Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
Saturn transit 2023 Effects: 2023 சனிப்பெயர்ச்சி யாருக்கு சூப்பரா இருக்கும்.. யாருக்கு மோசமா இருக்கும்..
2023 ஆம் ஆண்டின் ஜனவரி 17 ஆம் தேதி மாலை 05.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். இப்போது 2023 ஆம் ஆண்டில் 12 ராசிகளுக்குமான பொதுவான சனிப்பெயர்ச்சி பலன்கள் என்னவென்பதைக் காண்போம்.
வேத ஜோதிடத்தில், சனி பகவான் ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப பலனை அளிக்கக்கூடியவர். எனவே இது கர்ம கிரகமாக கருதப்படுகிறது. கிரகங்களில் சனி பகவான் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டுகள் ஆகும். அந்த வகையில் 2023 ஜனவரி 17 ஆம் தேதி மாலை 05.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சென்றார்.

அதன் பின் அதே ஜனவரி மாதம் 30 ஆம் தேதி மதியம் 12.02 மணி முதல் ஜனவரி 30 ஆம் தேதி இரவு 11.36 மணி வரை அஸ்தமன நிலையில் இருப்பார். அதன் பின்னர் ஜூன் 17 ஆம் தேதி இரவு 10.48 மணியில் இருந்து சனி கும்ப ராசியில் வக்ரமாகி, 2023 நவம்பர் 04 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து கும்ப ராசியில் நேர்பாதையில் பயணிப்பார். இப்போது 2023 ஆம் ஆண்டில் 12 ராசிகளுக்குமான பொதுவான சனிப்பெயர்ச்சி பலன்கள் என்னவென்பதைக் காண்போம்.

மேஷம்
2023 ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இது வருமான வீடாகும். எனவே இந்த 2023 ஆம் ஆண்டின் சனிப்பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலனை அளிக்கப் போகிறது. வருமானத்தில் எதிர்பாராத அதிகரிப்புகள் ஏற்படும் இதுவரை எதிர்கொண்ட சவால்கள் நீங்கி, கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவீர்கள். உங்களின் முழுமையற்ற திட்டங்கள் முழுமையாக முடிக்கப்படும் மற்றும் உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் ஆசைகள் மற்றும் லட்சியங்கள் நிறைவேறும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. திடீர் பண அதாயம் கிடைக்கும். மாமனார்-மாமியாருடனான உறவு சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்
2023 ஆம் ஆண்டின் ஜனவர் 17 ஆம் தேதி சனி பகவான் ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இது விதி வீடாகும். சனி பகவான் 10 ஆவது வீட்டில் இருப்பதால், முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புகளை வழங்குவார் மற்றும் எதிர்பாராத வெற்றி கிடைக்கும். வியாபாரிகள் அல்லது வேலை செய்பவர்கள் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலை விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் உங்கள் வணிகம் விரிவடையும். குடும்ப வாழ்க்கை சற்று டென்சன் நிறைந்திருக்கும். வேலையில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். திருமண வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் அந்த பிரச்சனைகளை நீங்கள் புறக்கணிப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்
2023 ஆம் ஆண்டின் ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் மிதுன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இந்த ஆண்டு மிதுன ராசிக்காரர்கள் அஷ்டம சனியில் இருந்து விடுபடுகிறார்கள். அதிர்ஷ்ட வீட்டில் சனி இருப்பதால், நீண்ட தூர பயணங்களால் வாழ்வில் வெற்றிக்கான வாய்ப்புக்களைத் தரும். இந்த ஆண்டில் உங்கள் தந்தையுடனான உறவுகள் பாதிக்கப்படும் மற்றும் அவரது ஆரோக்கியமும் மோசமாக இருக்கும். கடின உழைப்பால் ஒரு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எனவே இந்த ஆண்டில் சற்று கடினமான உழையுங்கள். பணி இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் ரிஸ்க் எடுக்க இது நல்ல ஆண்டு. உங்களின் கடன் குறையும். உங்கள் எதிரிகளை நீங்கள் வெல்வீர்கள்.

கடகம்
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் கடக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செல்கிறார். மேலும் இந்த ஆண்டில் கடக ராசிக்காரர்களுக்கு கண்டக சனியின் பலன் கிடைக்கும். உங்கள் மாமியார்-மாமனாருக்கு உதவ வாய்ப்பு கிடைக்கும். வேலையில் சில சவால்கள் இருக்கும். ஆனால் முயற்சித்தால் அதில் வெற்றி பெறுவீர்கள். இந்த ஆண்டில் வேலைத் தொடர்பான மன அழுத்தங்கள் இருக்கும். ஆனால் கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனத்தால் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். திடீர் பண ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது. குழந்தை தொடர்பான சில கவலைகள் எழும். காதல் விஷயங்களில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். மாணவர்கள் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். தற்போதைய வேலையில் இருந்து நல்ல வேலைக்கு மாறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

சிம்மம்
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செல்கிறார். எனவே திருமண வாழ்க்கை சற்று நன்றாக இருப்பதை உணர்வீர்கள். இருப்பினும் சர்வாதிகார மனப்பான்மையைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் திருமண வாழ்க்கை பாழாகும். இந்த ஆண்டில் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள் மற்றும் நீங்கள் அவருடன் சேர்ந்து புதிய தொழிலை தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பணியிடத்தில் உங்கள் திறமை வெற்றியைத் தரும். வேலை விஷயமாக பயணங்களை மேற்கொள்வீர்கள். வாழ்க்கைத் துணையுடன் பயணங்களை செய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஆரோக்கியத்தில் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் மிகப்பெரிய பிரச்சனையை சந்திப்பீர்கள். இந்த ஆண்டில் உங்கள் நல்ல ஆளுமையை வெளிப்படுத்த அதிக முயற்சி எடுப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் பதட்டமான சூழ்நிலை இருக்கும். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். மேலும் புதிய வீட்டைக் கட்ட திட்டமிடுவீர்கள்.

கன்னி
2023 ஆம் ஆண்டில் கன்னி ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் இந்த ஆண்டு உங்கள் எதிரிகளுக்கு கடினமாக இருக்கும். ஏனெனில் சனி பகவான் உங்களை இந்த ஆண்டில் வலிமையாக்குவார். எனவே இந்த ஆண்டில் உங்கள் எதிரிகளால் உங்களை வீழ்த்த முடியாது. இக்காலத்தில் நீங்கள் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் உங்கள் நிலை வலுவடையும். உங்கள் நிதி நிலையை வலுவாக்க, நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். இந்த ஆண்டின் ஆரோக்கிய பிரச்சனைகள் உங்களை தொந்தரவு செய்யலாம். பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுடன் நட்புறவைப் பேண முயற்சிக்க வேண்டும். நண்பர்களுடன் சண்டை போடுவதைத் தவிர்த்திடுங்கள்.

துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் இந்த ஆண்டின் சனியின் தாக்கத்தில் இருந்து முற்றிலும் விடுபடுவீர்கள். காதலிப்பவர்களுக்கு இந்த ஆண்டு சோதனை காலமாக இருக்கும். உறவில் நீங்கள் உண்மையாக இருந்தால், உங்கள் உறவு அழகாகும். இல்லாவிட்டால் உறவில் பதட்டங்கள் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சவால்களை எதிர்கொள்வார்கள். ஆனால் கடினமாக முயற்சித்தால் வெற்றி பெறுவார்கள். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். யாரையாவது விரும்பி திருமணம் செய்து கொள்ள விரும்பினால், இந்த நேரத்தில் நீங்கள் வெற்றி பெறலாம் அல்லது காதல் திருமணம் நடக்கலாம். திருமண வாழ்வில் காதல் அதிகரிக்கும் மற்றும் நிதி உயர்வும் ஏற்படும். முக்கியமாக உங்களின் வருமானத்தில் அதிகரிப்பைக் காண்பதோடு, ஆசைகள் நிறைவேறும் வாய்ப்புக்களும் உள்ளன.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். எனவே விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி தொடங்குகிறது. 4 ஆவது வீட்டில் சனி இருப்பதால், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இடையே இடைவெளி அதிகரிக்கும். வீட்டை மாற்ற வேண்டியிருக்கும். குடும்பத்தை விட்டு விலகி இருப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்வீர்கள். வீடு கட்ட வங்கி கடனுக்கு விண்ணப்பித்திருந்தால், அதில் வெற்றி கிடைக்கும். இந்த ஆண்டில் எந்த சொத்தை வாங்கும் முன்பும் நன்கு விசாரிக்க வேண்டும். உங்கள் தாயாரின் ஆரோக்கியதைக் கவனித்துக் கொள்ளுங்கள். தொழிலில் வெற்றி கிடைக்கும். கடினமாக உழைப்பீர்கள். இந்த ஆண்டின் எவ்வளவு தான் நீங்கள் சோர்ந்து, பலவீனமாக இருப்பதை உணர்ந்தாலும், வேலையில் உறுதியாக இருப்பீர்கள். இதனால் நல்ல பயனடைவீர்கள்.

தனுசு
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனுசு ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். எனவே இந்த ஆண்டு தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து முற்றிலும் விடுபட்டு, நிம்மதியாக உணர்வார்கள். இந்த ஆண்டில் நீங்கள் எந்த வேலையையும் மன உறுதியுடன் செய்தால், அதில் வெற்றி பெறுவீர்கள். இந்த ஆண்டில் நண்பர்கள், உறவினர்கள், உடன்பிறந்தவர்கள் என அனைவரும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு முழு ஆதரவை வழங்குவார்கள் மற்றும் அவர்களால் பணியிடத்தில் நீங்கள் நல்ல பதவியைப் பெறுவீர்கள். இந்த ஆண்டில் உங்களின் தைரியமும் வலிமையும் அதிகரிக்கும். வணிகர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். காதலிப்பவர்களுக்கு இந்த ஆண்டு நன்றாக இருக்கும். மாணவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். பயணங்களால் நற்பலன் கிடைக்கும். இந்த ஆண்டில் வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் 2 ஆவது கட்டம் முடிந்து, 3 ஆவது கட்டம் தொடங்குகிறது. 2 ஆவது வீட்டில் சனி இருப்பதால், கலவையான பலன்கள் கிடைக்கும். குடும்ப சூழல் சற்று பதட்டம் நிறைந்ததாக இருக்கும். ஆனால் நீங்கள் கடினமாக முயற்சி செய்தால், அனைத்து சூழ்நிலைகளையும் சிறப்பாக கையாண்டு வெற்றி பெறுவீர்கள். உங்களின் நிதி நிலை வலுவாக ஆரம்பிக்கும். கடந்த காலத்தில் செய்த கடின உழைப்பிற்கான பலன் இந்த ஆண்டில் கிடைக்கும். உங்களின் வங்கி இருப்பு நிலைபெறத் தொடங்கும். செல்வம் அதிகரிக்கும். சொத்து வாங்குவதிலும், விற்பதிலும் லாபத்தைப் பெறுவீர்கள். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். இந்த ஆண்டில் உங்கள் சமூக அந்தஸ்தும் உயரும். வியாபாரத்தில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய வேண்டும். வேலையில் நல்ல பதவி உயர்வு கிடைக்கும்.

கும்பம்
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியின் முதல் வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழுரை சனியின் முதல் கட்டம் முடிந்து, இரண்டாவது கட்டம் தொடங்குகிறது. எனவே பணியிடத்தில் எதையும் எதிர்பார்க்காமல் கடினமாக உழைத்தால், உங்களுக்கு வெற்றி கிடைக்கும். எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு நற்பலன்கள் கிடைக்கும். இந்த ஆண்டு தொழிலுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வியாபாரம் விரிவடையும். பணிபுரிபவர்களின் நிலை உயரும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆனால் உங்கள் உடன்பிறந்தவர்களை ஆரோக்கிய பிரச்சனை தொந்தரவு செய்யும். திருமண வாழ்க்கை அவ்வளவு நன்றாக இருக்காது. வேலை காரணமாக உங்கள் துணையை விட்டு பிரிந்திருக்க வேண்டியிருக்கும்.

மீனம்
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி மீன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் தொடங்குகிறது. 12 ஆவது வீட்டில் சனி இருப்பதால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த ஆண்டில் உங்களுக்குள் சோர்வு அதிகரிக்கும். இருப்பினும் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வெளிநாடு செல்வதன் மூலம் நல்ல பதவி கிடைக்கும். நெருங்கிய நண்பர் ஒருவரின் ஆரோக்கியத்திற்காக அதிகம் செலவிடுவீர்கள். எதிரிகள் மற்றும் நீதிமன்றம் தொடர்பான விஷயங்களுக்கு பணம் அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். இதனால் வெற்றி உங்களுக்கு கிடைக்கும். இந்த ஆண்டில் பல பயணங்கள் உங்கள் விருப்பத்திற்கு எதிராக இருக்கும் மற்றும் அது உங்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கும். இந்த ஆண்டில் நீங்கள் எது நல்லது எது கெட்டது என்பதை அறிந்து சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











