For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம் - கிரக தோஷங்கள் விலக பரிகாரங்கள்

|

நவகிரகங்கள் 12 ராசிக்கட்டங்களில் அமர்ந்து நம்மை ஆள்கின்றன. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என நவகிரகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் வீடுகளில் அமரும் நிலையைப் பொருத்து யோகங்களும் நன்மைகளும் நடைபெறுகின்றன. இதே ராகு கேதுக்களின் பிடியில் நவகிரகங்கள் சிக்கியிருந்தால் காலசர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. அதே போல செவ்வாய் தோஷம் ஏற்பட்டு சிலருக்கு திருமணத்தடையும் ஏற்படுகிறது. சூரியன் முதல் கேது வரை எந்த கிரகத்தாலும் தோஷம் வரலாம். இந்த தோஷங்கள் நீங்க பரிகாரம் செய்தால் பாதிப்புகள் நீங்கும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

நம்முடைய பூர்வ புண்ணியத்திற்கு ஏற்பவே இந்த பிறவியில் நமக்கு கிரகங்களின் அமர்வு இருக்கிறது. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி, ராகு கேது என நவ கிரகங்களும் நம்முடைய ராசிக்கட்டத்தில் எங்கே அமரவேண்டும் என்பதை நாம் ஜனிக்கும் போதே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. கிரகங்களின் அமர்வு, சேர்க்கை, பார்வை பொருத்தே நம்முடைய ஜாதகம் யோக ஜாதகமா? தோஷ ஜாதகமா என்று தீர்மானிக்கலாம்.

Navagraha Doshas

நவகிரகங்களில் செவ்வாய் தோஷம், சுக்கிரதோஷம், ராகு கேது தோஷம் என கடுமையான தோஷங்கள் திருமணம், குழந்தைபாக்கியத்தை தடை செய்கின்றன. சிலருக்கு சந்திரதோஷத்தால் மனநல பாதிப்பு ஏற்படும். புதன் தோஷத்தினால் நரம்பு பிரச்சினைகள் வரலாம். எனவே நமக்கு எந்த கிரகத்தினால் தோஷம் இருக்கிறது என்பதை கண்டறிந்து பரிகாரம் செய்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூரியன் தோஷம்

சூரியன் தோஷம்

சூரியன் பிதுர்காரகன். அதாவது தந்தைவழி உறவுகளின் அமைப்பில் சாதக பாதகங்களை ஏற்படுத்தக் கூடியவன். அரசு, அரசியல் துறை அமைப்புகள், ஆரோக்கியம் இதற்கெல்லாம் சூரியனோட அமைப்பே காரணம். உங்க ஜாதகப்படியோ அல்லது தசாபுக்திப்படியோ சூரியனோட அமைப்பு கெட்டிருந்தால், தந்தை வழி உறவுகளுடன் ஒற்றுமை பாதிக்கப்படும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் தலை, கண்கள், வயிறு, ரத்த மாறுபாடு, பித்தம் அதிகரிப்பு இப்படிப்பட்ட உபாதைகள் மாறி வரும். சிலருக்குத் திருமண தாமதம் சூரியதோஷத்தால் வரும்.உங்களுக்கு சூரியதோஷம் இருந்தால், அடிக்கடி அனுமன் கோயிலுக்குப் போய் வழிபடுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய உதயத்தின் போது வீட்டு பூஜையறையில் பசுநெய்தீபம் 5 அகலில் ஏற்றிவைத்து வழிபடுங்கள். பசுமாட்டுக்கு கோதுமை அல்லது கோதுமைத்தவிடு வாங்கிக் கொடுங்கள். சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதயம், அனுமன் சாலீசா துதிகளை தினமும் கேளுங்கள். சூரியனார் கோயிலுக்குப் போவதும் நல்லது.

MOST READ: சொந்தமாக ஜெட் விமானம் வாங்கி அதில் பறக்கும் நடிகைகள் யார் யார் தெரியுமா?

சந்திரன் தோஷம்

சந்திரன் தோஷம்

சந்திரன் மாத்ரு காரகன். தாய்வழி உறவுகளால் ஏற்படும் பிரச்சனைகள், உறவுகளுக்கிடையே ஏற்படும் ஒற்றுமைக் குறைவு, அம்மாவின் ஆரோக்யம் அடிக்கடி பாதிக்கப்படுதல், தாய்வழி சொத்துக்களில் இழுபறி, பதவி, புகழ், கல்வி உயர்வுகளில் தடை போன்ற பாதிப்புகள் தோன்றலாம். ஜனனகால ஜாதக ரீதியாகவோ, தசாபுக்திப்படியோ உங்களுக்கு சந்திரதோஷம் இருந்தால் திங்கட்கிழமைகளில் சூரியோதயத்தின் போது உங்கள் வீட்டு பூஜையறையில் 5 அகல்தீபம் பசுநெய் விட்டு ஏற்றி வையுங்கள். அடிக்கடி பக்கத்தில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று அங்கு நடைபெறும் அன்னதானம் அல்லது நிவேதனத்திற்கு இயன்ற அளவு பச்சரிசி வாங்கிக் கொடுங்கள். திங்களூர் கைலாசநாதர் ஆலயத்திற்குச் சென்று கைலாசநாதரையும், நவகிரக சந்திரனையும் வழிபட்டு வாருங்கள். இயன்ற அளவு பால், இனிப்புகளை பிரசாதமாக விநியோகம் செய்யுங்கள். பவுர்ணமி நாளில் சந்திர ஒளி படும்படி கிரிவலம் செல்லுங்கள். திருப்பதி சென்றுவர திருப்பங்கள் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

செவ்வாய் தோஷம்

செவ்வாய் தோஷம்

செவ்வாய் தோஷம் கடுமையான தோஷமாகும். திருமணம் பாதிக்கப்படும். சகோதர உறவுகளுடன் ஒற்றுமை குறையும். சகோதரர்களின் ஆரோக்யம் அடிக்கடி சீர்கெடும். பூர்வீக சொத்துக்களான நிலம், வீடு சம்பந்தப்பட்ட வழக்குகள் இழுபறியாகும். கடன்கள் அடையாமல் அதிகரித்துக் கொண்டே போகும். ரத்த அழுத்த மாறுபாடு, ரத்தத்தொற்று நோய்கள், அடிக்கடி காயம் ஏற்படுதல், தலைசுற்றல், பெண்களுக்கு மாதாந்திர உபாதைகளில் சிரமம் வரும் சிற்றின்ப மோகம் அதிகம் வரும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்கிழமைகளில் செவ்வாய் ஓரையில் நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று முருகனை வழிபடுங்கள். பழனி முருகனை வழிபட செவ்வாய் தோஷம் நீங்கும். அடிக்கடி நவகிரக செவ்வாய்க்கு அர்ச்சனை செய்யுங்கள்.

புதன் தோஷம்

புதன் தோஷம்

புதன் வித்யாகாரகன். கல்வி, கலை போன்றவற்றுக்குக் காரணமானவன். புதன் பாதிக்கப்பட்டிருந்தால் படிப்பு தடைபடுதல், கலைகளில் ஆர்வமின்மை

அடிக்கடி விபத்து, உடல் சம்பந்தமான குறைபாடுகள் மாறி மாறி வரலாம். தோல் நிறமாற்றம், முக அழகு குறைதல் நரம்பு பிரச்சினைகள் புதன் தோஷத்தால் ஏற்படும். தாய்மாமன்களால் பிரச்சினையும் வரும். புதன் பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாக, மென்மையாக இருப்பது நல்லத. அடிக்கடி பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி வாங்கி சாற்றி வழிபடுங்கள். பக்தர்களுக்கு பச்சைப்பருப்பு பாயாசம் அல்லது பால்பாயாசம் பிரசாதமாக விநியோகம் செய்யுங்கள். புதன்கிழமைகளில் புதன்ஹோரையில் உங்கள் வீட்டு பூஜையறையில் 5 அகல்தீபம் பசுநெய் ஏற்றி இஷ்ட தெய்வத்தைக் கும்பிடுங்கள். நவகிரக புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபடுவது நல்லது. நாகப்பட்டினம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள் நன்மைகள் நடக்கும்.

MOST READ: மைக்ரோவேவ் ஓவனில் சமைப்பது உண்மையிலே ஆபத்தா இல்லையா?... படிங்க புரியும்...

குரு தோஷம்

குரு தோஷம்

எந்த கிரக தோஷம் இருந்தாலும் குரு பார்வை இருந்தால் தோஷங்கள் நீங்கும். ஆனால் குருவினால் தோஷம் ஏற்பட்டால் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். பிள்ளைகளுடன் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுவது, குழந்தைகளால் பிரிவு ஏற்படும். வியாழ தோஷத்தால் படிப்பில் ஞாபக மறதி, பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள், வயிறு உபாதை, தலைசுற்றல், ரத்த அழுத்த மாறுபாடு, பரம்பரை நோய் பாதிப்பு, மனஅழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படும். வியாழக்கிழமைகளில் வியாழ ஓரையில் வீட்டு பூஜை அறையில் 5 அகல் தீபம் ஏற்றி தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். ஆலங்குடி, திருச்செந்தூர், மந்திராலயம், தூத்துக்குடி ஆழ்வார் திருநகரி ஆகிய தலங்கள் ஏதாவது ஒன்றுக்குச் சென்று மனதார வழிபட்டு வாருங்கள். ஏழைகள் அல்லது பக்தர்களுக்கு லட்டு விநியோகம் செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள தட்சிணாமூர்த்தியை அடிக்கடி சென்று வழிபட்டு வாருங்கள்.

தங்கத்தாலான ஏதாவது ஒரு ஆபரணத்தை உடலில் அணிவதால் குருதோஷம் நீங்கும்.

சுக்ர தோஷம்

சுக்ர தோஷம்

சுக்ரன், களத்திரகாரகன் அதாவது கணவன் மனைவி அமைப்புக்கு காரணமானவன். சுக்ரனின் அமைப்பு சரியில்லாமல் போனால் குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை குறையும், கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்பு உண்டாகும். புது வாகன யோகம் கிடைக்காது. முதுகுத்தண்டுவட பிரச்சினை, கல்லீரல், சிறுநீரகக்கல் பிரச்சினை எற்படும். கணவன் வழி அல்லது மனைவி வழி உறவுகளுடன் சண்டை வரும். சுக்ர தோஷம் ஏற்பட்டால்

வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் உங்கள் வீட்டு பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி வழிபடுங்கள். உங்கள் குலதெய்வத்தையோ அல்லது ஸ்ரீரங்கநாதரையோ வழிபட தோஷம் நீங்கும். பசுமாட்டிற்கு தயிர்சாதம் அல்லது பச்சரிசி, வெல்லம் கலந்து கொடுங்கள்.

நவகிரக சன்னதி சுக்ரனுக்கு அர்ச்சனை செய்ய நன்மைகள் நடக்கும்.

சனி தோஷம்

சனி தோஷம்

சனிபகவான் நீதிமான் தலைமை நீதிபதி வேலையை சரியாக கண கச்சிதாமாக செய்பவர் இவர் ஒருத்தர் தான். தவறு செய்பவர்களுக்கு இவரிடம் மன்னிப்பு கிடையாது. ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி காலங்களில் கடுமையான தண்டனைகளைக் கொடுப்பார்.சனிதோஷம் ஏற்பட்டால் முயற்சிகளில் தடை, முன்னேற்றத்தில் தேக்கம், அதீத அலைச்சல், பணிச்சுமை, சோம்பல், விளைச்சல் பாதிப்பு, உடல் உறுப்புகளில் கோளாறு என பலவிதமான பிரச்னைகள் ஏற்படலாம். நரம்பு பிரச்னை, வாதநோய், வயிற்று உபாதை, எலும்பு தேய்மானம் போன்ற பாதிப்புகள் எற்படும். தினத்திற்கு காகத்திற்கு எள் சாதம் வைக்கலாம்.

சனிக்கிழமைகளில் சனிஹோரையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். லட்சுமி நரசிம்மர், அனுமன், சனிபகவான் காயத்ரி மந்திரங்களை மனதாரக் கூறுங்கள்.திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள நளதீர்த்தத்தில் நீராடி அங்குள்ள சனிபகவானை வழிபடலாம். திருவாரூர் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் தலத்திற்கு சென்று அங்குள்ள பொங்கு சனிபகவானையும் வழிபடலாம். வாலாஜாபேட்டையில் ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வழிபட நன்மைகள் நடக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் செய்யலாம்.

ராகு தோஷம்

ராகு தோஷம்

ஜாதகத்தில் ராகுவின் அமைப்பு பாதிக்கப்பட்டால் திருமணத் தடை, குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தடை, பெயர் புகழுக்கு களங்கம் ஏற்படுவது, எதிர்பாராத நஷ்டம், மனவிரக்தி, வீண்பழி சுமத்தல், குடும்பப் பிரிவு என பொதுவான பிரச்னைகள் வரும். உடல் நலக் கோளாறுகள் மாறி மாறி ஏற்படும்.

சனிக்கிழமைகளில் சனி ஹோரையில் விளக்கேற்றி வழிபடலாம். ராகுகாலத்தில் துர்க்கையை வணங்கலாம். பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள துர்கையையும், திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயிலுக்குச் சென்று ராகுவையும், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று நாகரையும் தரிசித்துவிட்டு வாருங்கள். பசுவுக்கு கடலைப்பொட்டு அல்லது அகத்திக்கீரை தீவனம் வாங்கிக் கொடுங்கள். ராகுதோஷ பாதிப்பு குறையும்.

MOST READ: இந்த காதலுக்கு 25 வயசாச்சாம்... பிரபுதேவா காதலன் ஆன கதை தெரியுமா உங்களுக்கு?

கேது தோஷம் விலக

கேது தோஷம் விலக

உங்களுக்கு கேது தோஷம் இருந்தால் படிப்பு தடைபடுதல், சொத்துப் பிரச்னை, மன விரக்தி, லட்சியத்தில் சோர்வு, ஏமாற்றம், கூடா நட்பு, வீண் சண்டை சச்சரவுகள் என பிரச்னைகள் வரலாம். உடல்நலக் குறைபாடு, மறதி, விஷ ஜுரம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். செவ்வாய்க் கிழமைகளில் சூரியோதயத்தில் 5 அகல் தீபங்களை நெய்விட்டு ஏற்றி வைத்து இஷ்ட தெய்வததை வழிபடுங்கள். அடிக்கடி அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று அறுகம்புல் சாற்றி வழிபாடு செய்யுங்கள். முடிந்த அளவு கதம்ப சாதத்தை தானம் செய்யுங்கள். அடிக்கடி பிள்ளையார்பட்டி சென்று அங்குள்ள விநாயகரை அர்ச்சனை செய்து வழிபடுங்கள். அபிஷேக விபூதியை வாங்கி வந்து தினமும் இட்டுக் கொள்ளுங்கள். விநாயகர் காரிய சித்திமாலை துதியை எப்போதும் கூறுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கோயில் நவகிரக கேது பகவானை வழிபடுங்கள். காளஹஸ்தி காளத்தியப்பர், கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள கேது பகவானை வணங்குங்கள். இயன்ற அளவு தானம் பண்ணுங்கள் தோஷம் குறைந்து நன்மைகள் நடக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: பரிகாரம்
English summary

Remedies for Navagraha Doshas - Graha Dhosam remove

Nava Graha Dosh is very dangerous in life, people are afraid of Graha Dosh. Here are most dangerous Graha Dosh and their remedies.
Story first published: Wednesday, September 25, 2019, 16:43 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more