Just In
- 2 min ago
உங்க பிறப்புறுப்பில் மீன் நாற்றம் அடிக்குதா? அப்ப உங்களுக்கு இந்த பாலியல் பிரச்சனைகள் இருக்க வாய்பிருக்காம்!
- 28 min ago
நம் முன்னோர்களுக்கு கொலஸ்ட்ரால், சுகர் வராம இருந்ததுக்கு, இந்த இலை தான் காரணம் தெரியுமா?
- 1 hr ago
இந்த 5 ராசி பெண்கள் எப்போதும் நேர்மையான காதலியாக இருப்பார்களாம்... இவங்க காதலியா கிடைக்கிறது உங்க அதிர்ஷ்டம்!
- 4 hrs ago
சாணக்கிய நீதியின் படி இந்த 6 வகை பெண்களை திருமணம் செய்து கொள்வது மரணத்தை விட கொடியதாம்...!
Don't Miss
- News
எங்கே தமிழ்? இன்னும் ஒரு மொழிப்போருக்கு தேவையுள்ளது.. தமிழர்களுக்கு தலைகுனிவு! ராமதாஸ் ஆவேசம்
- Sports
ஆசிய கோப்பை பஞ்சாயத்திற்கு தீர்வு.. பாக். வாரிய தலைவர் கொடுத்த புதிய அப்டேட்.. ஃபிப்.4 தான் கடைசி
- Movies
Pathaan Review: உங்க சீட் பெல்ட்டை போட்டுக்கோங்க.. ஷாருக்கானின் பதான் விமர்சனம் இதோ!
- Automobiles
தாலிபான்கள் உருவாக்கிய முதல் சூப்பர் கார்... உலக நாடுகளையே மூக்குமேல விரல வைக்க வச்சுட்டாங்க!
- Technology
டேட்டா லிமிட்டே கிடையாது.. எவ்ளோ வேணா யூஸ் பண்ணிக்கலாம்.. ரூ.400-க்குள் கிடைக்கும் BSNL-ன் சூப்பர் ரீசார்ஜ்!
- Finance
நிறுவனங்கள் உங்கள் குடும்பமல்ல.. நீங்கள் குடும்ப உறுப்பினருமல்ல.. இனி பணத்துக்காக வேலை பாருங்கள்!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
Vakri Mangal 2022 Gochar: வக்ர செவ்வாயால் அடுத்த 2 மாதம் சிரமப்படப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
நவகிரகங்களில் செவ்வாய் ஒரு நெருப்பு கிரகம். கிரகங்களில் செவ்வாய் மற்றும் சூரியன் நமது உடலில் உள்ள அனைத்து உமிழும் பொருட்களையும் கட்டுப்படுத்துகின்றன. ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால், அவர் தைரியமாகவும், வலிமையாகவும், மனக்கிளர்ச்சியுடனும் மற்றும் எதையும் நேராக பேசக்கூடியவர்களாக இருப்பார்கள். அதுவே செவ்வாய் வக்ர நிலையில் இருக்கும் போது, அது ஒருவரின் ஆற்றல் மட்டங்களைக் குறைப்பதோடு, கவனச்சிதறல்களை ஏற்படுத்தலாம்.
அந்த வகையில் செவ்வாய் தற்போது மிதுன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். அதைத் தொடர்ந்து நவம்பர் 13 ஆம் தேதி மதியம் 13:32 மணிக்கு வக்ர நிலையில் செவ்வாய் ரிஷப ராசியை அடைகிறார். இந்த நிலையில் 2023 ஜனவரி 13 ஆம் தேதி வரை இருப்பார். இப்போது வக்ர நிலையில் ரிஷப ராசியில் பயணிக்கும் செவ்வாயால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறுவார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் வக்ர நிலையில் செல்கிறார். இது குடும்பம், சேமிப்பு மற்றும் பேச்சின் வீடாகும். எனவே இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தில் சில சண்டைகளை சந்திக்கலாம். திடீர் நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருக்கவும். இக்காலத்தில் புதிதாக எதையும் தொடங்காதீர்கள். மாணவர்களால் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகும். காதலிப்பவர்களுக்கு பொசசிவ் அதிகமாகும். திடீரென்று யாத்திரை செல்ல திட்டமிடுவீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் வக்ர நிலையில் செல்கிறார். எனவே ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வணிகர்கள் கூடுதல் விழிப்போடு இருக்க வேண்டும். தாயின் ஆரோக்கியத்தையும் கவத்துக் கொள்ள வேண்டும். சொத்தை விற்பதற்கும் வாங்குவதற்கும் திட்டமிட்டால், அதை சற்று தள்ளிப் போடுங்கள். இக்காலத்தில் எந்த ஒரு ஒப்பந்தத்தின் போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பயணம் மேற்கொள்ளும் போது சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மிதுனம்
மிதுன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் வக்ர நிலையில் செல்கிறார். இதனால் உடன்பிறந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட அல்லது சண்டை வர வாய்ப்புள்ளது. குறுகிய பயணங்களுக்கு செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அந்த பயணங்களால் நிதி இழப்புகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய பிரச்சனைகளை கொண்டவர்கள், இக்காலத்தில் அதை புறக்கணிக்கக்கூடாது. தேவையற்ற ஈகோவால் வாழ்க்கைத் துணையுடனான உறவில் பிரச்சனைகளைக் காணலாம். திருமண வாழ்வில் கூடுதல் கவனத்தை செலுத்தாவிட்டால், பிரச்சனை பெரிதாகிவிடும்.

கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் வக்ர நிலையில் செல்கிறார். எனவே இக்காலத்தில் உங்கள் ஆசைகள் நிறைவேறும். பணியிடத்தில் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். அதே வேளையில் உங்கள் பெயருக்கு கேடு விளைவிக்கும் சில பிரச்சனைகளை உருவாக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இக்காலம் நன்றாக இருந்தாலும், சற்று கவனக்குறைவுடன் இருப்பார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஏதேனும் பிரச்சனை இருந்தால் அலட்சியமாக இருக்காமல் உடனே அதை கவனியுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் வக்ர நிலையில் செல்கிறார். இதனால் பணியிடத்தில் இலக்குகளை அடைய முடியாமல் எரிச்சலடைந்து, என்ன செய்வதென்று தெரியாமல் திணறலாம். பணியிடத்தில் இந்த அணுகுமுறை உங்கள் இமேஜை பாதிக்கலாம். செவ்வாய் வக்ர நிலையில் இருப்பதால், பணியிடத்தில் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் கவனச்சிதறல்களால் அவதிப்படலாம்.

கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் வக்ர நிலையில் செல்கிறார். எனவே இக்காலத்தில் சில கருத்து வேறுபாடுகளை சந்திக்கலாம். திடீர் யாத்திரைக்கு வாய்ப்புள்ளது. இக்காலத்தில் தந்தையின் ஆதிக்கம் சற்று அதிகமாக இருக்கும். இதனால் அவருடன் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆயினும் அவரது ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்ப மகிழ்ச்சி பாதிக்கப்படலாம். தாயின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். மொத்தத்தில் இக்காலத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் வக்ர நிலையில் செல்கிறார். இதனால் இக்காலம் சற்று சவாலானதாக இருக்கும். திடீரென்று நிகழும் பல விஷயங்களால் மன அமைதி பாழாகும். நிதி விஷயத்தில் திடீர் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். பேச்சில் அதிகாரம் தெரியும். இது மற்றவர்களுடன் சண்டைகளை உருவாக்கும். பெரியவர்களுடன் பேசும் போது பேச்சு மற்றும் வார்த்தைகளை கவனிக்க வேண்டும். பயணம் மேற்கொள்ளும் போது எச்சரிக்கையுடன் இருக்க முயற்சி செய்யுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் வக்ர நிலையில் செல்கிறார். எனவே தேவையற்ற ஈகோவால் வாழ்க்கைத் துணையுடனான உறவில் ஏற்றத்தாழ்வுகளை காண நேரிடும். எனவே திருமண வாழ்வில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். தொழிலில் எதிர்மறை தாக்கத்தைத் தவிர்க்க, ஈகோ மற்றும் மோதல்களை தவிர்க்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக உண்ணும் உணவுகளில் விழிப்போடு இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் வக்ர நிலையில் செல்கிறார். எனவே இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகள் உங்களை வீழ்த்த சதி செய்வார்கள். இருப்பினும், அவர்களால் எவ்வித தீங்கும் நேராது. மாணவர்கள் கவனச்சிதறலை உணரக்கூடும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வாய்ப்ப்புள்ளது மற்றும் இதனால் செலவுகள் அதிகம் ஏற்படும்.

மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் வக்ர நிலையில் செல்கிறார். இதனால் மாணவர்கள் அவர்களின் இலக்குகளை அடைவார்க. இருப்பினும் ஆற்றலில் சிறிது குறைவை உணரக்கூடும். சரியா முடிவை எடுக்க முடியாமல் திணற நேரிடும். காதல் வாழ்க்கை பாதிக்கப்படலாம். திருமணமானவர்கள் தங்கள் குழந்தைகளிடம் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் அவர்கள் அதிக ஆற்றல் மற்றும் எரிச்சல்களால் நிரம்பி, அதை சரியாக கையாளத் தெரியாமல் அவதிப்படுவார்கள். எனவே அதை சரிசெய்ய அவர்களுக்கு உதவுங்கள்.

கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் வக்ர நிலையில் செல்கிறார். இது தாய், வீடு, இல்லற வாழ்க்கை, சொத்து மற்றும் வாகனம் ஆகியவற்றின் வீடாகும். எனவே இக்காலத்தில் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வீடு மற்றும் வாகனத்தில் தீவிபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருங்கள். உறவுகளில் சில பிரச்சனைகள் உருவாகலாம். பணியிடத்தில் அதிக வேலை இருக்கும். சில நேரங்களில் இது உங்களுக்கு கடினமாக இருக்கும். இதனால் சற்று எரிச்சலடைய நேரிடும்.

மீனம்
மீன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் வக்ர நிலையில் செல்கிறார். இது உடன்பிறப்புகள், பொழுதுபோக்குகள், குறுகிய பயணம், தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றின் வீடாகும். எனவே இக்காலத்தில் பொழுதுபோக்குகளில் ஈடுபடும் போது, சற்று விழிப்போடு இருக்க வேண்டும். இக்காலத்தில் உங்களின் தைரியம் மற்றும் விருப்பமின்மை குறையும். மற்றவர்களுன் தொடர்பு கொள்ளும் போது அதிகம் எரிச்சலடைவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நோயில் இருந்து மீள தாமதமாகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகம் இருக்கும். நீங்கள் ஜோதிடம் கற்க நினைத்தால், அதற்கு இக்காலம் சிறந்த காலம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)