Just In
- 1 hr ago
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- 9 hrs ago
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- 10 hrs ago
ஆண்களே! நீங்க 'அந்த' விஷயத்தில் இப்படி செயல்பட்டால்... இருவரும் இருமடங்கு உச்சக்கட்டத்தை அடையலாமாம்!
- 10 hrs ago
வாஸ்துப்படி வீட்டின் எந்த திசையில் குப்பை தொட்டியை வைக்க வேண்டும் தெரியுமா?
Don't Miss
- News
இதுதான் டாடா.. A டூ Z எல்லாமே பக்கா ஸ்கெட்ச்.. மின்சார கார் சந்தையில் டாடா போடும் மெகா பிளான்
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Movies
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
தங்கம் அணியும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்... இந்த ராசிக்காரங்க தங்கம் போடாம இருக்கிறதே நல்லது...
இயற்கை ரத்தினக் கற்களின் ஆன்மீக சக்திகள் நன்கு அறியப்பட்டவை. மகிழ்ச்சிக்காகவும், அதிர்ஷ்டத்திற்காகவும், ஆன்மீக அமைதிக்காகவும் தங்கம் அல்லது வேறு எந்தக் கல்லையும் அணியும் வழக்கம் அனைத்து கலாச்சாரங்களிலும் உள்ளது. தங்க நகைகளை அணிவதன் முக்கிய நன்மைகள் சில உடலில் எதிர்மறை சக்தியைத் தடுப்பது, உடலில் தெய்வீக உணர்வை அதிகரிப்பது மற்றும் எதிர்மறை ஆற்றல்களில் இருந்து பாதுகாப்பு போன்றவையாகும்.
பல ஆண்டுகளாக தங்கம் மனிதனுடன் ஆபரணமாகவோ, பணமாகவோ அல்லது சமூக அந்தஸ்தின் அடையாளமாகவோ இருந்து வருகிறது. ஆனால் அந்தஸ்து சின்னத்தை விட உங்களுக்கு தங்கத்திற்கு பல ஆன்மீக சக்திகள் உள்ளன, அதை சரியாக அணிவதன் மூலம் மகிழ்ச்சி, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை கொண்டு வர முடியும். தங்கம் அணிவதால் ஏற்படும் சில நன்மைகள் மற்றும் உங்கள் நலனுக்காக பாரம்பரியமாக பரிந்துரைக்கப்பட்ட சில விதிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

தங்க மோதிரம்
உங்கள் மோதிர விரலில் தங்க மோதிரத்தை அணிவதன் மூலம், நீங்கள் தெய்வீக உணர்வை ஈர்க்கலாம். தெய்வீக ஆற்றல் செயல்படுத்தப்பட்டு தங்க மோதிரத்திலிருந்து வெளிப்படுகிறது. இதனால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பல தடைகள் நீங்குகிறது.

கிரீட சக்கரம்
பண்டைய சீனா, பெர்சியா மற்றும் இந்தியாவின் நாகரிகங்களில் தங்கத்தின் புனித சக்தி நீண்ட காலமாக நிறுவப்பட்டது. தங்கம் கிரீட சக்கரத்தைத் திறக்கும் என்று நம்பப்படுகிறது, மேலும் அதை அணிபவருக்கு உதவுவதாக அறியப்படுகிறது. இது பாதுகாப்பு பண்புகளையும் கொண்டுள்ளது மற்றும் உங்கள் உடலில் இருந்து தீமையை நீக்கும் என்று நம்பப்படுகிறது.

எந்த கையில் அணிய வேண்டும்?
தங்கத்தின் முழுமையான ஆன்மீக நன்மைகளைப் பெற, பெண்கள் தங்க மோதிரத்தை இடது கையிலும், ஆண்கள் தங்க மோதிரத்தை வலது கையிலும் அணிய வேண்டும்.

குருவுடன் தொடர்பு
தங்கம் பூமியில் காணப்படும் மிக முக்கியமான உலோகம். இது செழிப்பு மற்றும் ராயல்டியைக் குறிக்கிறது. ஜோதிடத்தில் தங்கம் ஒவ்வொரு கிரகத்திற்கும் தொடர்புடையது ஆனால் அது முக்கியமாக குருவுடன் தொடர்புடையது.

அதிர்ஷ்ட உலோகம்
பொதுவாக தங்கம் அனைவருக்கும் பொருந்தும் ஆனால் அது உங்களுக்கு பொருந்தவில்லை என்றால், நீங்கள் துரதிர்ஷ்டத்தை சந்திக்க நேரிடும். ஒருவர் அதை சரியாக அணிந்தால், தங்கம் ஏராளமான அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் ஈர்க்கும். தங்கத்திற்கு ஆற்றலையும் வெப்பத்தையும் கண்காணிக்கும் ஆற்றல் உண்டு. அதனால், விஷத்தைக் குறைக்கும் சக்தி இதற்கு உண்டு. தங்கம் அணியும் போது பல்வேறு விதிகள் உள்ளது. இந்த தந்திரங்கள் மற்றும் விதிகளைப் பயன்படுத்தினால், நீங்கள் விரைவில் பணக்காரர் ஆக வாய்ப்புள்ளது.

தங்கம் அணிய விதிகள்
உங்களுக்கு சளி இருமல் பிரச்சனை இருந்தால் சுண்டு விரலில் தங்கத்தை அணியலாம். பெயர், புகழ் மற்றும் அந்தஸ்து தொடர்பான பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால், நீங்கள் நடுவிரலில் தங்கத்தை அணிய வேண்டும்.

மனஅமைதி
நீங்கள் கவனம் செலுத்த முடியாவிட்டால் மற்றும் எளிதில் திசைதிருப்பபட்டு விட்டால், நீங்கள் ஆள்காட்டி விரலில் தங்கத்தை அணிய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மன அமைதி பெறலாம்.

திருமண வாழ்க்கை
திருமணத்தில் கடினமான திட்டுகளை எதிர்கொள்கிறீர்களா? உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே நெருக்கம் குறைகிறதா? ஆம் எனில், கழுத்தில் தங்கத்தை சங்கிலி அல்லது பதக்க வடிவத்தில் அணியவும். அது உங்கள் திருமண வாழ்க்கையில் பல அதிசயங்களைச் செய்யும். குழந்தை பெற விரும்புபவர்கள் மோதிர விரலில் தங்கத்தை அணிய வேண்டும்.

யாரெல்லாம் தங்கம் அணியக்கூடாது?
வயிறு அல்லது உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்கள் தங்கம் அணிவதை தவிர்க்க வேண்டும். கோபம் கொண்டவர்கள் தங்கம் அணிவதை தவிர்க்க வேண்டும். உங்கள் ஜாதகத்தில் வியாழன் உச்சமாக இருந்தால் தங்கம் அணிய வேண்டாம்.

கனவில் தங்கத்தைப் பார்க்கலாமா?
கனவில் பணம் அல்லது தங்கம் பார்ப்பது நல்லதல்ல. இது தோல் மற்றும் முக நோய்களைக் குறிக்கிறது. கனவில் தங்கம் கண்டால், பல போராட்டத்திற்குப் பிறகு பணம் கிடைக்கும் என்று அர்த்தம். உங்கள் கனவில் பழங்கால தங்க நாணயங்களைக் கண்டால், தொழில் சம்பந்தமாக சில சிரமங்களை சந்திக்க நேரிடும்.

எங்கு அணியக்கூடாது?
இடுப்புக்கு கீழே தங்கம் அணிய வேண்டாம். நீங்கள் அவ்வாறு செய்தால் நீங்கள் துரதிர்ஷ்டம் மற்றும் செழிப்பை இழக்கலாம். தங்கம் லட்சுமி தேவியின் சின்னமாகக் கருதப்படுகிறது, எனவே அதை இடுப்பு மற்றும் அதற்கு கீழே அணிவது அவருக்கு அவமரியாதை காட்டுவது போன்றது.

எந்த திசையில் தங்கத்தை வைக்க வேண்டும்?
பொதுவாக, மக்கள் தங்கத்தை லாக்கர்களில் வைத்திருப்பார்கள். உங்கள் தங்கத்தை எப்போதும் சிவப்பு நிற காகிதம் அல்லது துணியில் வைக்கவும். கிழக்கு அல்லது தென்மேற்கு பகுதியில் தங்கத்தை வைக்கவும்.

எந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றது?
மேஷம், கடகம், சிம்மம் மற்றும் தனுசு லக்னங்களுக்கு தங்கம் மிகவும் ஏற்றது. இது விருச்சிகம் மற்றும் மீன ராசியினருக்கு கலவையான பலன்களைத் தரும். இது ரிஷபம், மிதுனம், கன்னி மற்றும் கும்பம் ஆகிய ராசியினருக்கு சிக்கலை உருவாக்கலாம். துலாம் மற்றும் மகர ராசிக்காரர்கள் தங்கம் அணிவதை தவிர்க்க வேண்டும்.