Just In
- 26 min ago
கணைய புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...
- 1 hr ago
குழந்தைகளுக்கான அழகான காலணிகளை 76% அதிரடி தள்ளுபடி விலையில் அமேசானில் வாங்கலாம்...!
- 1 hr ago
ஹர் கர் திரங்கா: தேசியக்கொடியை எப்படி மடிப்பது மற்றும் எப்படி பாதுகாப்பாக வைக்க வேண்டும் தெரியுமா?
- 2 hrs ago
இந்த உணவுகள் உங்களுக்கு அருமையான மூடை செட் பண்ணி கொடுக்குமாம்... ட்ரை பண்ணி பாருங்க...!
Don't Miss
- Movies
சந்திரமுகி 2 ஷுட்டிங்கில் என்ன நடந்தது...வடிவேலுவின் ஜாலி வீடியோவுடன் அப்டேட் தந்த ராதிகா
- News
கிட்ட வாம்மா.. நீ என் தங்கச்சி..! தூய்மை பணியாளரை இறுக பற்றிய வைகைப் புயல்! உருகிப் போன பக்தர்கள்!
- Automobiles
விரைவில் ஏலத்திற்கு வருகிறது மறைந்த நடிகரின் சூப்பர் கார்... ஆகஸ்டு 18இல் ஏலம் விட ஏல நிறுவனம் திட்டம்!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
- Technology
திடீர் விலைக்குறைப்பு.. அடிச்சு பிடிச்சு விற்பனையாகும் 6000mAh Samsung போன்!
- Finance
ஒருவர் எவ்வளவு தங்கம் வாங்கலாம்.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு..!!
- Education
ஃபர்ஸ்ட்டில் இருக்கும் கல்வி நிறுவனம் செய்த சாதனை தெரியம்?
- Sports
திடீரென பயணத்தை ரத்து செய்த தோனி??.. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் ஏமாற்றம்.. காரணம் என்ன?
சனி வக்ர நிலையில் மகர ராசியை அடைவதால் ஜூலை 12 முதல் இந்த 5 ராசிகளுக்கு அதிஷ்டமான காலமா இருக்கப் போகுது...
நவகிரகங்களில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலனை அளிக்கும் சனிபகவான், மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டுகள் ஆகும். இதற்கிடையே வக்ர நிலையிலும் பயணிப்பார். தற்போது சனி கும்ப ராசியில் இருந்து பின்னோக்கி வக்ர நிலையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். இவர் 2022 ஜூலை 12 ஆம் தேதி வக்ர நிலையில் மகர ராசியை அடைந்து பயணிக்க ஆரம்பிப்பார். இரண்டரை ஆண்டுகள் கழித்து 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி மகரத்தில் இருந்து கும்பத்திற்கு வந்த சனி, மீண்டும் மகரத்திற்கு சென்று பயணிக்கவுள்ளார்.
இந்த மகர ராசியில் சில மாதங்கள் இருந்துவிட்டு, பின் மீண்டும் கும்ப ராசிக்கு செல்வார். இப்படி மகர ராசியில் வக்ர நிலையில் பயணிக்கும் சனி பகவானால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களையும் பெறலாம். இப்போது வக்ர நிலையில் மகரம் அடையும் சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் பண விஷயத்தில் சில இழப்புக்களை சந்திக்க நேரிடும். ஆனால் சனி மகர ராசிக்கு செல்வது இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அதுவும் இக்காலத்தில் பல விஷயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

சிம்மம்
மகர ராசிக்கு வக்ர நிலையில் செல்லும் சனியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த ராசிக்காரர்கள் பேச்சைக் கட்டுப்படுத்தி பேச வேண்டும்.

கன்னி
வக்ர நிலையில் சனி மகர ராசியை அடைவதால் கன்னி ராசிக்காரர்கள் எதிலும் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதோடு, சமூகத்தில் மரியாதையும் அதிகரிக்கும்.

துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி பகவான் இருப்பதால், நற்பலன்கள் கிடைக்கும். குழந்தைகள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள். பணியிடத்தில் மிகவும் சிறப்பாக செயல்படுவார்கள். இந்த ராசிக்காரர்களின் குழந்தைகள் தங்கள் இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவார்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சனி பகவான் நற்பலன்களை அள்ளி வழங்கப் போகிறார். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிவடையும். உங்களின் வேலையில் சில தடைகள் ஏற்பட்டாலும், அதை வெற்றிகரமாக முடிப்பீர்கள். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் பல நல்ல விஷயங்கள் நடக்கும்.