For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நினைத்தது நிறைவேற, செல்வம் சேர 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டியவை!

|

பொதுவாக வீடு கட்டும் முன்பே வாஸ்து பார்த்து அதற்கு ஏற்றவாறு கட்டுவது அவசியம். கட்டிய வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தால் அதற்கு சில பரிகாரங்களும் உள்ளன. அதே போல ஒரு வீட்டில் எந்த பொருளை எங்கு வைத்தால் நமக்கு நன்மைகள் பெருகும் என்ற குறிப்புகளையும் வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதே போல வீட்டை விட்டு கிளம்பும் போதும் சில பரிகாரங்களை செய்தால் நாம் நினைத்த காரியம் வெற்றியடையும்.

Remedies To Get Success In Life

வீடுகளில் உள்ள வாஸ்து குறைபாடுகளை போக்க உதவுகிறது சங்கு. வலம்புரி சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் வாஸ்து தோஷம் நீங்கும். அதோடு பிரதி வெள்ளிக்கிழமைகளில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு வீடு முழுக்க தெளித்தால் அந்த வீட்டில் உள்ள சகல தோஷங்களும் விலகும். வீட்டில் சங்கு இல்லாதவர்கள் சங்கை கையில் ஏந்தியவாறு உள்ள மகா லட்சுமியின் படத்தையோ அல்லது சிலையையோ வீட்டில் வைப்பதன் பலனாக வாஸ்து தோஷம் நீங்கும்.

அதே போல புல்லாங்குழலை வீட்டில் வைப்பதன் மூலம் அதிஷ்டம் பெருகும், பணக்கஷ்டங்கள் நீங்கும். அதோடு வீட்டில் இருக்கும் சில வாஸ்து குறைபாடுகள் நீங்கி இதமான மனநிலை உருவாகும். ஒரு துணியில் மஞ்சள் தடவி வீட்டின் முன் புறம் ஒற்றை கண்கொண்ட தேங்காயை கட்டி தினமும் அதை பூஜித்து வருவதன் மூலம் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் குறைந்து நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். அதனால் வீட்டில் நிம்மதி அதிகரிக்கும் பண வரவும் அதிகரிக்கும்.

இன்றைய காலகட்டத்தில் பணத்தை சம்பாதிப்பதற்கு மக்கள் கடினமாக உழைக்கின்றனர். ஆனால் சிலருக்கு என்ன தான் அவர்கள் கடினமாக உழைத்து சம்பாதித்தாலும், ஒரு வழியில் வரும் பணம் வேறொரு வழியில் விரைய செலவாகிறது. சம்பாதிக்கப்படும் பணம் வீண் விரையமாகாமல் இருக்கவும் பணம் வீட்டில் சேரவும் 12 ராசியினருக்கும் சில பரிகார முறைகள் இங்கு கூறப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் உங்கள் வேலை அல்லது தொழிலுக்காக வீட்டை விட்டு கிளம்பும் போது ஒரு துளி அளவு வெல்லத்தை எடுத்து, உங்கள் வீட்டின் தென் பகுதியில் வைத்து விட்டு செல்லுங்கள். அன்றைய தினம் உங்கள் தொழிலும், வியாபாரமும் நல்ல முறையில் நடந்து உங்களுக்கு நல்ல பொருட்சேர்க்கையுண்டாகும். மேலும் செவ்வாய்க்கிழமைகளில் சிவபெருமானுக்கு கடலைப்பருப்பை நிவேதனமாக வைத்து, அவரை வழிபட வேண்டும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் தினமும் காலையில் ஒரு பசுமாட்டிற்கு அகத்திக்கீரையையோ அல்லது வாழைப்பழங்களையோ கொடுக்க வேண்டும். அந்த பசுவின் உடலில் தங்கியிருக்கும் தேவர்களின் ஆசிகளை பெற்று உங்கள் வாழ்வில் நீங்கள் விரும்பிய அனைத்து வளங்களையும் பெறுவீர்கள். உங்கள் வாழ்நாள் முழுதும் அதை தொடர்ந்து செய்தீர்கள் என்றால் வெற்றிகள் உங்களை தேடி வரும்.

மிதுனம்

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்கள் புதிதாக திருமணமான ஏழை சுமங்கலிப்பெண்களுக்கு வளையல்கள், முகம் பார்க்கும் கண்ணாடி, புது சேலை போன்ற சீர்வரிசை பொருட்களை தானமாக கொடுக்க, உங்கள் வாழ்நாளில் எப்போதும் பொருளாதார கஷ்டங்கள் ஏற்படாது. உங்கள் வாழ்வில் நல்ல செல்வ நிலையை பெற ஒவ்வொரு புதன் கிழமையன்றும் புதன் பகவானுக்கு பச்சை பயிரை நிவேதனமாக வைத்து அவரை வழிபட வேண்டும்.

கடகம்

கடகம்

கடக ராசியினர் தங்கள் பொருளாதார நிலை மேம்பட புறாக்கள், குருவிகள் மற்றும் ஏனைய பறவைகள் உண்ண உணவும், குடிக்க குடிநீர் வசதியும் ஏற்படுத்தி தர, உங்களின் வாழ்வில் இருக்கும் வறுமை அந்த பறவைகளின் ரூபத்திலிருக்கும் இறைவனின் ஆசியால் நீங்கும். ஒவ்வொரு திங்களன்றும் கோவிலில் சிவலிங்க அபிஷேகத்திற்கு சுத்தமான பசுப்பாலை தானமாக அளிக்கவேண்டும்.

சிம்மம்

சிம்மம்

பொருளாதார தடைகள் நீங்க வேண்டுமா? உங்களின் வாழ்வில் செல்வ செழிப்பு ஏற்பட தினமும் நீங்கள் தூங்கப் செல்லும் முன்பு ஒரு செம்பு பாத்திரத்தில் சுத்தமான நீரை ஊற்றி வையுங்கள். மறுநாள் காலை எழுந்து, அந்த தண்ணீரை உங்கள் வீட்டின் கிழக்கு பகுதியில் தெளித்து விடுங்கள். இதை செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் செல்வம் நுழைவதற்கு இருந்த சூட்சமத் தடைகள் நீங்கும். இதை தொடர்ந்து செய்து வர, உங்கள் பொருளாதார நிலை உயரும்.

கன்னி

கன்னி

கன்னி ராசியினர் தங்கள் வாழ்வில் செல்வ செழிப்பு உண்டாக புதன் கிழமைகளில் பச்சை நிற ஆடைகளை அணிய வேண்டும். எப்போதும் ஒரு பச்சை நிற கைகுட்டையாவது வைத்திருக்க வேண்டும். மேலும் மாதத்திற்கு ஒரு முறை புதன் கிழமைகளில் ஏதாவது நெல், கோதுமை போன்ற தானியங்கள், வெல்லம் ஆகியவற்றை ஒரு திருநங்கைக்கோ அல்லது ஒரு பிச்சைக்காரருக்கோ தானம் அளிக்கவேண்டும்.

துலாம்

துலாம்

துலாம் ராசியினர் ஏழைக்குழந்தைகள் அருந்துவதற்கும் பாலை தானம் அளிக்க, அந்த சிவ பெருமானின் அருளால் உங்கள் வாழ்வில் எவ்வித கஷ்டங்களும் ஏற்படாது. உங்கள் வாழ்வில் பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைய வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயங்களில் அபிஷேகத்திற்கு தூய்மையான பசும் பாலும், ஒரு படி அரிசியையும் தானமாக வழங்கவேண்டும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியினர் செவ்வாய் கிழமைகளில் முருகன் கோவில் சென்று, அக்கோவிலில் கடலைப்பருப்பு நிவேதனமாக வைத்து வழிபட வேண்டும். தங்கள் வாழ்வில் செல்வச் செழிப்பு உண்டாக ஒரு சிகப்பு துணியில் சிறிது பார்லி அரிசியை வைத்து முடிந்து உங்கள் வீட்டின் தென்கிழக்கு மூலையில் யாரும் பார்க்காத படி வைத்து விட வேண்டும். இது உங்கள் வீட்டிலிருக்கும் தீய அதிர்வுகளை நீக்கும்.

தனுசு

தனுசு

நீங்கள் உங்கள் வாழ்வில் நிறைய பொருட்செல்வம் பெறுவதற்கு உங்கள் வீட்டின் பூஜையறையில் வெள்ளிக்கிழமைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமம் படித்து வர, உங்கள் வீட்டிலிருக்கும் எதிர்மறை அதிர்வுகள் நீங்கி உங்களிடமும் உங்கள் வீட்டிலும் ஒரு நல்ல மாற்றத்தை உணர்வீர்கள். மேலும் எப்போதும் ஒரு மஞ்சள் நிற கர்ச்சீப் உங்களிடம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

மகரம்

மகரம்

மகர ராசியினர் வாழ்வின் பொருளாதார நிலை மேம்பட சனிக்கிழமை அன்று உங்களிடம் பணிபுரியும் பணியாளர்களுக்கு கருப்பு அல்லது கருநீல நிற ஆடைகளை தானமாக அளிக்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருக்கும் துளசி மாடத்திலுள்ள துளசி செடிக்கு தூபங்கள் காட்டி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பூஜைகள் செய்ய வேண்டும்.

கும்பம்

கும்பம்

உங்கள் வாழ்வில் நீங்கள் பலவிதமான செல்வ வளங்களை பெற சனிக்கிழமைகளில் கருப்பு எள் கலந்த நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி, எண்ணையினால் செய்யப்பட்ட ஏதேனும் ஒரு பலகாரத்தைக் படையலிட்டு சனி பகவானை வழிபட வேண்டும். உங்கள் வீட்டின் தென்மேற்கு மூலையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

மீனம்

மீனம்

மீன ராசியினர் உங்கள் வாழ்வில் செல்வ செழிப்பு ஏற்பட உங்க ராசி அதிபதி குரு பகவானின் அருளை பெற, அன்றைய தினம் மஞ்சளையும், இனிப்பான லட்டுகளையும் அவருக்கு நிவேதனமாக அளிக்க வேண்டும். வியாழக்கிழமைகளில் ஸ்ரீ குரு பகவானை வழிபட வேண்டும். இந்த வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகளை அணிய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Remedies To Get Success In Life

Every person wants to become successful in their life but there are few people who got success in life. Success is depends upon the hard work but sometime hard work is not sufficient to achieve success, sometime luck also matter. Here are some remedies for you to get successful life.
Story first published: Saturday, December 14, 2019, 11:44 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more