Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
சுக்கிர பெயர்ச்சியால் டிசம்பர் 30-க்கு பின் இந்த 4 ராசிக்கு நல்ல காலம் ஆரம்பிக்குது.. உங்க ராசி இதுல இருக்கா?
சுக்கிரன் 2021 டிசம்பர் 30 ஆம் தேதி தனுசு ராசியில் வக்ர நிலையில் நுழைகிறார். இங்கு சுமார் 2 மாதங்கள் வரை சுக்கிரன் இருப்பார். இதனால் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதமான காலமாக இருக்கும்.
ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளும் 9 கிரகங்களில் ஏதேனும் ஒரு கிரகத்துடன் தொடர்புடையவை. ஒவ்வொரு கிரகங்களும் அவ்வப்போது ராசியை மாற்றிக் கொண்டே இருக்கும். இப்படி கிரகங்கள் இடம் மாறுவதால், அது 12 ராசிகளிலும் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் தற்போது 2021 ஆம் ஆண்டின் கடைசி நாளில் சுக்கிரன் ராசியை மாற்றுகிறார்.

பொதுவாக சுக்கிரன் செல்வம், பொலிவு மற்றும் அடம்பரங்களை அள்ளித் தரும் கிரகமாக கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் 2021 டிசம்பர் 30 ஆம் தேதி தனுசு ராசியில் வக்ர நிலையில் நுழைகிறார். இந்த ராசியில் வக்ர நிலையில் சுமார் 2 மாதங்கள் வரை சுக்கிரன் இருப்பார். இப்படி சுக்கிரன் வக்ர நிலையில் தனுசு ராசியில் இருப்பதால் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதமான காலமாக இருக்கும். இதில் உங்கள் ராசியும் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மேஷம்
இந்த சுக்கிர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமானதாக கருதப்படுகிறது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை சுக்கிரன் தரப் போகிறார். அதோடு உங்களின் கடின உழைப்பிற்கான முழு பலனையும் பெறுவீர்கள். எனவே எதையும் மனதார முயற்சி செய்யுங்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு இது நல்ல காலம். வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. அதோடு வேலை செய்பவர்களுக்கு இக்காலத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படும் வாய்ப்புள்ளது.

ரிஷபம்
இந்த சுக்கிர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக சாதகமாக இருக்கும். திடீரென்று எங்கிருந்தாவது நீங்கள் பணத்தைப் பெறுவீர்கள். இது தவிர, பணியிடத்தில் உங்களுக்கு சில பெரிய பொறுப்புக்கள் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த இரண்டு மாதங்களில் யோகங்கள் உருவாவதால், இக்காலத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இக்காலத்தில் சரியான உத்தி மூலம் எதையும் சாதிக்க முடியும். ஏனெனில் இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் முற்றிலும் உங்கள் பக்கத்தில் உள்ளது.

கடகம்
இந்த சுக்கிரனின் சஞ்சாரம் கடக ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். உங்களின் பணியிடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. இது தவிர, வேறு நல்ல வேலை வாய்ப்புக்களும் கிடைக்கும். இம்மாதிரியான சூழ்நிலையில், சம்பள உயர்வையும் பெற வாய்ப்புள்ளது. அரசாங்க வேலைக்கு தயாராகி வருபவர்களுக்கு, இந்த காலம் சாதகமாக இருக்கும்.

விருச்சிகம்
தனுசு ராசியில் சுக்கிரனின் வக்ர நிலை விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு பெறுவதற்கான முழு வாய்ப்புக்களும் உள்ளன. நிதி நிலைமை சிறப்பாக இருக்கும் மற்றும் இக்காலத்தில் உங்களால் அதிக பணத்தை சம்பாதிக்க முடியும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு, இது நல்ல காலம். உங்களின் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. முக்கியமாக இக்காலத்தில் அனைத்து விஷயத்திலும் உங்கள் குடும்பத்தினரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.



Click it and Unblock the Notifications
