Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
2023-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்கு எந்த சனி ஆரம்பிக்கப்போகுது தெரியுமா?
2023 ஆம் ஆண்டில் நடக்கும் சனிப் பெயர்ச்சியால் எந்த ராசிக்கு எந்த சனி நடக்கப் போகிறது என்பதையும், அதற்கான பரிகாரங்களையும் காண்போம்.
நவகிரகங்களில் கர்மகாரகனான சனிபகவான் ஒருவருக்கு வாழ்க்கை என்றால் என்ன என்பதை நன்கு புரிய வைப்பார். அதற்காக பல சோதனைகளைக் கொடுப்பார். இது தவிர சனிபகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலனை அளிப்பவர். எனவே தான் சனி பகவான் என்றாலே பலருக்கும் ஒருவித அச்சம் எழும். அதிலும் சனிப்பெயர்ச்சி என்று சொல்லும் போது, பலருக்கும் சனிப்பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும் என்பதை அறிய விரும்புவோம்.

தற்போது சனி பகவான் மகர ராசியில் பயணித்து வருகிறார். மேலும் 2023 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். இந்த ஆண்டின் ஜனவரி மாதம் 17 ஆம் தேதி சனி பகவான் மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். 30 ஆண்டுகளுக்கு பின் கும்பம் செல்லும் சனி பகவான் இந்த ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை இருப்பார். சனி பகவான் ராசியை மாற்றும் போது, அது இருக்கும் வீட்டைப் பொறுத்து சனியின் தாக்கம் இருக்கும். இப்போது 2023 ஆம் ஆண்டில் நடக்கும் சனிப் பெயர்ச்சியால் எந்த ராசிக்கு எந்த சனி நடக்கப் போகிறது என்பதையும், அதற்கான பரிகாரங்களையும் காண்போம்.

மேஷம்
2023 சனிப்பெயர்ச்சியால் மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் மேஷ ராசிக்கு லாப சனி நடக்கிறது. இதனால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். இன்னும் சிறப்பான பலனைப் பெற மேஷ ராசிக்காரர்கள் தினமும் சிவனையும், பார்வதி தேவியையும் வழிபடுவது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் ரிஷப ராசிக்கு தொழில் சனி நடக்கப் போகிறது. இதனால் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்னும் சிறப்பான பலனைப் பெறுவதற்கு ரிஷப ராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுங்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் மிதுன ராசிக்கு பாக்ய சனி நடக்கப் போகிறது. எனவே இதுவரை இந்த ராசிக்காரர்கள் சந்தித்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கும். இந்த சனிப்பெயர்ச்சியால் இன்னும் அதிக நன்மைகளைப் பெற விநாயகரை வணங்குங்கள். உங்கள் குல தெய்வத்தை தினமும் வழிபடுங்கள்.

கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் இந்த ராசிக்கு அஷ்டம சனி நடக்கப் போகிறது. இந்த அஷ்டம சனியால் சிறிது கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். சனி பகவானால் சந்திக்க வைக்கும் பிரச்சனைகளைக் குறைக்க கடக ராசிககாரங்கள் திங்கட்கிழமைகளில் சிவபெருமான் கோவிலுக்கு சென்று அவரை வழிபடுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் சிம்ம ராசிக்கு கண்டக சனி நடக்கப் போகிறது. ஆயினும் இந்த சனியால் சிம்ம ராசிக்காரர்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் சனி உருவாக்கும் சச யோகம் உருவாகப் போகிறது. இதனால் நல்லதும் நடக்கும். இன்னும் சிறப்பான பலனைப் பெற சிம்ம ராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் சனி பகவானையும், தினமும் பைரவரையும் வழிபட வேண்டும்.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் கன்னி ராசிக்கு அற்புதமான பலன்களைத் தரப் போகிறார். இதுவரை சந்தித்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கப் போகிறது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெற சிவனையும், அம்பாளையும், சனி பகவானையும் வழிபட வேண்டும்.

துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் துலாம் ராசிக்கு புண்ணிய சனி நடக்கப் போகிறது. எனவே இக்காலஙத்தில் பரம்பரை சொத்துக்கள் கைக்கு கிடைக்கும். தாய்வழி சொத்துக்களும் கையில் வந்து சேரும். இன்னும் சிறப்பான பலனைப் பெற துலாம் ராசிக்காரர்கள் பௌர்ணமி நாளில் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதோடு, அனுமன், துர்கை அம்மன் ஆகியோரை தினமும் வழிபட வேண்டும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டம சனி நடக்கப் போகிறது. இதன் விளைவாக விருச்சிக ராசிக்காரர்கள் கஷ்டங்களை அனுபவிப்பார்கள். சனி பகவான் கொடுக்கும் கஷ்டங்களைக் குறைக்க பெருமாள், பைரவர், சனி பகவான் ஆகியோரை தினமும் வழிபடுங்கள்.

தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். தனுசு ராசிக்காரர்கள் இந்த சனிப்பெயர்ச்சியால் ஏழரை சனியின் பிடியில் இருந்து விடுபடுகிறார்கள். கஷ்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வரப் போகிறது. சனி பகவானால் இன்னும் சிறப்பான பலனைப் பெற சனி பகவானையும், சிவ பெருமானையும் தினந்தோறும் வழிபடுங்கள்.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் மகர ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி முடிந்து பாத சனி தொடங்குகிறது. அதாவது ஏழரை சனியின் இறுதி கட்டம் தொடங்குகிறது. இதன் விளைவாக பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு செயலையும் கவனமாக செய்ய வேண்டும். சனியின் கெடுபலனைக் குறைக்க சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் போடுங்கள்.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் கும்ப ராசிக்காரர்களுக்கு விரைய சனி முடிந்து, ஏழரை சனியில் ஜென்ம சனி தொடங்குகிறது. ஜென்ம சனி பல கஷ்டங்களைக் கொடுக்கும். இதைக் குறைக்க அனுமன் மற்றும் சனி பகவானை தினமும் வழிபடுங்கள்.

மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் மீன ராசிக்கு ஏழரை சனி தொடங்குகிறது. இதன் விளைவாக திடீர் செலவுகள் அதிகரிக்கும். பேசும் போது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஏழரை சனியால் சந்திக்கும் பாதகமான பலன்களைக் குறைக்க சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











