Just In
- 11 hrs ago
இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி?
- 14 hrs ago
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
- 14 hrs ago
மிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டம் பெற்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..
- 16 hrs ago
திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் - எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை கும்பிடணும் தெரியுமா?
Don't Miss
- News
நான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு
- Automobiles
2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...
- Movies
இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்!
- Finance
எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..!
- Technology
ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு
- Sports
நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்!
- Education
பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம்! தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியா - பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து - முஸ்லீம் ஓரினச்சேர்க்கை தம்பதி...
அன்பு எல்லா தடைகளையும் தற்போது உடைத்து எறிந்துள்ளது. அன்பு ஒன்றே போதும் எல்லா ஆத்மாக்களையும் நம்மால் சரி செய்ய முடியும். ஏன் இந்த அன்பைக் கொண்டு இரு நாடுகளுக்கிடையேயான உடைந்த உறவைக் கூட மீட்டெழுப்ப முடியும். அந்த மாதிரி தான் இந்த இரண்டு காதல் ஜோடிகளும் பல தடைகளை மீறி சேர்ந்துள்ளனர்.
காதல் என்பது ஆண் பெண் உறவு என்பதை மாற்றி ஒரே பாலினத்தை சேர்ந்த இரண்டு பெண்களும் இணைந்திருப்பது புதிது. இதன்படி சுந்தாஸ் மாலிக் மற்றும் அஞ்சலி சக்ரா ஆகியோர் தங்கள் காதலை வெளிப்படுத்தி இணைந்துள்ளனர். அவர்கள் இதை உலகுக்கு வெளிப்படுத்த முடிவு செய்தனர். இதனால் இந்தியருக்கும் பாகிஸ்தானியருக்கும் இடையே ஆன இந்த காதல் தற்போது புதிய அர்த்தம் பெற்றுள்ளது.
|
அன்பான போட்டோ ஷூட்
நியூயார்க்கில் அவர்கள் இருவரும் இணைந்து எடுத்த போட்டோ ஷூட் சமீபத்தில் இணையத்தை மூழ்கடித்துள்ளது. இந்த இரண்டு அழகான பெண்களும் பாரம்பரிய உடையில் கம்பீரமான காதலுடன் தங்கள் அன்பை வெளிப்படுத்தி இருப்பது அழகு. லெஹங்கா, சேலை அணிந்து பொட்டு வைத்து நகைகள் அணிந்து அழகாக காட்சி அளித்தனர். அதிலும் நியூயார்க் நகரத்தின் அழகிய பிண்ணனி கொண்டு மழைச் சாரல் நடுவே குடைகளுக்குள் எடுத்த படங்கள் அனைத்தும் எல்லா இதயங்களையும் வென்று விட்டது.
|
மாறான பாராட்டுகள்
இந்த ஒரே பாலின காதலை மக்களும் பாராட்டி தங்கள் கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளனர். ஒரு ட்விட்டர் பயனர் இவ்வாறு கூறியுள்ளார்
" பல நிலைகளில் புரட்சி தலைகாட்டியுள்ளது, இந்து - முஸ்லிம், இந்தியா - பாகிஸ்தான், இரண்டு அழகான பெண்களிக்கிடையே மலர்ந்த காதல்" என்று கூறி அந்த பெண்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை வழங்கி உள்ளார்.
|
மற்றொரு பயனர்
"காதல், இதயம் மற்றும் உணர்வுகள் இணைய எந்த மதமும் எல்லைகளும் இல்லவே இல்லை, நீங்கள் ஓர் அற்புதமான ஜோடி. உங்கள் இருவருக்கும் கடவுளின் ஆசியும் அன்பும் இருக்கும் "என்று கூறியுள்ளார்.
|
இன்ஸ்ட்டாகிராம் பகிர்வு
பாகிஸ்தானிய கலைஞரான மாலிக் இந்த புகைப்படங்களை இன்ஸ்ட்டாகிராமில் பதிவு செய்து கொண்டுள்ளார். குர்தா போன்ற கேஷூவல் ஆன ஆடைகளிலிருந்து பாரம்பரிய உடைகளான லெஹங்கா போன்றவற்றிற்கு மாறுவது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஆனால் எங்களுடைய போட்டோ ஷூட் அழகாக வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

ஓரினச் சேர்க்கை தீர்ப்பு
6 செப்டம்பர் 2018 ஆம் ஆண்டு தீர்ப்பு இந்தியாவில் ஓரினச் சேர்க்கையை நியாயப்படுத்தியது. என்ன தான் தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும் சமூக மக்கள் இதை ஏற்றுக் கொள்வது எளிதான விஷயமல்ல. ஆனால் இன்றளவும் சுற்றுப்புறங்களில் இந்த மாதிரியான ஓரினச் சேர்க்கையாளர்களை ஒரு மாதிரியாக ஒதுக்கி வைப்பது பார்ப்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது.
சமூக மக்கள் இதற்கு சார்பற்றதாகவே இருக்கின்றனர். சமீபத்தில், இந்த நியாயப்படுத்தலுக்காக போராடிய இரண்டு பெண் வழக்கறிஞர்களான மேனகா குர்ஸ்வாமி மற்றும் அருந்ததி கட்ஜு ஆகியோர் ஒரு ஜோடியாக வெளியே வந்து புரட்சி செய்தனர். அதைத் தொடர்ந்து இந்த ஜோடிகளும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இயற்கையாக தங்களுக்கு ஏற்பட்டுள்ள உணர்வுகளை வெளிப்படுத்தி இருப்பது பெரிய விஷயம்.
MOST READ: மகளின் சடலத்தை தந்தை தோளில் சுமந்து சென்ற கொடூரம்...

மாற்றங்கள் படிப்படியாக
இந்த மாதிரியான இயற்கை புரிதல் தற்போது தான் படிப்படியாக ஏற்பட்டு கொண்டு வருகிறது. அந்த வகையில் சுந்தாஸ் மற்றும் அஞ்சலியின் போட்டோஷூட் ஒரு மில்லியன் நம்பிக்கையான இதயங்களுக்கு சூரிய ஒளியைக் கொடுத்துள்ளது என்றே கூறலாம். அன்பு இனி ஒரு குற்றமாகவோ அல்லது வரையறுக்கப்பட்ட ஒன்றாகவோ இருக்காது. மாறாக அவர்களின் வாழ்க்கையின் அழகிய கொண்டாட்டமாக இருக்கும்.
இயற்கையோடு ஒட்டிய ஒரு புதிய உலகத்தை உருவாக்க இந்த சிறு மாற்றம் நமக்கு உத்வேகத்தை கொடுக்கும் என நாம் நம்புவோம்.