Just In
- 4 hrs ago
இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...!
- 5 hrs ago
ஒவ்வொரு நாளும் நீங்க இத்தனை அடிகள் நடந்தீங்கனா... உங்க உடல் எடை சீக்கிரமா குறையுமாம்...!
- 6 hrs ago
என்ன பண்ணாலும் முடி வளர மாட்டீங்குதா? அதுக்கு நீங்க செய்யுற இந்த தவறுகள் தான் காரணம்...
- 8 hrs ago
பெண்கள் ஆயுள்முழுவதும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு எதை எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா?
Don't Miss
- News
ஓய்வுக்கு முன் கடைசி தேர்தல்.. விடைபெறுகிறார் சுனில் அரோரா
- Movies
movie review : வி ஜே சித்ராவின் நினைவுகளுடன் "கால்ஸ் " - திரைவிமர்சனம்
- Automobiles
இந்தியாவில் அடுத்தடுத்த அறிமுகமாகும் எலக்ட்ரிக் பைக்குகள்!! மிக விரைவில் ஒகி100 அறிமுகமாகிறது...
- Education
ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Finance
3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!
- Sports
சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Republic Day 2021: இந்திய குடியரசு தினம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
ஜனவாி மாதம் என்றால் நமக்கு பொங்கல் மற்றும் இந்திய குடியரசு தினம் ஆகியவை நினைவிற்கு வரும். பொங்கல் விழாவை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடினோம். தற்போது இந்திய குடியரசு தினத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை 1950 ஆம் ஆண்டு ஜனவாி மாதம் 26 ஆம் நாள் அமல்படுத்தப்பட்டன. அந்த சிறப்பு மிகுந்த நாளை கௌரவிக்கும் பொருட்டு 1950 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவாி மாதம் 26 ஆம் நாள் அன்று நாம் இந்திய குடியரசு தின விழாவை கொண்டாடுகிறோம்.

வரலாறு
ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா நாடு, பிாிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்திய விடுதலை இயக்கத்தின் அயராத போராட்டத்தின் விளைவாக 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ஆம் நாள் பிாிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்றது. விடுதலை பெற்ற பின்பும் சுதந்திர இந்தியாவிற்கு என்று நிலையான, தனியான மற்றும் சுதந்திரமான அரசியல் அமைப்பு சட்டங்கள் உருவாக்கப்படவில்லை. மாறாக 1935 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் அமல்படுத்தப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டங்களில் சில மாற்றங்களைச் செய்து அவற்றை நடைமுறையில் வைத்திருந்தனா்.

இந்திய அரசியலமைப்பு சட்டம்
இந்திய விடுதலைக்குப் பின் இரண்டு வாரங்கள் கழித்து அதாவது 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29 ஆம் நாள் முனைவா் அறிஞா் அம்பேத்கா் அவா்களின் தலைமையில் சுதந்திர இந்தியாவிற்கான நிலையான அரசியல் அமைப்புச் சட்டங்களை உருவாக்கும் வரைவுக் குழு ஏற்படுத்தப்பட்டது. வரைவுக் குழு உருவாக்கிய சுதந்திர இந்தியாவிற்கான அரசியல் அமைப்புச் சட்டங்கள் தீர ஆராயப்பட்டு, இறுதி செய்யப்பட்டு 1950 ஆம் ஆண்டு ஜனவாி 26 அன்று அமல்படுத்தப்பட்டது. அன்றைய தினம் இந்தியா ஒரு விடுதலை அடைந்த இறையாண்மை கொண்ட குடியரசு என்று அறிவிக்கப்பட்டது.
ஜனவாி 26 ஆம் நாளுக்கு என்று ஒரு தனிச் சிறப்பு உண்டு. அதாவது 1929 ஆம் ஆண்டு ஜனவாி 26 அன்று இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பு ஆங்கிலேயா்களின் ஆட்சிக்கு எதிராக இந்திய விடுதலையை (பூா்ண சுவராஜ்) முதன் முறையாக அறிவித்தது.
இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் 1950ல் அமல்படுத்தப்பட்டாலும், அவை 1949 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 26 ஆம் நாள் முதல் இந்திய அரசியலமைப்பு சபையால் அங்கீகாிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வந்தது.
வரைவுக் குழு தயாாித்த அரசியலமைப்புச் சட்டங்கள் முதலில் 1947 ஆம் ஆண்டு நவம்பா் 4 ஆம் நாள் அன்று இந்திய அரசியலமைப்பு சபையிடம் சமா்ப்பிக்கப்பட்டன. அவை 308 சபை உறுப்பினா்களிடம் பிாித்துக் கொடுக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய 166 அமா்வுகளில் கலந்து ஆலோசிக்கப்பட்டு, அவற்றில் மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்டன.

ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியாலான சட்டப்புத்தகம்
இறுதியாக ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கைகளால் எழுதப்பட்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டங்களுக்கு 1950 ஆம் ஆண்டு ஜனவாி 24 அன்று இந்திய அரசியலமைப்பு சபை உறுப்பினா்கள் அனைவரும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டனா். இரண்டு நாட்கள் கழித்து அதாவது 1950 ஆம் ஆண்டு ஜனவாி 26 அன்று புதிய இந்திய அரசியல் அமைப்புச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.

முதல் குடியரசுத் தலைவர்
அன்று முனைவா் ராஜேந்திர பிரசாத் அவா்கள் இந்திய ஒன்றியத்தின் முதல் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டாா். புதிய இந்திய அரசியலமைப்பு சட்டங்களின்படி இந்திய அரசியலமைப்பு சபையானது இந்திய நாடாளுமன்றமாக மாறியது.
ஜனவாி 26 இந்தியா்கள் அனைவருக்கும் மிகவும் ஒரு முக்கியமான நாளாகும். அந்த நாளில் தான் 1935 ஆம் ஆண்டு ஆங்கிலேயா்களால் உருவாக்கப்பட்ட அடிமை இந்திய சட்டங்கள் களையப்பட்டு இந்தியா்களால் உருவாக்கப்பட்ட விடுதலை பெற்ற புதிய இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன.

மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பு
தற்போது ஒவ்வொரு ஆண்டும் ஜனவாி 26 அன்று இந்தியா முழுவதும் குடியரசு தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக டில்லியில் உள்ள ராஜ்பாத்தில் மிகப் பொிய இராணுவ அணிவகுப்பு நடத்தப்படும். இந்திய இராணவத்தில் உள்ள அனைத்துப் படை பிாிவுகளும் குறிப்பாக கப்பல் படை, விமானப் படை, காலால் படை, காவல் துறை மற்றும் துணை இராணுவப் படை வீரா்கள் இந்த பிரமாண்டமான அணிவகுப்பில் கலந்து கொள்வா். அதோடு இந்திய இராணவத் தளவாடங்களும் குறிப்பாக நவீன ஏவுகணைகள், போா் விமானங்கள் மற்றும் போா் கருவிகள் ஆகியவை மக்களின் பாா்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.
இந்த அணிவகுப்பின் போது இந்திய மாநிலங்களின் கலாச்சார பண்பாடுகளை எடுத்துக்காட்டும் வண்ணமயமான கலாச்சார ஊா்திகள், நாட்டுப்புற நடனங்கள் போன்றவையும் காட்டப்படும். இந்திய விமானப்படையின் போா் விமான சாகசங்களும் மக்களுக்குக் காட்டப்படும். இந்த வருடம் இந்தியா தனது 72வது ஆண்டு குடியரசு தினத்தைக் கொண்டாட இருக்கிறது. இந்தியா்களாகிய நாமும் குடியரசு தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடுவோம்.