Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
Viruchigam Sani Peyarchi Palangal 2023: விருச்சிக ராசிக்கு 2023 சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
2023 ஆம் ஆண்டில் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வாழ்வின் ஒவ்வொரு பகுதியும் எப்படி இருக்கும் என விரிவாக தெரிந்து கொள்ள வேண்டுமா?
Sani Peyarchi Palan 2023 -2025: நீதிமான் சனி பகவான் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெயர்ச்சியாகவுள்ளார். அதுவும் 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசிக்கு சனி பகவான் செல்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியானது 2023 ஜனவரி 17 ஆம் தேதி அன்று நிகழ்கிறது. இந்த கும்ப ராசியில் சனி பகவான் 2025 மார்ச் 31 ஆம் தேதி வரை இருப்பார். இந்த சனிப்பெயர்ச்சியால் விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்கிறார். இதனால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி தொடங்குகிறது.

2023 ஆம் ஆண்டில் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வாழ்வின் ஒவ்வொரு பகுதியும் எப்படி இருக்கும் என விரிவாக தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே 2023-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் 2023-2025 வரை விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழில், காதல், உறவுகள், குடும்ப வாழ்க்கை, நிதி நிலை, ஆரோக்கியம், கல்வி, எப்படி இருக்கும் என விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

2023 சனிப்பெயர்ச்சியால் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும்?
தொழில் வாழ்கையைப் பொறுத்தவரை, பணிச்சுமை அதிகமாக இருக்கும். வளர்ச்சியில் தாமதம் ஏற்படும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளும், உடன் பணிபுரிபவர்களும் பிரச்சனையை ஏற்படுத்தலாம். தெளிவாக திட்டமிட்டு வேலை செய்ய பாருங்கள். செய்ய முடியும் என்று தோன்றும் வேலையை மட்டும் செய்ய ஒப்புக் கொள்ளுங்கள். புதிய பொறுப்புக்களும் வழங்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் அது சிக்கலை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும் அதை திறமையாக முடிப்பதற்கான திறன்கள் உங்களிடம் இருக்கும்.

2023 சனிப்பெயர்ச்சியால் காதல் மற்றும் உறவுகள் எப்படி இருக்கும்?
2023-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சிக்கு பின், உங்கள் தாயாரின் ஆதரவு தேவையான நேரங்களில் கிடைக்கும். ஆனால் தந்தையின் ஆதரவு கிடைக்க தாமதமாகும். உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. உடன்பிறந்தவர்களுடனான உறவு நன்றாக இருக்கும். திருமணமாகாமல் இருப்பவர்கள் நல்ல வாழ்க்கைத் துணையைப் பெற்று, நிம்மமியான வாழ்க்கை வாழ வாய்ப்புள்ளது. சிங்கிளாக இருப்பவர்கள், காதலில் விழுந்து, அந்த உறவை நெருக்கமாக மாற்றுவதில் கவனம் செலுத்தலாம்.

2023 சனிப்பெயர்ச்சியால் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
திருமணமான தம்பதிகளின் உறவு சிறப்பாக இருக்கும். பரஸ்பர புரிதல் இருக்கும். ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். வாழ்க்கை அமைதியாக இருக்கும். இருப்பினும் அவ்வப்போது கருத்து வேறுபடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்நேரங்களில் பொறுமையாக இருந்து விட்டுக் கொடுத்து போனால், உறவில் சேதம் ஏற்படாது.

2023 சனிப்பெயர்ச்சியால் நிதி நிலை எப்படி இருக்கும்?
2023 சனிப்பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களின் நிதி நிலை நன்றாக இருக்கும். வியாபாரத்தில் ஆதாயமும் லாபமும் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். இக்காலத்தில் செய்யும் முதலீடுகள் எதிர்காலத்திற்கான அடித்தளமாக இருக்கும். எனவே தெளிவாக முதலீடு செய்யுங்கள். எதிர்பார்த்த பணப்புழக்கம் இருக்கும். ஆடம்பர வசதிகளுக்காக செலவுகளை செய்வீர்கள். நிலத்தில் முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் இருப்பவர்கள் சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம்.

2023 சனிப்பெயர்ச்சியால் கல்வி எப்படி இருக்கும்?
மாணவர்கள் படிப்பில் பிரகாசிப்பார்கள். அவர்களால் முழு ஈடுபாட்டுடன் தங்கள் இலக்குகளில் கவனம் செலுத்த முடியும். ஆராய்ச்சி தொடர்பான படிப்பை மேற்கொள்பவர்கள், தங்கள் ஆய்வில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். சிலர் உயர்கல்விக்காக உதவித்தொகையைப் பெறலாம். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவார்கள்.

2023 சனிப்பெயர்ச்சியால் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?
விருச்சிக ராசிக்கார பெண்கள் கருப்பை பிரச்சனைகளை சந்திக்கலாம் மற்றும் குடல் பிரச்சனைகளையும் சந்திக்க வாய்ப்புள்ளது. ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் பெரிய மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். அர்த்தாஷ்டம சனி தொடங்குவதால், ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு சிறு உடல்நல பிரச்சனையையும் அலட்சியப்படுத்தாதீர்கள். நேரத்திற்கு உணவை உண்ணுங்கள், ஆரோக்கியமான வாழ்க்கையை முறையை வாழ முயற்சி செய்யுங்கள்.

2023 சனிப்பெயர்ச்சி: விருச்சிக ராசிக்கான பரிகாரங்கள்
* ஏழை எளியோருக்கு மற்றும் அனாதை ஆசிரமத்தில் உள்ளோருக்கு ஆடைகளை தானம் செய்யுங்கள்.
* சனிக்கிழமைகளில் எள் விளக்கேற்றி சனி பகவானை வழிபடுங்கள்.
* அவ்வப்போது ஏழை மக்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். இதனால் நல்ல பலன்களை வழங்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications