For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சரஸ்வதி பூஜை 2023: சரஸ்வதி பூஜை கொண்டாடுவதற்கான காரணமும், வழிமுறைகளும்...

|

Saraswati Puja 2023: புரட்டாசி மாதத்தில் 9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையானது, சார்தியா நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது. இது நாடு முழுவதும் பல்வேறு வழி முறைகளில் கொண்டாடப்படுகிறது.

இது பன்முகத்தன்மை மற்றும் அதே நேரத்தில் ஒற்றுமையின் மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில், நவராத்திரி பண்டிகை துர்க்கை அம்மனின் 9 அம்சங்களை வழிபடுவதன் மூலம் கொண்டாடப்படுகிறது.

Saraswati Puja 2023: Date, Significance, Shubh Muhurat and Puja Vidhi During Navratri In Tamil

மேலும் நவராத்திரியின் இறுதி நாள் கொண்டாட்டமான தசரா, தீமைக்கு எதிரான நல்லதொரு வெற்றியை குறிக்கிறது. அதாவது துர்கா தேவி அரக்கனை வதம் செய்து மக்களுக்கு நன்மை செய்ததை குறிக்கிறது.

தென்னிந்திய மாநிலங்கள் கேரளா, தமிழ்நாடு, நவராத்திரியின் கடைசி நாளான 9 வது நாளில் சரஸ்வதி தேவியை வழிபடுகின்றனர். தென்னிந்தியாவை பொறுத்தவரை, நவராத்திரியானது முப்பெரும் தேவியரை பூஜிக்கும் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்கை, அடுத்த 3 நாட்கள் லட்சுமி மற்றும் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை வழிபடுவர்.

சரஸ்வதி தேவி அறிவு, இசை, கலை மற்றும் ஞானத்தின் தெய்வ ரூபமாக கருதப்படுகின்றனர். சரஸ்வதி தேவியானவள் மும்மூர்த்திகளின் ஒரு பகுதியை முப்பெரும் தேவிகளை உருவாக்குகிறார். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும், புத்திசாலியாகவும், அறிவாற்றலுடனும் விளங்க தெய்வத்தின் ஆசிகளை நாடுகின்றனர்.

இந்து புராணங்களின்படி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியவர் பிரம்மாவின் மனைவியான சரஸ்வதி என்று அறியப்படுகிறது. எனவே, நவராத்திரியின் கடைசி நாளில், அம்மன், மகா சரஸ்வதியாக வெளிப்படுவார் என்று நம்பப்படுகிறது. இந்த ஆண்டு, சரஸ்வதி பூஜை அக்டோபர் 23 ஆம் தேதி வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Saraswati Puja 2023: Date, Significance, Shubh Muhurat and Puja Vidhi During Navratri In Tamil

Saraswati Puja 2023: In this article, we discussed about saraswati puja 2023 date, significance, shubh muhurat and puja vidhi during navratri. Read on...
Desktop Bottom Promotion