Just In
- 2 hrs ago
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- 5 hrs ago
Today Rasi Palan 01 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் முக்கிய வேலை பாதியில் தடைபடலாம்...
- 13 hrs ago
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- 13 hrs ago
பாதாம் எண்ணெயை உங்க தலை முடியில இப்படி யூஸ் பண்ணா... கிடுகிடுன்னு முடி வளர்ந்து பளபளன்னு மின்னுமாம்!
Don't Miss
- News
காட்பாடிக்கு அப் அண்ட் டவுன் ரயில் பயணம்! முதல்வர் ஸ்டாலினின் முதல் கள ஆய்வு! 2 நாள் டூர் சார்ட்!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Finance
பட்ஜெட் 2023: வரலாற்று நிகழ்வு.. பெண் ஜனாதிபதி, பெண் நிதி அமைச்சர்..! களைகட்டும் நாடாளுமன்றம்..!
- Movies
தளபதி 67 படம் எல்சியூவே இல்லையா? கடைசி வரை ஓகே சொல்லாத விஜய்.. இது ஸ்டாண்ட் அலோன் படம் தான்?
- Technology
ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
47 ஆண்டுகளுக்கு பின் ரிஷப ராசியில் வக்ர செவ்வாய் உருவாக்கிய அசுப யோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் அதிகரிக்கும்!
நவகிரங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். ஜோதிடத்தில் இந்த செவ்வாய் மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் கடுமையான கிரகமாக கருதப்படுகிறது. இந்த கிரகத்தின் தாக்கம் உள்ளவர்கள் அச்சமற்றவர்களாக மற்றும் தைரியமானவர்களாக இருப்பர். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். இத்தகை செவ்வாய் 2022 நவம்பர் 13 ஆம் தேதி வக்ர நிலையில் ரிஷப ராசி அடைந்து பயணித்து வருகிறார். இந்த ராசியில் செவ்வாய் 2023 மார்ச் 12 வரை இருப்பார்.
பொதுவாக செவ்வாயின் ராசி மாற்றம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. செவ்வாய் வக்ர நிலையில் ராசியை மாற்றுவது என்பது அரிதானது. இதற்கு முன் செவ்வாய் 1975 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி வக்ர நிலையில் ரிஷப ராசியில் பயணித்தார். 47 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரிஷப ராசியில் செவ்வாய் வக்ர நிலையில் பயணிக்கிறார். ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த அரிய நிகழ்வு சில ராசிக்காரர்களுக்கு நிறைய கஷ்டங்களைக் கொடுப்பதோடு, பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
செவ்வாயின் வக்ர நிலை மேஷ ராசிக்காரர்களுக்கு சிரமங்களை அதிகரிக்கும். குடும்பத்தில் சண்டைகளை வரவழைக்கும். நிதி ரீதியாக, பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பண பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக இக்காலம் அவ்வளவு நன்றாக இருக்காது. மாணவர்கள் வெற்றி பெற அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். திருமண வாழ்வில் மனக்கசப்புகள் அதிகரிக்கும்.

மிதுனம்
வக்ர செவ்வாயால் மிதுன ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். இளைய சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பயணங்களால் நஷ்டங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. முதலீடு செய்ய நினைத்தால், அதை இக்காலத்தில் செய்வதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் இழப்பை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இக்காலத்தில் உங்கள் ஆணவம் தான் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

துலாம்
செவ்வாய் வக்ரமாக இருப்பது துலாம் ராசிக்காரர்களுக்கு சவாலானதாக இருக்கும். இக்காலத்தில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மன அழுத்தத்தால் கஷ்டப்பட வேண்டியிருக்கும். நிதியைப் பொறுத்தவரை ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் உங்களின் நடத்தையில் பெரிய மாற்றம் இருக்கும். இதனால் பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களுடனான உறவு மோசமடையும் வாய்ப்புள்ளது. முக்கியமாக பேசும் போது கவனமாக இருங்கள். ஏனெனில் உங்களின் பேச்சு பல பிரச்சனைகளை உருவாக்கக்கூடும்.

மகரம்
வக்ர செவ்வாய் மகர ராசிக்காரர்களின் குழந்தைகள், நடத்தை மற்றும் நெருங்கிய உறவுகளில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். திருமண வாழ்வில் கசப்புகள் அதிகரிக்கும். நெருங்கிய நண்பவர்கள் மற்றும் உறவினர்களுடனான உறவுகள் மோசமடையலாம். முதலீட்டு விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். ஏனெனில் இக்காலத்தில் கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்காது. பேங்க்கில் உங்களின் இருப்பு குறையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)