Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
2022 சனி வக்ர பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் இருந்து இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
கும்ப ராசியில் பயணிக்கும் சனி 2022 ஜூன் 05 ஆம் தேதி வக்ர நிலையில் மாறி பின்னோக்கி பயணிக்கவுள்ளார். சனியின் இந்த வக்ர பெயர்ச்சியால் 4 ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது.

ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றம், அஸ்தமனம், உதயம் மற்றும் பிற்போக்கு போன்றவை மிகவும் முக்கியமானவை. ஏனெனில் கிரகங்கள் மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதில் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு வகையில் மக்களின் வாழ்க்கையை பாதிக்கின்றன. ஒன்பது கிரகங்களும் வெவ்வேறு கால இடைவெளியில் ராசியை மாற்றுகின்றன. இவற்றில் சனி பகவானுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் ஒருவரது கர்மத்திற்கு ஏற்ப பலனை அளிக்கக்கூடியவர். ஒருவரது செயல்கள் நல்லதாக இருந்தால், அவருக்கு நற்பலன்களையும், அதுவே மோசமானதாக இருந்தால் அசுப பலன்களையும் சனி வழங்குவார்.

சனி வக்ர பெயர்ச்சி 2022
கிரகங்களில் சனி 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில் சனி பகவான் 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறினார். கும்ப ராசியில் பயணிக்கும் சனி 2022 ஜூன் 05 ஆம் தேதி வக்ர நிலையில் மாறி பின்னோக்கி பயணிக்கவுள்ளார். சனியின் இந்த பிற்போக்கு அனைத்து ராசிகளிலும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் சனியின் இந்த சஞ்சாரம் சில ராசிகளுக்கு சாதகமாகவும், சில ராசிகளுக்கு அசுபமாகவும் இருக்க வாய்ப்புள்ளன. சனியின் இந்த வக்ர பெயர்ச்சியால் 4 ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது. இப்போது சனி வக்ர பெயர்ச்சியால் எந்த 4 ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். சனியின் இந்த வக்ர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இக்காலத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வருமான உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. இதுவரை உங்கள் விருப்பங்கள் ஏதாவது நிறைவேறாமல் இருந்தால், இக்காலத்தில் அது நிச்சயம் நிறைவேறும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். இதனால் இக்காலத்தில் விருச்சிக ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் சாதகமான முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. இக்காலத்தில் நற்செய்திகளையும் பெறுவீர்கள். முக்கியமாக விருச்சிக ராசிக்காரர்கள் கடினமாக உழைத்தால் நற்பலன்கள் கிடைக்கும்.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். இதனால் இக்காலத்தில் மகர ராசிக்காரர்களின் சுகபோகங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக ஆரோக்கிய பிரச்சனையால் சிரமப்பட்டு வந்திருந்தால், விரைவில் அதிலிருந்து விடுபடுவீர்கள். சமூகத்தில் உங்கள் கௌரவம் உயரும். போட்டித் தேர்வை எழுதியுள்ள மாணவர்களுக்கு வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பொருளாதார முன்னேற்றத்திற்கும் வாய்ப்பு உண்டு.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். சனியின் இந்த சஞ்சாரம் கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் நற்பெயரைப் பெறுவார்கள். தொழிலில் சில நற்செய்திகளையும் பெற வாய்ப்புள்ளது. மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வாய்ப்பு உள்ளது. முக்கியமாக உங்கள் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications
