Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
சனிப் பெயர்ச்சி 2022: சனி பகவானின் அருளைப் பெற 12 ராசிகளுக்குமான பரிகாரங்கள்!
கும்பம் செல்லும் சனி பகவானால் உங்கள் ராசியில் மோசமான தாக்கத்தைத் தவிர்க்க நினைத்தால், ஜோதிட சாஸ்திரத்தில் சில எளிய பரிகாரங்கள் உள்ளன.
ஏழரை சனி என்றாலே அனைவருக்குமே பயம் தான். கிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் பயணிப்பார். இந்நிலையில் இதுவரை மகர ராசியில் பயணித்து வந்த சனி பகவான், 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி, அதாவது இன்று கும்ப ராசிக்கு செல்கிறார். இதனால் தனுசு ராசிக்காரர்கள் சனியின் பிடியில் இருந்து விடுபடுகிறார்கள். மகரம், கும்பம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது, அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களும், சிலருக்கு மோசமான பலன்களும் கிடைக்கலாம். கும்பம் செல்லும் சனி பகவானால் உங்கள் ராசியில் மோசமான தாக்கத்தைத் தவிர்க்க நினைத்தால், ஜோதிட சாஸ்திரத்தில் சில எளிய பரிகாரங்கள் உள்ளன. அந்த பரிகாரங்களை செய்து வந்தால், சனியின் வக்ர பார்வையைத் தவிர்த்து, அவரது அருளைப் பெறலாம். இப்போது ஒவ்வொரு ராசிக்குமான பரிகாரங்களைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் 2022 சனிப் பெயர்ச்சியின் மோசமான தாக்கத்தில் இருந்து விடுபட தினமும் குளிக்கும் நீரில் சிறிது கருப்பு எள்ளைப் போட்டுக் குளியுங்கள்.

ரிஷபம்
2022 சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு, ரிஷப ராசிக்காரர்கள் சனிபகவானின் அருளைப் பெறுவதற்கு இரும்பு மோதிரத்தை நடுவிரலில் அணிந்து கொள்ள வேண்டும்.

மிதுனம்
மிதுன ராசியை சேர்ந்தவர்கள் சனி பகவானின் கோபத்தைக் குறைத்து அவரது அருளைப் பெறுவதற்கும், நல்ல ஆரோக்கியத்திற்காகவும் சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு கடுகு எண்ணெய் விளக்கு ஏற்ற வேண்டும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் சனி பகவானின் மோசமான விளைவுகளைத் தவிர்க்க சனிக்கிழமைகளில் கருப்பு நிற ஆடைகள் மற்றும் காலணிகளை தானமாக வழங்க வேண்டும்.

சிம்மம்
சிம்ம ராசியைச் சேர்ந்த மக்கள் சனி பகவானின் பரிபூர்ண அருளைப் பெற சனிக்கிழமைகளில் மாலை வேளையில் கருப்பு நிற நாய்க்கு பால் மற்றும் பிரட்டை வழங்க வேண்டும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் 2022 சனிப் பெயர்ச்சி பரிகாரமாக சனிக்கிழமை மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் அரச மரத்திற்கு அடியில் கடுகு எண்ணெய் தீபத்தை ஏற்ற வேண்டும்.

துலாம்
துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் 2022 சனி பெயர்ச்சியால் சந்திக்கும் மோசமான விளைவுகளில் இருந்து விடுபட்டு, சனியின் அருளைப் பெறுவதற்கு நீலம் அல்லது கருப்பு நிற ஆடைகளை சனிக்கிழமைகளில் அணிய வேண்டும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் சனி பகவானின் கோபத்தைத் தணித்து அருளைப் பெறுவதற்கு சனிக்கிழமைகளில் சனி பகவான் கோவிலுக்கு கருப்பு நிற உளுத்தம் பருப்பை தானமாக வழங்குங்கள்

தனுசு
தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமைகளில் கடுகு எண்ணெயை ஏழை எளியோருக்கு தானமாக வழங்கினால், சனி பகவானின் அருளைப் பெறலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் லபிஸ் லசுலி நீலக்கல் மோதிரத்தை நடுவிரலில் அணிந்து கொண்டால், சனி பகவானின் அருளைப் பெறலாம்.

கும்பம்
கும்ப ராசியைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமைகளில் சனி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து, சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால், சனி பகவானின் பரிபூர்ண அருள் கிடைக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களே! 2022 சனி பெயர்ச்சியின் மோசமான தாக்கத்தைத் தவிர்த்து சனி பகவானின் அருளைப் பெற சனிக்கிழமைகளில் தொழிலாளர்களுக்கு ஆடைகளை தானம் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications
