Just In
- 57 min ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 1 hr ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 2 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 3 hrs ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
Don't Miss
- News கோவை, தஞ்சாவூர், திருவாரூர்.. தாகம் தீர்க்கும் மின்வாரிய அணைகள்.. குடிநீர் வடிகால் வாரியம் அதிரடி
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Movies படம் பார்க்க வரச் சொல்றாரு ஹரி.. ஆனால், விஷால் ‘ரத்னம்’ படத்தோட டிக்கெட் புக்கிங்கே ஆரம்பிக்கலையே?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சுக்கிரன் வக்ர நிலையில் தனுசு ராசிக்கு செல்வதால் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
சுக்கிரன் தனது நட்பு ராசியான மகர ராசியில் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி வக்ர நிலையில் பின்னோக்கி நகர்ந்தார். தற்போது வக்ர நிலையில் சுக்கிரன் 2021 டிசம்பர் 30 ஆம் தேதி தனுசு ராசியில் காலை 9.57 மணிக்கு பயணிக்க தொடங்குகிறார்.
அழகு, காதல், படைப்பாற்றல் ஆகியவற்றை நிர்வகிக்கும் சுக்கிரன் தனது நட்பு ராசியான மகர ராசியில் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி வக்ர நிலையில் பின்னோக்கி நகர்ந்தார். தற்போது வக்ர நிலையில் சுக்கிரன் 2021 டிசம்பர் 30 ஆம் தேதி குரு ஆளும் தனுசு ராசியில் காலை 9.57 மணிக்கு பயணிக்க தொடங்குகிறார்.
பொதுவாக கிரகங்களின் இட மாற்றம் ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் வக்ர நிலையில் கிரகங்கள் பயணிக்கும் போது அது சற்று பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தும். அந்த வகையில் வக்ர நிலையில் தனுசு ராசியில் பயணிக்கும் சுக்கிரனால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். இதனால் இக்காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் மிகவும் சாதகமான பலன்களை பெறுவார்கள். பணியிடத்தில் உங்களின் புதுமையான யோசனைகளால் விரும்பிய முடிவுகளைப் பெறுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் உங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பார்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடைவார்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல விரும்பிய முடிவுகளைப் பெறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் சில உணர்ச்சிப் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே இக்காலத்தில் உங்கள் துணையுடன் வாதிடாதீர்கள். முடிந்தால் உங்கள் துணையுடன் பேசும் போது சாந்தமாக இருங்கள். தொழில்ரீதியாக, புதிய வேலை அல்லது பகுதி நேர திட்டத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இக்கால கட்டத்தில் உங்கள் அறிவை மேம்படுத்த உதவும் படிப்புகளில் சேர்வதில் மற்றும் உங்கள் படைப்பாற்றல் மற்றும் திறன்களை வளர்ப்பதில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் உங்களுக்கு விருப்பம் இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பணியிடத்தில் நல்லெண்ணத்தை பராமரிக்க நீங்கள் கூடுதல் முயற்சி மற்றும் நேரத்தை செலவிட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் குழப்பத்தை சந்திக்க நேரிடலாம், ஆனால் உங்கள் ஞானமும் முயற்சியும் குழப்பத்தைத் தீர்க்க உதவும். உங்கள் நெருங்கியவர்கள் உங்களுக்கு ஆதரவாக இல்லை என்று நீங்கள் உணரலாம். வாழ்க்கையை அனுபவிக்க பணத்தை செலவிட விரும்புவீர்கள். ஆனால் அதிக செலவுகள் காரணமாக அதை செய்ய முடியாது.
கடகம்
கடக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் குறைவான பலன்களே கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். முடிந்தவரை அமைதியாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த காலம் வேலையில் சில புதிய வாய்ப்புகளையும் கொண்டு வரும். ஆனால் இது சற்று சிக்கலானதாக இருக்கும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருங்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் ஆக்கப்பூர்வமான திறன்களை மேம்படுத்துவதற்கு உங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் சொந்த திறமையுடன் ஒரு திட்டத்தை தொடங்குவீர்கள். இக்காலத்தில் உங்கள் காதல் வாழ்க்கை குறித்த சில கேள்விகள் மனதில் எழும். இந்த காலகட்டத்தில் வாழ்க்கைத் தரம் உயரும் மற்றும் சமூகத்தில் நல்ல பெயர் மற்றும் புகழையும் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் நிதி ஆதாயத்தை எதிர்பார்க்கலாம் மற்றும் கடந்த காலத்தில் செய்த முதலீடுகள் இக்காலத்தில் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.
கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் உங்கள் மன உறுதி அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உங்களின் எல்லா சூழ்நிலைகளிலும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இக்காலத்தில் உங்களின் வேலைக்கான வெகுமதி கிடைக்கும். யாரிடமும் பிடிவாதமாக நடந்து கொள்ளாமல் அமைதியாக இருக்கவும், மென்மையாகப் பேசவும், சில விஷயங்களை விட்டுவிட்டு சுமூகமான உறவுகளைப் பேணவும் அறிவுறுத்தப்படுகிறது. நிதி ரீதியாக நீங்கள் கடந்த காலத்தில் செய்த முதலீட்டின் மூலம் லாபம் பெறுவீர்கள். கடந்த காலத்தில் நீங்கள் கையெழுத்திட்ட வணிக ஒப்பந்தங்கள் இக்காலத்தில் உங்களுக்குச் சாதகமான பலன்களைத் தரும்.
துலாம்
துலாம் ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சில தடைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். எதிலும் நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே அது நிறைவேறும். இக்காலத்தில் உங்களைத் தேடி நிறைய வேலைகள் வரக்கூடும். இந்த காலகட்டம் தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் உங்கள் பொறுப்பை அதிகரிக்கும். சுற்றி இருப்பவர்களுடன் நன்கு பழகுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் தொழில் ரீதியாக எந்தவொரு புதிய முயற்சியையும் தொடங்க ஒரு நல்ல காலமாக இருக்கும். உங்களின் திறமை இக்காலத்தில் நிதி நிலைமையை மேம்படுத்தும். உங்களின் துணையின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். இக்காலத்தில் உங்கள் துணையுடன் தரமான நேரத்தைச் செலவிட முயற்சி செய்யுங்கள்.
தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நல்ல பலனைப் பெறுவீர்கள். முதல் வீடு தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிக்கிறது. எனவே உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். முக்கியமாக உங்கள் குடும்பத்தினருடன் தீவிரமாக விவாதிப்பீர்கள். புதிய சொத்தை விற்பதிலும் வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். கடந்த கால முதலீட்டால் எதிர்பாராத லாபம் பெற வாய்ப்பு உள்ளது.
மகரம்
மகர ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். தொழில்ரீதியாக, உங்கள் போட்டியாளர்கள் மற்றும் எதிரிகளுடன் உள்ள சச்சரவுகளைத் தீர்ப்பதற்கு இது ஒரு நல்ல காலமாக இருக்கும். வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க அதிக பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும். மகர ராசி பெண்களுக்கு இது சாதகமான காலம். இந்த காலகட்டம் உங்களுக்கு வருமானம் ஈட்டுவதற்கான பல வாய்ப்புகளை அளிக்கும். ஆனால் சூழ்நிலையின் நன்மை தீமைகளை சரியாக எடைபோட்ட பின்னரே முடிவுகளை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. திருமணமானவர்களுக்கு இக்காலம் மிகவும் நல்லதல்ல. உங்கள் துணை உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம் என்பதால் அவர்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். வேலையில் நீங்கள் விரும்பிய முடிவை அடைய கடினமாக உழைக்க வேண்டும். நிதி ரீதியாக உங்கள் வருமானம் அதிகரிக்கும். பணியிடத்தில் சிறப்பாகச் செயல்படுவதற்கு முயற்சிக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் பெற்றோரும் உங்கள் துணையும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். இருப்பினும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
மீன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் தொழில் ரீதியாக கலவையான முடிவுகளைப் பெறுவீர்கள். நடிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள், இக்காலத்தில் நடிப்பதற்கு பல துடிப்பான வாய்ப்புகளைப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்கள் நல்லெண்ணம் உங்களுக்கு அதிக வேலைச் சுமையைத் தரும் என்பதால், இந்த காலத்தில் நீங்கள் அதிகமாக சிரமப்படுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, நீங்கள் வாக்குவாதங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே உங்கள் உறவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மனச்சோர்வு அல்லது மன அழுத்தத்தை சந்திக்க நேரிடலாம். எனவே தினமும் யோகா செய்ய அறிவுறுத்தப்படுகிறது.