Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
எச்சரிக்கை.. இந்த 4 ராசிகளின் மீது சனி பகவானின் மோசமான பார்வை இருக்குதாம்.. உங்க ராசி இதுல இருக்கா?
சனி மகர ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். சனி பகவான் ஒரு ராசியில் பயணிக்கும் போது, அவரின் பார்வை ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மாதிரி விழும்.
நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக சனி நகர்வதால், சனியின் தாக்கம் ஒருவரின் வாழ்வில் அதிகம் இருக்கும். சனி பகவான் ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். தவறான செயல்களை செய்பவர்களுக்கு தவறாமல் தண்டனையை வழங்குவார்.

இந்த சனி மகர ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். சனி பகவான் ஒரு ராசியில் பயணிக்கும் போது, அவரின் பார்வை ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மாதிரி விழும். இப்போது சனியின் மோசமான பார்வை எந்த ராசிக்காரர்களின் மீது உள்ளது என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களின் மீது சனி பகவான் மோசமான பார்வையைக் கொண்டுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமணமாகாதவர்களுக்கு திருமணத்தில் இன்னும் அதிக தடைகள் வரும். சனி பகவானின் மோசமான தாக்கத்தைத் தவிர்க்க சனிக்கிழமைகளில் சனி சாலிசாவை பாராயணம் செய்வது நல்லது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி நடக்கிறது. எனவே வரக்கூடிய நாட்களில் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் சற்று சிரமங்களை சந்திக்க நேரிடும். இந்த காலத்தில் தவறான செயல்களில் இருந்து சற்று விலகி இருங்கள். இல்லாவிட்டால் பெரிய சிக்கலில் சிக்கி தவிப்பீர்கள். வாக்குவாதங்களைத் தவிர்த்திடுங்கள். இந்த ராசிக்காரர்களின் சனி பகவானின் மோசமான தாக்கத்தைத் தவிர்க்க சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு கடுகு எண்ணெய் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களின் மீதும் சனியின் மோசமான பார்வை விழுகிறது. எனவே இந்த ராசிக்காரர்களையும் சனி பகவான் தொந்தரவு செய்வார். முக்கியமாக ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். சனி பகவானை மகிழ்விக்க சனி தொடர்பான பரிகாரங்களை செய்யுங்கள். அதுவும் சனிக்கிழமையன்று கோயில்களில் சனிபகவானை தவறாமல் வழிபட்டு வர நன்மை கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடக்கிறது. என்ன தான் சனி பகவான் உங்களின் அதிபதியாக இருந்தாலும், இந்த காலகட்டத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். சனி தாக்கத்தைக் குறைக்க சனிக்கிழமையன்று சனி சாலிசாவை பாராயணம் செய்வது நற்பலனைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications