Just In
- 5 min ago
கடுமையான கரோனரி நோய்க்குறி என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?
- 22 min ago
இந்த பழங்களை ஒன்றாக சாப்பிடுவது விஷத்திற்கு சமமாம்... இது உங்க உயிருக்கே ஆபத்தாகும்... ஜாக்கிரதை!
- 6 hrs ago
இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பணம் சம்பந்தமாக ஏதேனும் தகராறு ஏற்படலாம்...
- 14 hrs ago
ஆண்களை விட பெண்கள் எப்படி வித்தியாசமாக கள்ள உறவில் ஏமாற்றுகிறார்கள்? ஏன் ஏமாற்றுகிறார்கள் தெரியுமா?
Don't Miss
- News
டெல்லி மாஸ்டர்கள்.. கொள்ளைப் பணத்தில் அதிமுக குத்தகை.. வெளுத்து வாங்கிய நாஞ்சில் சம்பத்!
- Movies
சூர்யா, காஜோலுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
- Automobiles
ஆல்டோ போன்ற சின்ன கார்களை கை கழுவ முடிவு? மாருதியின் திடீர் மன மாற்றத்திற்கு இதுதான் காரணம்!
- Finance
Gold price: செம சர்பிரைஸ் கொடுத்த தங்கம்.. இன்று எவ்வளவு குறைஞ்சிருக்கு?
- Technology
Best Smartphone: உங்க பட்ஜெட் ரூ.6000-ஆ? அப்போ 1 இல்ல.. மொத்தம் 7 அட்டகாச மாடல்ஸ் இருக்கு!
- Sports
உம்ரான் மாலிக் மீது வைத்த நம்பிக்கை வீண் போகல.. இது ஸ்பெஷல் வெற்றி.. ஹர்திக் பாண்டியா மகிழ்ச்சி
- Travel
இந்தியாவின் மார்பில் சிட்டிக்குள் ஒரு சுற்றுலா – கிஷன்கரில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
சனி வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க நிறைய பிரச்சனைகளை சந்திக்கப் போறாங்க... உஷாரா இருங்க..
ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படுகிறார். கிரகங்களிலேயே சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகும். சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 வருடங்கள் ஆகும். 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி சனி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறினார். அதன் பின் சனி ஜூன் மாதத்தில் பின்னோக்கி பயணிக்கிறார். அதாவது சனி வக்ர நிலையில் கும்ப ராசியில் பயணிக்க ஆரம்பிக்கிறார். சனி பின்னோக்கி நகர்வதால், நிச்சயம் இது அனைத்து மக்களின் வாழ்க்கையிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
வேத ஜோதிடத்தில் சூரியன் மற்றும் சந்திரனைத் தவிர, அனைத்து கிரகங்களுமே பின்னோக்கி நகரக்கூடியவை. சனி பகவான் ஒரு நீதிமான். இத்தகைய சனி ஒருவரது ஜாதகத்தில் அசுப வீட்டில் இருந்தால், அது வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். அதுவே சுப வீட்டில் இருந்தால், அவர் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வார்.

2022-இல் சனி
சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சனி 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி மகர ராசியை விட்டு வெளியேறி தனது இரண்டாவது சொந்த ராசியான கும்ப ராசிக்குள் நுழைந்தார். கிரகங்களிலேயே ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கி பயணிக்கக்கூடியவர் தான் சனி. அப்படி பயணிக்கும் போது சிறிது காலம் வக்ர நிலையில் பயணிப்பார். இந்நிலையில் சனி பகவான் 2022 ஜூன் 05 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ரமாக மாறி பயணிக்கவுள்ளார். சனி வக்ரமாவதால் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைத்தாலும், சில ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளையும் சந்திப்பார்கள். இப்போது சனி வக்ரமாவதால் அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்
சனி பகவான் கும்ப ராசியில் நுழையும் போதே கடக ராசிக்காரர்களுக்கு சனி தையா ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் ஜூன் 5 ஆம் தேதி சனி வக்ரமாவதால், கடக ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் அதிக கவனம் தேவை. பண இழப்பிற்கான வாய்ப்புள்ளது. இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால், அதை திரும்ப பெற முடியாது.

மகரம்
சனி வக்ர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் பல மோசமான பலன்களைப் பெறப் போகிறார்கள். உத்தியோகத்தில் பல்வேறு தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். வாழ்க்கைத் துணையுடன் உறவு சற்று மோசமாகும்.

விருச்சிகம்
ஏற்கனவே விருச்சிக ராசியில் சனி தையா நடக்கிறது. இந்நிலையில் சனியின் வக்ர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மூதாதையர் சொத்து தொடர்பான சச்சரவுகள் வரலாம். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். இக்காலத்தில் பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.