For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆற்றுக்கால் பகவதி அம்மன் வரலாறு: பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் கோவில் பற்றி தெரியுமா?

இந்தியாவில் எத்தனையோ கோவில்களில் ஆண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த கோவில்களில் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதில் முதன்மையான கோவில் நம் அனைவருக்கும் தெரிந்த ஆற்றுக்கால் பகவதி அம்மன்

|

மத வழிபாட்டுத் தலங்கள் என்பவை ஜாதி பேதம் இல்லாமல் அனைவரும் சென்று வருவதற்கு தான் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் ஏழை, பணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எந்த பாகுபாடும் பார்க்கப்படுவதில்லை. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரிட்டிஷ் இந்தியாவில், கோவில்களில் நுழைய பாகுபாடு இருந்தது.

Attukal Bhagavathy Temple History In Tamil

ஆனால், அவை எல்லாமே பல்வேறு சமூக சீர்த்திருத்தவாதிகளின் போராட்டத்தின் காரணமாக, கோவில்களில் நுழைவதற்கு இருந்த தடைகள் அகற்றப்பட்டு அனைவருமே கோவில்களுக்கு சென்று வருகின்றனர். ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என வேறுபாடு பார்க்கப்படுவதில்லை. அனைவருமே சரி நிகர் சமம் என்ற அடிப்படையில் எந்த பேதமும் பார்க்காமல் கோவில்களில் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.

MOST READ: உங்க ராசிக்கு 2020 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இத படிங்க...

ஆனால், இந்தியாவில், சில பழமையான புகழ்பெற்ற கோவில்களில் ஆகம விதிகள் இன்றும் கூட கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. அதே போல் சில கிராமப்புற கோவில்களிலும் கூட அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தவிர பிற ஊர்களைச் சேர்ந்தவர்கள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. அதில் சிறிதளவும் சமாதானம் என்ற பேச்சே எழாத வகையில் ஆகம விதிகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடுமையான ஆகம விதிமுறைகள்

கடுமையான ஆகம விதிமுறைகள்

ஆகம விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வரும் எத்தனையோ கோவில்களில், நமக்கு தெரிந்தது சபரிமலை ஐயப்பன் கோவில். இங்கு 10 வயதுக்கு மேற்பட்டு 60 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழைய அனுமதி கிடையாது. பெண்களை நுழைய அனுமதிக்க வேண்டும் என்று, கேரளா அரசு எவ்வளவோ போராடிப் பார்த்தது. இறுதியில் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. உச்ச நீதிமன்றமும் கேரளா அரசுக்கு ஆதரவாக, சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் நுழையலாம் என்று தீர்ப்பளித்தது. ஆனாலும் கூட, சபரிமலையில் பெண்களை நுழையவிடாமல் பக்தர்கள் போராடி தடுத்துவிட்டனர்.

ஆண்கள் நுழைய தடா

ஆண்கள் நுழைய தடா

அதே போல், இந்தியாவில் எத்தனையோ கோவில்களில் ஆண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த கோவில்களில் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதில் முதன்மையான கோவில் நம் அனைவருக்கும் தெரிந்த ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில். இக்கோவிலை பெண்களின் சபரிமலை என்றும் அழைப்பதுண்டு.

பொங்கல் இடும் விழா

பொங்கல் இடும் விழா

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உலகம் முழுவதும் புகழ்பெற்ற கோவில் என்பது கூடுதல் சிறப்பாகும். இதற்கு முக்கிய காரணம் இந்த கோவிலில் நடைபெறும் பொங்கல் இடும் திருவிழாவாகும். இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டு வழிபாடு நடத்துவார்கள். இதற்காகவே இக்கோவில் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றது.

கண்ணகியின் அவதாரம்

கண்ணகியின் அவதாரம்

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் 45 லட்சம் பெண் பக்தர்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டது குறிப்பிடத்தக்கது. பொங்கல் விழா ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலின் கடவுள் பார்வதி தேவி ஆவார். இவரைத்தான் பகவதி அம்மனாக வழிபாடு செய்து வருகின்றனர். ஆனால் இன்னும் சிலர், கண்ணகியின் அவதாரமே ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று தலபுராணமாக கூறகின்றனர்.

சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்

சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்

பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மற்றொரு கோவிலானது, கோளா மாநிலம் ஆலப்புழா மற்றம் பட்டனம் திட்டா மாவட்டங்களின் எல்லையில் உள்ள நீரேற்றுபுரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. பெரும்பாலான பெண்கள் இருமுடி கட்டி விரதம் இருந்து இந்த சக்குளத்துக்காவு பகவதி அம்மனை தரிசிக்க வருகின்றனர். பம்பை ஆறும் மணிமலை ஆறும் இக்கோவிலின் இரண்டு பக்கமும் மாலை போலு சூழ்ந்து ஓட நடுவில் இக்கோவில் அமைந்துள்ளது.

பெண்களுக்கு பாத பூஜை

பெண்களுக்கு பாத பூஜை

இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும், பாத பூஜை என்று சொல்லப்படும் நாரி பூஜை விழாதான் மிகச்சிறப்பான விழாவாகும். இந்த பூஜையில் கலந்துகொள்ளும் பெண்கள் அனைவரும் 10 நாட்கள் விரதம் இருந்து, இந்த பூஜையில் கலந்துகொள்கின்றனர். இங்கு பெண்களை பீடத்தில் அமரச் செய்து அவர்களின் பாதங்களை தலைமை பூசாரி தனது கைகளால் நீர் ஊற்றி கழுவி அவர்களுக்கு பாத பூஜை செய்து வணங்குவார். அதைத் தொடர்ந்து அங்கு வந்திருக்கும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கும் பாத பூஜை நடத்தப்படும். இந்த பூஜையில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதியுண்டு. ஆண்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் இந்த பூஜை துர்கா தேவிக்கு சமர்ப்பணம் செய்யப்படுவதாக ஐதீகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Attukal Bhagavathy Temple History in Tamil | ஆற்றுக்கால் பகவதி அம்மன் வரலாறு: பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் கோவில் பற்றி தெரியுமா?

Any mention of Attukal Bhagavathy temple is incomplete without talking about its The temple is therefore aptly known as Sabarimala for Women.
Desktop Bottom Promotion