Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
Rishabam Sani Peyarchi Palangal 2023: 2023 சனிப்பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா?
2023 சனிப்பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. உங்களுக்கு 2023 ஆம் ஆண்டில் நடக்கும் சனிப்பெயச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை காண்போம்.
2023 ஆம் ஆண்டில் சனி பகவான் தனது சொந்த ராசியான மகர ராசியில் இருந்து தனது மற்றொரு ராசியான கும்ப ராசிக்கு செல்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியானது 2023 ஜனவரி 17 ஆம் தேதி நிகழ்கிறது. இந்த கும்ப ராசியில் சனி பகவான் 2025 மார்ச் 31 ஆம் தேதி வரை இருக்கப் போகிறார். இந்த சனிப்பெயர்ச்சியின் போது சனி பகவான் ரிஷப ராசியின் 10 ஆவ்து வீட்டிற்கு செல்கிறார்.

இப்படி சனி பகவான் 10 ஆவது வீட்டிற்கு செல்வதால், அது தொழில் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது. மேலும் இந்த 2023 சனிப்பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. உங்களுக்கு 2023 ஆம் ஆண்டில் நடக்கும் சனிப்பெயச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை சற்று விரிவாக காண்போம்.

தொழில் வாழ்க்கை
2023-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் சில தடைகளை சந்தித்தாலும், முன்னேற்றத்தைக் காண்பார்கள். சனி பகவான் மெதுவாக நகரக்கூடியவர் மட்டுமின்றி, மெதுவாகவே நல்ல முடிவுகளை வழங்குவார். எனவே நல்ல முடிவுகளைப் பெறும் வரை இந்த ராசிக்காரர்கள் சற்று கடினமாக உழைக்க வேண்டும். சனி பகவான் ஒருவருக்கு வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிய வைத்த பின்னரே, நற்பலன்களை வழங்குவார். எனவே கடினமாக உழைக்க சோம்பேறித்தனப்படாமல் உங்களின் சிறந்ததை தொழிலில் கொடுக்க முயற்சி செய்யுங்கள். மொத்தத்தில் தொழில் ரீதியாக பொறுப்புடன் இருங்கள் மற்றும் பொறுமையாக இருங்கள்.

காதல் மற்றும் உறவுகள்
2023 சனிப்பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் மாமியார்-மாமனாருடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்கலாம். இதன் விளைவாக உறவுகளில் விரிசல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் உயர் அதிகாரிகள் உங்களுக்கு தேவையான நேரத்தில் எதிர்பார்த்த ஆதரவை வழங்குவதில் தாமதப்படுத்தலாம்.

திருமண வாழ்க்கை
நீங்கள் திருமணமாகாத ரிஷப ராசிக்காரராக இருந்து, உங்களின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தால், இந்த ஆண்டில் உங்கள் வாழ்க்கைத்துணையின் கரம் பிடிப்பீர்கள். திருமணமான தம்பதிகள் குடும்பத்தின் அமைதி பாதிக்கப்படும் வகையில் சச்சரவுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. விட்டுக் கொடுப்பவர் எப்போதும் கெட்டுப் போவதில்லை. எனவே விட்டுக் கொடுத்து உறவுகளை மேம்படுத்துங்கள். சனியின் நிலையால் உடன்பிறந்தவர்கள் மற்றும் அன்பானர்கள் உங்களின் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளுக்கு எதிராக இருப்பார்கள்.

நிதி நிலை
2023 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் நிதி நிலையில் திடீரென்று நல்ல முன்னேற்றம் ஏற்படும். ராகு 12 ஆவது வீட்டில் இருப்பதால், நிறைய செலவுகளை செய்ய நேரிடும். எனவே செய்யும் செலவுளை கண்காணியுங்கள். இந்த ஆண்டில் கடன் வாங்க வாய்ப்புள்ளது. இது உங்களின் நிதி நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதால் சற்று கவனமாக இருங்கள். முதலீடுகள் செய்வதாக இருந்தால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கல்வி
2023-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் மாணவர்கள் படிப்பில் படைப்பாற்றலையும், புத்திசாலித்தனத்தையும் காட்டுவார்கள். முயற்சிகள் அனைத்து அங்கீகரிக்கப்படும். சில முரண்பாடுகள் உங்களின் முன்னேற்றத்தைக் குறைக்கலாம். படிப்பில் நல்ல உயரத்தை அடைவதில் சற்று கவனம் செலுத்துங்கள். சிலர் ஆராய்ச்சி தொடர்பான படிப்புகளுக்காக வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது.

ஆரோக்கியம்
2023-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து கவனிக்க வேண்டும். ஃபிட்டாக இருக்க யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். இதனால் உடல் மற்றும் ஆரோக்கியம் புத்துயிர் பெறும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சரிவிகித டயட்டைக் கடைப்பிடிப்பதோடு, சரியான நேரத்தில் சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

சனிபகவானால் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்க ரிஷப ராசிக்காரர்களுக்கான பரிகாரங்கள்:
* சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றவர்களுக்கு உணவுகளை தானம் செய்யுங்கள்.
* ஒவ்வொரு சனிக்கிழமையும் அனுமனையும், சனி பகவானையும் வழிபடுங்கள். மேலும் அனுமன் சாலிவை தினமும் பாராயணம் செய்யுங்கள்.
* சனிக்கிழமைகளில் மது மற்றும் அசைவ உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications