Just In
- 8 min ago
இந்த பழக்கங்கள் உங்கள் மூளையை உள்ளே இருந்து சேதப்படுத்துகிறது என்பது தெரியுமா?
- 23 min ago
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில எப்பவுமே நிம்மதி இருக்காதாம்... கவலைப்பட்டுட்டே இருப்பாங்களாம்...!
- 38 min ago
வயதின் அடிப்படையில் உங்களுக்கு இதய நோய் ஏற்படுமாம்... ஆய்வு என்ன சொல்கிறது? அது எந்த வயது தெரியுமா?
- 2 hrs ago
சர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
Don't Miss
- Finance
தமிழ்நாடு அரசின் அடுத்த சிக்ஸர்.. செமிகண்டக்டர் உற்பத்தியில் கலக்க பலே திட்டம்!
- Sports
இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து.. இங்கிலாந்தின் பலே மூவ்.. பந்துவீச்சு தேர்வு செய்ததன் பின்னணி?
- Automobiles
ஒரே ஆண்டில் 27 சதவீத வளர்ச்சி... எம்ஜி செய்த எதிர்பாராத சாதனை...
- Movies
Yaanai Review: கம்பீரமாக கம்பேக் கொடுத்தாரா இயக்குநர் ஹரி? அருண் விஜய் நடித்த யானை விமர்சனம் இதோ!
- News
உலகில் அதிவிரைவாகக் கரைந்து காணாமல் போகும் பொருள்.. வேறென்னங்க.. சம்பளப் பணம்தான்!
- Technology
iPhone வச்சிக்கிட்டு ஓவர்-சீன் போடுறாங்களா? "இதை" சொல்லுங்க.. அடங்கிடுவாங்க!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
Sagittarius Horoscope 2022: குருவின் அருளால் தனுசு ராசிக்காரர்களுக்கு 2022 எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
நீங்கள் தனுசு ராசிக்காரரா? உங்களுக்கு 2022 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? வேத ஜோதிடத்தின் படி 2022 ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு நிதி அடிப்படையில் சாதகமாக இருக்கும் மற்றும் ஆண்டின் தொடக்கம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். பிப்ரவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் உங்கள் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவீர்கள். ஆண்டின் தொடக்கத்தில் மன கவலைகள் மற்றும் மன உளைச்சல் ஏற்படுவதோடு, குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
ஆனால் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கிடையே குரு அதன் சொந்த ராசியான மீனத்தில் செல்வதால், வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். ஜூன், ஜூலை மாதங்களில் திருமண வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். நவம்பர் முதல் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவீர்கள். ஜூன் மாதத்தில் இருந்து அக்டோபர் வரை, உங்களுக்கு எந்த நோயும் அண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது தனுசு ராசிக்கு 2022 ஆம் ஆண்டு எப்படி இருக்கப் போகிறது என்பதை விரிவாக காண்போம்.

2022-ல் காதல் வாழ்க்கை
2022-ல் தனுசு ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது. உங்கள் காதலி/காதலனுடன் நிறைய நேரத்தை செலவழிப்பீர்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 2022ல் சமூக அந்தஸ்து பிரகாசமாக மாறும். இந்த ஆண்டு எதையும் செய்வதற்கு முன் சூழ்நிலைக்கு ஏற்ப சரியான முடிவுகளை எடுக்க முயலுங்கள். திருமணமாகாதவர்களுக்கு இந்த ஆண்டில் பிப்ரவரி மாதம் திருமணத்திற்கு மிகவும் சாதகமான மாதம் ஆகும்.

2022-ல் தொழில் வாழ்க்கை
தனுசு ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, 2022 ஆம் ஆண்டு ஓரளவாகவே இருக்கும். தொழில் தொடங்க நினைப்பவர்கள், ஆண்டில் தொடக்கத்தில் செய்யாமல் தள்ளிப் போடுங்கள். அதேப் போல் புதிய அல்லது பெரிய முதலீடுகள் செய்வதையும் தவிர்த்திடுங்கள். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு உங்களின் புதிய முயற்சிகளை தொடங்கலாம். குறிப்பாக கூட்டாண்மை வணிகம் செய்ய நினைப்பவர்களுக்கு, இது சாதகமான காலம்.

2022-ல் கல்வி
2022 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, தனுசு ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவார்கள். வெளிநாட்டில் உயர்கல்வி பெற விரும்பும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு அதிர்ஷ்டமாக இருக்கும்.

2022-ல் நிதி நிலைமை
தனுசு ராசிக்காரர்களின் நிதியைப் பொறுத்தவரை, ஆண்டின் தொடக்கம் சற்று கலவையானதாக இருக்கும். சனி இரண்டாவது வீட்டில் இருப்பதால், செல்வம் தொடர்ந்து சேர்ந்தவாறு இருக்கும். செல்வம் சேரும் போது அதை சேமித்து வைத்து முதலீடு செய்வதால் நிதி நிலை மேம்படும். அதுவும் நகைகள் மற்றும் ரத்தின கற்களில் முதலீடு செய்யலாம். மூதாதையர் சொத்துக்களைப் பெறுவீர்கள். குடும்ப விழாக்களுக்கு செலவுகளை செய்வீர்கள். ஆனால் 2022 ஆம் ஆண்டில் முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் மற்றும் எந்த ஒரு அபாயகரமான முயற்சியையும் எடுக்காதீர்கள்.

2022-ல் குடும்ப வாழ்க்கை
2022 ஆம் ஆண்டில் தனுசு ராசிக்காரர்களின் குடும்ப வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். இந்த ஆண்டில் புதிய மற்றும் அசாதாரண அனுபவங்களின் மூலம் பல விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். குழந்தைகள் அல்லது காதல் உறவின் மூலம், சலிப்பான வாழ்க்கையில் இருந்து வெளிவந்து, புதிய வாழ்க்கையை நடத்துவீர்கள். மொத்தத்தில் இந்த ஆண்டு குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.

2022-ல் குழந்தைகள்
2022 ஆம் ஆண்டில் தனுசு ராசிக்காரர்களின் குழந்தைகளுக்கு கலவையான பலன்களைத் தருவதாக இருக்கும். உங்கள் குழந்தைகள் உயர்கல்வி படிக்க நினைத்தால், ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் சேர்க்கை பெறலாம். ராகு பெயர்ச்சிக்கு பின், உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் கல்வியில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

2022-ல் திருமண வாழ்க்கை
2022 ஆம் ஆண்டில் தனுசு ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை, ஆண்டின் தொடக்கம் மங்களகரமானதாக இருக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. ஏப்ரல் மாதத்திற்கு பிறகு, இந்த ராசிக்காரர்களின் இரண்டாவது குழந்தைக்கு சாதகமான காலமாகும். காதலிப்பவர்களுக்கு இந்த ஆண்டில் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.

2022-ல் வியாபாரம்
2022 ஆம் ஆண்டில் தனுசு ராசிக்காரர்களின் வியாபாரத்தைப் பொறுத்தவரை, சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பதால், மார்ச் முதல் நவம்பர் வரை உங்கள் வணிகத்தில் அதிக நிதி லாபம் கிடைக்கும். இருப்பினும் நிதியைக் கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும். எந்த தரகர் அல்லது கமிஷன் ஏஜென்ட்டையும் கண்மூடித்தனமாக நம்பிடாதீர்கள். ஆண்டின் ஆரம்பம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் உங்கள் பங்குதாரர் உங்களுக்கு முழு முக்கியத்துவத்தை கொடுப்பார். உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவதில் உங்கள் பங்குதாரரின் உதவியைப் பெறுவீர்கள். வணிக பயணங்கள் அதிகரிக்கும்.

2022-ல் சொத்து மற்றும் வாகனம்
2022 ஆம் ஆண்டில் தனுசு ராசிக்காரர்களுக்கு சொத்துக்களை வாங்குவதற்கான நல்ல வாய்ப்புக்கள் உள்ளன. அதுவும் தந்தையின் மூலம் மூதாதையர் சொத்துக்களைப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. சொத்துக்கள் வாங்குவதில் வெற்றி பெறுவார்கள். வீடு, வாகனம் வாங்கும் உங்களின் கனவு வெற்றியடையும். இந்த ஆண்டு நீங்கள் செய்த முதலீடு நல்ல பலனைத் தரும். மேலும் நீங்கள் அவசரமாக முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நீங்கள் செல்வத்தை குவிப்பதற்கும் உங்கள் சொத்துக்களை வாங்குவதற்கும் மிகவும் சாதகமான காலமாக இருக்கும்.

2022-ல் ஆரோக்கியம்
தனுசு ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு சராசரியாக இருக்கும். உங்களால் சரியான நேரத்தில் உணவை உண்ண முடியாமல் போகலாம். இதனால் உங்கள் உடல்நிலை மோசமடையலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், உங்களின் தினசரி வழக்கங்கள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களை சரியாக கடைப்பிடிக்க வேண்டும். ராகு 5 ஆவது வீட்டிற்கு செல்வதால், வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆகவே இந்த விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள்.