Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
மகரம் செல்லும் வக்ர சனியால் இந்த 4 ராசிக்காரங்க நிறைய நற்செய்திகளைப் பெற போறாங்க... உங்க ராசி இதுல இருக்கா?
ஜூலை 12 ஆம் தேதி, கும்பத்தில் இருந்து மகர ராசிக்கு வக்ர நிலையில் அடைந்து பயணிக்கிறார். சனி வக்ர நிலையில் மகர ராசியை அடைவதால் அடுத்த 141 நாட்கள் எந்த ராசிக்காரர்களுக்கு நற்செய்திகள் அதிகம் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
நவகிரகங்களில் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கிரகம் என்றால் அது சனி. நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் 2022 ஆம் ஆண்டில் ஏப்ரல் 29 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சென்றார். அதன் பின் குறுகிய நாட்களிலேயே சனி பகவான் கும்ப ராசியில் வக்ரமாக மாறி மகரத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தால், இந்நிலையில் ஜூலை 12 ஆம் தேதி, அதாவது இன்று கும்பத்தில் இருந்து மகர ராசிக்கு வக்ர நிலையில் அடைந்து பயணிக்கிறார்.

ஜோதிடத்தில் சனிக்கு தனி இடம் உண்டு. சனியின் ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களும் கிடைக்கும். அதுவும் சனி வக்ர நிலையில் இருக்கும் போது பெரும்பாலும் மோசமான பலன்கள் கிடைத்தாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்செய்திகள் வந்து சேரும். இப்போது சனி வக்ர நிலையில் மகர ராசியை அடைவதால் அடுத்த 141 நாட்கள் எந்த ராசிக்காரர்களுக்கு நற்செய்திகள் அதிகம் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
மகரம் செல்லும் வக்ர சனியால், ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் துறையில் முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். உங்களின் இலக்குகளை அடைவீர்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அந்தஸ்து போன்றவை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. பணமும் லாபமும் இருப்பதால், நிதி நிலை வலுவாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் வெற்றி கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சனி வக்ர பெயர்ச்சியால் நிறைய பணத்தைப் பெறுவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். உங்கள் தகவல் தொடர்பு திறன் அதிகரிக்கும் மற்றும் உங்கள் பேச்சில் இனிமை இருக்கும். இக்காலத்தில் அனைவரையும் கவர்வீர்கள். சுக்கிரனின் ராசி மாற்றத்தால் நற்பலன்கள் கிடைக்கும். நிதி நிலைமை வலுவாகும். ஆனால் புத்திசாலித்தனமாக செலவிடுங்கள். வேலையில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள்.

கன்னி
சனி வக்ர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் தங்களின் பணியிடத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுன் நல்ல தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.

மீனம்
சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக மீன ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல நன்மைகளைப் பெறுவார்கள். இக்காலத்தில் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். வருமானம் உயரும் வாய்ப்புக்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். பொருளாதார நிலைமை வலுவாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
