For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சனி தோஷம் நீங்கணுமா? அப்ப அனுமன் ஜெயந்தி அன்று இத செய்யுங்க...

சனி தோஷம் உள்ளவர்கள், அனுமன் ஜெயந்தி நாளில் ஒருசில செயல்களை செய்தால் சனி தோஷத்தில் இருந்து விடுபடலாம். இப்போது சனி தோஷத்தில் இருந்து விடுபட அனுமன் ஜெயந்தி அன்று என்னென்ன செய்யலாம் என்பதை இப்போது காண்போம்.

|

சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று தான் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அனுமன் சித்திரை பௌர்ணமி நாளில் தான் பிறந்தார். இந்த ஆண்டு சித்திரை பௌர்ணமி அல்லது அனுமன் ஜெயந்தி 2022 ஏப்ரல் 16 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அனுமன் பிறந்தநாள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி சனிக்கிழமை என்பதால் இன்னும் சிறப்பானது.

Remedies To Get Rid Of Shani Dosha On Hanuman Jayanti In Tamil

மத நம்பிக்கைகளின் படி, சனிக்கிழமை அனுமன் மற்றும் சனிபகவானை வணங்குவதற்கு உகந்ததாக கருதப்படுகிறது. சனி தோஷம் உள்ளவர்கள், இந்நாளில் ஒருசில செயல்களை செய்தால் சனி தோஷத்தில் இருந்து விடுபடலாம். இப்போது சனி தோஷத்தில் இருந்து விடுபட அனுமன் ஜெயந்தி அன்று என்னென்ன செய்யலாம் என்பதை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அனுமனுக்கு முன் தீபம் ஏற்றவும்

அனுமனுக்கு முன் தீபம் ஏற்றவும்

அனுமன் ஜெயந்தி அன்று மாலை வேளையில் அனுமன் கோவிலுக்கு சென்று, அனுமனுக்கு அத்தர் மற்றும் ரோஜா மாலையை வாங்கி கொடுங்கள். அதோடு கடுகு எண்ணெய் தீபம் ஏற்றி, 11 முறை அனுமன் சலிசாலை பாராயணம் செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். மறுபுறம், அனுமனின் ஆசீர்வாதங்களைப் பெறலாம்.

ராம் ரக்ஷா ஸ்தோத்திரத்தைப் படிக்கவும்

ராம் ரக்ஷா ஸ்தோத்திரத்தைப் படிக்கவும்

அனுமன் ஜெயந்தி அன்று, அனுமன் கோவிலில் உள்ள ஸ்ரீராமர், சீதா தேவி மற்றும் அனுமனை வழிபட்டு, ராம் ரக்ஷா ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால், அனுமனின் ஆசீர்வாதம் கிடைக்கும். அதோடு சனி பகவானின் ஆசியும் கிடைக்கும். மேலும் தடைபட்டு வரும் அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடிவடையும்.

செந்தூரம் படைக்கவும்

செந்தூரம் படைக்கவும்

அனுமனுக்கு செந்தூரம் என்றால் மிகவும் பிடிக்கும் என நம்பப்படுகிறது. ஆகவே தொல்லைகள் நீங்க அனுமன் ஜெயந்தி நாளில் அனுமனுக்கு செந்தூரத்தைப் படைத்து அர்ச்சனை செய்யுங்கள். இதனால் அனுமன் மகிழ்ச்சியடைவதோடு, ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் வாழ அருள் புரிவார். இது தவிர, இச்செயல் சனி பகவானின் கோபத்தையும் குறைக்கும்.

தேங்காய்

தேங்காய்

அனுமன் ஜெயந்தி நாளில் ஒரு தேங்காயை எடுத்துக் கொண்டு, அனுமன் கோவிலுக்கு சென்று அனுமனின் முன் உடையுங்கள். இப்படி செய்வதன் மூலம், வாழ்வில் உள்ள அனைத்து தடைகளும் நீங்கும்.

அரசமர இலை மாலை

அரசமர இலை மாலை

அனுமன் ஜெயந்தி நாளன்று அனுமனுக்கு ரோஜா மாலையை அணிவிக்கவும். மேலும் 11 அரசமர இலையில் ராமரின் பெயரை எழுதி, அவற்றை மாலையாக அனுமனுக்கு அணிவித்து அர்ச்சனை செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம், அனுமனின் சிறப்பு ஆசி கிடைப்பதோடு, சனி பகவான் ஒருபோதும் தொந்தரவு செய்யமாட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Remedies To Get Rid Of Shani Dosha On Hanuman Jayanti In Tamil

Here are some remedies to get rid of Shani Dosha on Hanuman Jayanti. Read on...
Story first published: Thursday, April 14, 2022, 15:14 [IST]
Desktop Bottom Promotion