Latest Updates
-
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா?
சனி வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் நல்ல லாபத்தை பெற போறாங்க...
தற்போது மகரத்தில் வக்ர நிலையில் இருக்கும் சனி அக்டோபர் 23 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். சனியின் இந்த மாற்றத்தின் தாக்கம் சில ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக மிகவும் அற்புதமாக இருக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப பலனை அளிக்கக்கூடியவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகும். மேலும் சனி மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். இந்த சனி பகவான் 2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் தான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குள் நுழைந்தார். அதன் பின் ஜூன் மாதம் கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணித்தார். அதைத் தொடர்ந்து வக்ர சனி ஜூலை மாதத்தில் மகர ராசியை அடைந்தார்.

தற்போது மகரத்தில் வக்ர நிலையில் இருக்கும் சனி அக்டோபர் 23 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். சனியின் இந்த மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் தொழில் ரீதியாக மிகவும் அற்புதமாக இருக்கும். இப்போது சனி வக்ர நிவர்த்தி அடைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் நற்பலன்கள் கிடைக்கப் போகின்றன என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
சனி வக்ர நிவர்த்தி அடைவதால் மேஷ ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறவுள்ளார்கள். ஏன் திடீர் லாபம் கூட கிடைக்கும். பணிபுரியும் சிலர் நல்ல சம்பள உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. அதோடு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தியானது நல்ல பலன்களை வழங்கப் போகிறது. மேலும் இந்த ராசிக்கு அஷ்டம சனி நடக்கிறது. இருப்பினும், தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய வழிகளில் இருந்து பண ஆதாயம் கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ளது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சனி வக்ர நிவர்த்திக்கு பிறகான காலம் யோகமான காலமாக இருக்கும். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது அல்லது உங்கள் வேலைகளை மாற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இக்காலத்தில் உங்களின் வெற்றிக்கு உங்கள் வாழ்க்கைத் துணை முக்கிய காரணமாக இருப்பார்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி நடக்கிறது. முக்கியமாக துலாம் ராசி சனி பகவானின் விருப்பமான ராசியாகும். எனவே சனி வக்ர நிவர்த்தி அடைவதால் சிலருக்கு முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் ஆசை இக்காலத்தில் நிறைவேறும். வியாபாரிகள் புதிய ஒப்பந்தத்தைப் பெறுவார்கள். இருப்பினும் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இக்காலத்தில் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பிரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

மகரம்
சனி பகவான் தனது சொந்த ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். மேலும் மகர ராசிக்கார்களுக்கு ஏழரை சனியும் நடக்கிறது. இருப்பினும், சனி வக்ர நிவர்த்திக்கு பின் மகர ராசிக்காரர்கள் நற்பலனகளைப் பெறுவார்கள். இதுவரை கவலைப்பட்டு வந்த விஷயங்களில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். எப்பேற்பட்ட பிரச்சனையையும் எளிதில் தீர்ப்பீர்கள். ஆனால் உங்கள் கடின உழைப்பை குறைத்துவிடாதீர்கள். வீட்டில் உள்ளோருடன் நல்லுறவைப் பேண முயற்சி செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications