For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சச்சின் பாராட்டிய மாற்றுத்திறனாளி சிறுவன்…அந்த சிறுவன் செய்தது என்ன தெரியுமா?

சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மாற்றுத்திறனாளி மாணவன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

|

திறமைக்கு முன்பு அழகு, அந்தஸ்து, பாலினம், வயது இவை ஏதும் முக்கியமில்லை என்பது ஒவ்வொரு நிகழ்வின்போது காலம் நமக்கு உணர்த்தி வருகிறது. நம் நாட்டில் திறமைக்கு மதிப்பு கொடுப்பை காட்டிலும், மற்ற சில விஷயங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் ஊழல் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பது அவ்வப்போது வெளிவரும் செய்திகள் நமக்கு வெளிச்சம்போட்டுக் காட்டிவிடுகின்றன.

sachin-tendulkar-shares-a-heartwarming-video-of-differently

விளையாட்டுத் துறை மட்டும் என இதற்கு விதி விலக்கா? என்றால் இல்லை. விளையாட்டுத் துறையில் திறமைக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே. விளையாட்டுத் துறையில் நடக்கும் அரசியல் குறித்து பல்வேறு படங்களும் பேசியிருக்கின்றன. கை, கால்கள் நன்றாக இருந்தால் மட்டும்தான் விளையாட முடியுமா என்றால் இல்லை என்றே பதில் கூறலாம். மாற்று திறனாளிகள் நிறைய பேர் விளையாட்டுத் துறைகளில் சாதித்து வருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட் விளையாட்டில் சாதனை படைத்த, சின்ன குழந்தைகளிடம் கேட்டாலும் அவரது பெயரைச் செல்லும் ஒரு கிரிகெட் ஜாம்பவான்தான் சச்சின் டெண்டுல்கர். இவர் சர்வதேச கிரிகெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்று 7 ஆண்டுகள் ஆகின்றன. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், அதன் மீதான ஆர்வம் மட்டும் அவருக்கு குறையவே இல்லை. காரணம் சிறிய வயதிலிருந்தே அவருக்கு கிரிகெட் என்றால் உயிர்.

MOST READ:உடலுறவில் கூடுதல் சுவாரஸ்யம் அடைவதற்கான புதிய வழிகள் என்னென்ன தெரியுமா?

புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள்

2020 புத்தாண்டு தொடங்கிய நிலையில், தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துவந்தனர். இந்நிலையில், இந்திய கிரிகெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் இந்த புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும், செழிப்பையும் தரட்டும் என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

அதைத்தொடர்ந்து, சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மாற்றுத்திறனாளி மாணவன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், ‘ கிரிக்கெட் விளையாடும் சிறுவன் மடா ராமின் இந்த வீடியோவோடு 2020 ஆம் ஆண்டை தொடங்குங்கள். என் மனதை உருக்கியது போல உங்கள் மனதையும் இது உருக்கும்' என்று பதிவிட்டிருக்கிறார். சமீபத்தில் வைரலான இந்த வீடியோவை சச்சின் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதால், அது மேலும் வைரலாகியுள்ளது.

மாற்று திறனாளி சிறுவன்

மாற்று திறனாளி சிறுவன்

மடா ராம் என்ற மாற்றுத் திறனாளி சிறுவனால் நடக்கவோ நிற்கவோ முடியாது. ஆனாலும் அவன் விருப்பத்துடன் தன்னம்பிக்கையுடன் கிரிக்கெட் விளையாடுவதை எளிதாகக் காணலாம். ராம் கிரிகெட் மட்டையால் பந்தை அடித்தது மட்டுமல்லாமல், வேகமாக ஊர்ந்து சென்று ரன் எடுப்பதையும் அந்த வீடியோவில் காணலாம். அவரது வேகத்தையும் அர்ப்பணிப்பையும் கண்டு அனைவரும் ஆச்சரியப்படுவீர்கள். முகத்தில் எந்த கவலை மற்றும் வேதனையும் இல்லாமல், மகிழ்ச்சியாக கிரிக்கெட் விளையாடும் சிறுவனின் திறமையை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

MOST READ:இந்த தருணங்களின்போது உங்கள் வாழ்க்கை துணை உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்...!

தன்னம்பிக்கை வேண்டும்

தன்னம்பிக்கை வேண்டும்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நெட்டிசன்களை உணர்ச்சி வசப்படுத்தியது. பலரும் அச்சிறுவனைப் பாராட்டி வருகின்றனர். இச்சிறுவன் அவன் மீது கொண்டுள்ள தன்னம்பிக்கையை நாம் அனைவரும் நம் மீதும் வைக்க வேண்டும். விருப்பம் மற்றும் சக்தி ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் தங்களின் சிறந்த திறமை வெளிப்படும் என்பதில் மாற்றமில்லை.

பாராட்டுக்கள்

பாராட்டுக்கள்

55 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில் மாற்றுத் திறனாளியான ஒரு சிறுவன் கிரிக்கெட்டை எவ்வாறு விளையாடுகிறான் என்பதை காட்டுகிறது. இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கிறான் அச்சிறுவன். ஒரு சிறிய வீரரையும், விளையாட்டின் மீதான அவரது அர்ப்பணிப்பையும் சச்சின் பாராட்டியதற்கு அனைவரும் சச்சினுக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

sachin tendulkar shares a heartwarming video of differently abled boy playing cricket

Here sachin tendulkar shares heartwarming video of differently abled boy playing cricket.
Story first published: Thursday, January 2, 2020, 17:28 [IST]
Desktop Bottom Promotion