்.

தற்போது மகர ராசியில் நேர்கதியில் பயணித்து வரும் சனி, இந்த ராசியில் 2023 ஜனவரி 17 ஆம் தேதி வரை இருந்து, பின் கும்ப ராசிக்கு செல்வார். மகர ராசியில் சனி பகவான் ஜனவரி 17 வரை இருப்பதால், 3 ராசிக்காரர்களின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதோடு, தொழிலில் வெற்றியும் கிடைக்கும். இப்போது இந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்
மகர ராசியின் லக்ன வீட்டில் சனி பயணித்து வருவதால், மிதுன ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். ஏனெனில் சனி உங்கள் ஜாதகத்தின் 8 ஆவது வீட்டில் பயணித்து வருகிறார். எனவே இந்த காலத்தில் நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். அதோடு, ஹன்ஸ் மற்றும் பத்ரா ராஜயோகம் உருவாவதால், இந்த ராசிக்காரர்களின் புகழ் அதிகரிக்கும். மேலும் பணியிடத்தில் உங்களின் சிறப்பான செயல்திறனுக்காக விருதைப் பெற வாய்ப்புள்ளது. அரசியலில் இருப்பவர்கள் சில பதவிகளைப் பெறலாம். வெளிநாட்டு தொடர்புடைய வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் சனி பயணித்து வருகிறார். எனவே இக்காலத்தில் பணிபுரிபவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் மற்றும் பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வணிகத்தில் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும். நீதிமன்ற வழக்குகுளில் நல்ல வெற்றி கிடைக்கும். வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் ரகசிய ஏஜென்சிகளில் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.

மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டில் சனி பயணித்து வருகிறார். இதனால் ஜனவரி வரை மீன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் 11 ஆவது வீடு வருமானம் மற்றும் லாபத்தின் வீடாகும். ஆகவே மீன ராசிக்காரர்கள் இக்காலத்தில் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். நிதி நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு இது நல்ல லாபகரமான காலமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











