For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரத சப்தமி நாளில் 7 எருக்கம் இலைகளை வைத்து நீராட வேண்டும் ஏன் தெரியுமா?

|

சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ரத சப்தமி விரதமாகும். ரத சப்தமி நாளில் விரதமிருப்பவர்கள், அதிகாலையில் எழுந்து சூரிய உதயமாகும் நேரத்தில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பானதாகும். புண்ணி தீர்த்தத்தில் நீராட முடியாதவர்கள், வீட்டிலேயே சூரிய ஒளி படும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும். நீராடும் போது 7 எருக்கம் இலைகள், மஞ்சள் பொடி கலந்த அட்சதையை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் தங்களின் தலைக்கு மேல் வைத்துக்கொண்டு நீராடுவது நல்லது. இந்நாளில் செய்யும் தான தர்மங்களுக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Ratha Saptami fasting to make the Lord of the Sun the richest

நம் கண்ணால் காண முடிகிற ஒரே கடவுள் சூரிய பகவான். இந்தியாவில் பண்டைய காலத்திலிருந்தே, சூரிய வழிபாடு இருந்து வருகிறது. சூரியனை வழிபடும் சமயத்திற்கு சவுமாரம் எனப் பொருள்படும். இந்து மதத்தின் அடிப்படை ஆதாரமாக விளங்கும் நான்கு வேதங்களில் முதல் வேதமான ரிக் வேதத்திலேயே சூரிய வழிபாடு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ரிக் வேதத்தில் சூரிய பகவான் தன்னுடைய இரண்டு மனைவிகளுடன், இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் வலம் வருவதாக குறிப்புகள் உள்ளன.

MOST READ: பலரும் அறிந்திராத பழனி தண்டாயுதபாணி கோவிலின் ரகசியம் இதோ!

சூரிய வழிபாடு என்பது, இந்தியாவில் மட்டுமில்லாமல் அண்டை நாடான சீனா, எகிப்து மற்றும் மெசபடோமியா எனப்படும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளான ஈரான், ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளிலும் இருந்து வந்தது. காலப்போக்கில் பிற நாட்டு அரசர்களின் படையெடுப்புகளால் மறைந்து விட்டது. ஆனால், சூரிய வழிபாடு இன்றைக்கும் இந்தியாவில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வசந்த காலம் ஆரம்பம்

வசந்த காலம் ஆரம்பம்

ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில், சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை முடித்துக் கொண்டு, மீண்டும் வட திசை நோக்கி பயணிக்கும் உத்தராயண காலத்தின் தொடக்க மாதமான தை மாத சப்தமி தினத்தன்று ரத சப்தமி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ள படி, வசந்த காலத்தின் ஆரம்பமாகவும், அறுவடை காலத்தின் தொடக்கமாகவும் ரத சப்தமி நாள் விளங்குகிறது. ரத சப்தமி என்பது சூரிய பகவான், தனது ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை வட கிழக்கு திசை நோக்கி செலுத்தும் நாளாக கருதப்படுகிறது.

பிச்சை கேட்ட பிராமணர்

பிச்சை கேட்ட பிராமணர்

சப்ர ரிஷிகளில் ஒருவரான காஷ்யபர்-அதிதி தம்பதிகளின் மகன் தான் சூரிய பகவான். அதிதி கர்ப்பவதியாக இருந்த போது, ஒரு நாள் காஷ்யபருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த போது, யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறக்க, அங்கே ஒரு பிராமணர், ‘தாயே பசிக்கிறது, சாப்பிட ஏதாவது கொடுங்கள்' என்று பிச்சை கேட்க, அதற்கு அதிதி, சற்று இருங்கள் கொண்டு வருகிறேன், என்று சொல்லிவிட்டு நடக்க முடியாமல் மெதுவாக நடந்து வந்து காஷ்யபருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிட்ட பின்பு, ஆகாரத்தை எடுத்து வந்து அந்த பிராமணருக்கு கொடுத்தாள்.

சாபமிட்ட பிராமணர்

சாபமிட்ட பிராமணர்

தாமதமாக வந்து பிச்சை போட்ட அதிதியைப் பார்த்து பிராமணர், என்னை காக்க வைத்து, தாமதமாக வந்து உணவை அளித்து, ‘என்னை உதாசீனப்படுத்தி விட்டாய். அதனால், உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்' என கோபப்பட்டு சாபமிட்டார். பிராமணரின் சாபத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி, நடந்த விஷயத்தை காஷ்யபரிடம் சொல்ல, அதற்கு அவர், கவலைப்படாதே, அமிர்த உலகில் இருந்து என்றைக்கும் அழிவில்லாத பிரகாசத்துடன் ஒரு மகன் நமக்கு கிடைப்பான், என்று ஆசீர்வதித்தார்.

ஏழு குதிரைகள் பூட்டிய தேர்

ஏழு குதிரைகள் பூட்டிய தேர்

காஷ்யபர் ஆசி வழங்கியது போலவே, பிரகாசமான ஒளியுடன் சூரிய பகவான் மகனாக பிறந்தார். வானவில்லைப் போல ஏழு வண்ணங்கள் கொண்ட ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருகிறார். இந்த ஏழு குதிரைகளும் ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை உள்ள ஏழு நாட்களைக் குறிக்கிறது. சூரிய பகவான் வலம் வரும் அந்த தேருக்கு ஒரே ஒரு சக்கரம் மட்டுமே உண்டு.

காலத்தை உருவாக்கும் சூரியன்

காலத்தை உருவாக்கும் சூரியன்

சூரிய பகவானின் தேரை ஓட்டுபவரின் பெயர் அருணன் என்பவர், மஹாவிஷ்ணுவின் பெரிய திருவடி என பயபக்தியோடு அழைக்கப்படும் கருட பகவானின் சகோதரர் ஆவார். சூரிய பகவான் வலம் வரும் தேரின் சக்கரம் உத்திராயணம், தட்சிணாயனம் என இரண்டு பாகங்களைக் கொண்டது. சூரிய பகவான் தன்னுடைய தேரில் ஏறி வலம் வந்து காலை, நண்பகல், மாலை, அர்த்த ராத்திரி என நான்கு பட்டணங்களை சுற்றி வந்து காலங்களை உருவாக்குகிறார்.

ரத சப்தமி விரதம்

ரத சப்தமி விரதம்

சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ரத சப்தமி விரதமாகும். இவ்விரதமானது சூரிய பகவான் தன்னுடைய தட்சினாயன பயணத்தை முடித்துக்கொண்டு, மீண்டும் வட கிழக்கு திசையான உத்திராயண திசையை நோக்கி செலுத்தும் தொடக்க மாதமான தை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. தை மாத அமாவாசை முடிந்து 7ஆம் நாள் ரத சப்தமி நாளாக கொண்டாடப்படுகிறது.

7 எருக்கம் இலைகள்

7 எருக்கம் இலைகள்

ரத சப்தமி நாளில் விரதமிருப்பவர்கள், அதிகாலையில் எழுந்து சூரிய உதயமாகும் நேரத்தில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பானதாகும். புண்ணி தீர்த்தத்தில் நீராட முடியாதவர்கள், வீட்டிலேயே சூரிய ஒளி படும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும். நீராடும் போது 7 எருக்கம் இலைகள், மஞ்சள் பொடி கலந்த அட்சதையை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் தங்களின் தலைக்கு மேல் வைத்துக்கொண்டு நீராடுவது நல்லது.

பச்சரிசி, கருப்பு எள்

பச்சரிசி, கருப்பு எள்

ஏழு எருக்கம் இலைகளை, கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள் பட்டையில் 2, தலையில் 1 என பிரித்து வைத்து நீராட வேண்டும். தலையில் வைக்கும் இலையில் ஆண்கள் அட்சதையை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையை வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு நீராடினால் நீண்ட ஆரோக்கியத்தையும், நிலைத்த செல்வத்தையும் வழங்கும். தந்தையை இழந்த ஆண்கள், கணவரை இழந்த பெண்கள் 7 எருக்கம் இலைகளுடன் பச்சரிசி மற்றும் கருப்பு எள் என இரண்டையும் தலையில் வைத்துக்கொண்டு நீராட வேண்டும்.

சூரிய நாராயண காயத்ரி

சூரிய நாராயண காயத்ரி

கணவனை இழந்த பெண்கள் ரத சப்தமி விரதத்தை கடைபிடித்தால், இனி வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. ரத சப்தமி விரதத்தை சூரிய உதய காலத்தில் மேற்கொள்ள வேண்டும். அன்றை தினத்தில் சுத்தமான இடத்தை செம்மண்ணால் பூசி, அந்த இடத்தில் சூரியரதம் வரைய வேண்டும். அதில் சூரிய சந்திரரை வரைந்து பவனி வருவதாக நினைத்துக்கொள்ள வேண்டும். மேலும் அதற்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உள்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சனை செய்த சூரிய நாராயணரை சூரிய காயத்ரி மற்றும் துதிகளை சொல்லி வழிபட வேண்டும்.

செல்வந்தர் ஆகலாம்

செல்வந்தர் ஆகலாம்

மேலும், சர்க்கரை பொங்கல், உளுந்து வடை போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து பூஜை செய்யவேண்டும். கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்றவற்றை பசுமாட்டிற்கு நல்ல பலனைக் கொடுக்கும். வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் சூரிய ரதம் வரைந்து அரிசி, பருப்பு, வெள்ளம் ஆகியவற்றை படைக்கலாம். அவ்வாறு செய்தால் செல்வந்தர் ஆகலாம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. அதே போல், ரத சப்தமி தினத்தன்று தொடங்கும் தொழில்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்நாளில் செய்யும் தான தர்மங்களுக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ratha Saptami fasting to make the Lord of the Sun the richest

Ratha Saptami fast is the most important of the fasting of the sun. On the day of Ratha Saptami, it is best to get up early in the morning and get up at sunrise and take a bath in Sacred Tirtha. People who cannot bath in a Sacred Thirtham, should stand in the sunshine at home and take a bath.
Story first published: Saturday, January 25, 2020, 11:26 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more