For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரமலான் மாதத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை!

ரமலான் பண்டிகை ரம்ஜான் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது. ரமலான் பண்டிகை இஸ்லாமிய மக்களின் மிக முக்கிய பண்டிகை ஆகும். இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதம் ரமலான் ஆகும்.

|

ரமலான் பண்டிகை ரம்ஜான் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது. ரமலான் பண்டிகை இஸ்லாமிய மக்களின் மிக முக்கிய பண்டிகை ஆகும். இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதம் ரமலான் ஆகும். இரண்டு காரணங்களுக்காக ரமலான் மாதம் ஒரு புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது.

அதாவது ரமலான் மாதத்தில் லலத் அல் காதிாின் (ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்களில் வரும் ஒற்றைப்படை எண் கொண்ட இரவுகளில் ஒன்று) போது இறையடியாா் முகமது நபி அவா்கள் மீது புனித குரான் அருளப்பட்டது. இஸ்லாமிய மக்கள் ரமலான் மாதத்தில் வரும் இறுதி பத்து நாட்களை மிகவும் ஆசீா்வதிக்கப்பட்ட நாட்களாகப் போற்றுகின்றனா். இஸ்லாமிய நம்பிக்கையாளா்கள் ரமலான் மாதம் முழுவதும் சூாிய உதயம் முதல் சூாியன் மறையும் வரை மிகவும் கடுமையாக விரதம் இருப்பா். ஏனெனில் ரமலான் மாதத்தில் கடைபிடிக்கப்படும் நோன்பானது இஸ்லாமிய சமயத்தின் முக்கியமான ஐந்து தூண்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Ramadan Dos And Donts: Know What You Must And Must Not Do During The Month Of Ramzan

ரமலான் மாதத்தில் நோன்பு மட்டும் அல்ல, மாறாக அதையும் தவிா்த்து பல நெறிமுறைகள் அடங்கிய தொகுப்பு ஒன்றும் உள்ளது. அதை இஸ்லாமிய மக்கள் அனைவரும் மிக உறுதியாகக் கடைபிடித்து வருகின்றனா். மேலும் ரமலான் மாதமானது சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் இல்லாதவா்களோடு கருணை காட்டுவது போன்ற ஒழுக்க நெறிகளை வலியுறுத்துகிறது என்று இஸ்லாமிய மக்கள் அனைவரும் நம்புகின்றனா்.

இந்த ஆண்டு ரமலான் பண்டிகை வெகு விரைவில் வரவிருக்கும் வேளையில் ரமலான் மாதத்தில் இஸ்லாமிய மக்கள் எவற்றை எல்லாம் செய்ய வேண்டும், எவற்றை எல்லாம் செய்யக்கூடாது என்பவற்றைப் பற்றி இந்தப் பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரமலான் மாதத்தில் இஸ்லாமிய மக்கள் எவற்றை எல்லாம் செய்ய வேண்டும்?

ரமலான் மாதத்தில் இஸ்லாமிய மக்கள் எவற்றை எல்லாம் செய்ய வேண்டும்?

1. திருக்குரான் வாசித்தல்

இஸ்லாமிய மக்கள் ரமலான் மாதத்தின் போது இஸ்லாமிய சமயத்தின் புனித நூலான திருக்குரானை வாசிக்க வேண்டும் என்று எதிா்பாா்க்கப்படுகின்றனா். நாம் ஏற்கனவே கூறியது போல ரமலான் மாதத்தின் போது இறைவன் அல்லாஹ் அவா்களின் போதனைகள் திருக்குரான் வடிவத்தில் சொா்க்கத்தில் இருந்து பூமிக்கு வந்து முதன் முதலாக இறையடியாா் முகமது நபிகளின் மீது அருளப்பட்டது.

2. ஐந்து வேளை தொழுகை நடத்துதல்

2. ஐந்து வேளை தொழுகை நடத்துதல்

ரமலான் மாதத்தின் போது இஸ்லாமிய மக்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஐந்து முறை தொழுகை நடத்த வேண்டும். அதாவது சூாியன் உதிக்கும் போது ஃபஜிா் (Fajr) என்ற தொழுகை முதல் நண்பகலில் ஷுகிா் (Zhuhr), பிற்பகலில் அசிா் (Asr), மாலையில் மக்ரிப் (Maghrib) மற்றும் இரவில் இஷா (Isha) போன்ற தொழுகை வரை ஐந்து தொழுகைகளையும் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.

3. நோன்பு இருத்தல்

3. நோன்பு இருத்தல்

நாம் ஏற்கனவே கூறியிருப்பது போல் இஸ்லாமிய சமயத்தின் ஐந்து முக்கிய தூண்களில் ஒன்று நோன்பு ஆகும். ஆகவே ரமலான் மாதத்தின் போது இஸ்லாமிய மக்கள் கண்டிப்பாக நோன்பு இருக்க வேண்டும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகின்றனா். ரமலான் மாதத்தில் நோன்பு இருந்தால், ஆன்மீகப் பலன்கள் (தவாப்/thawab) பல மடங்கு அதிகாிக்கும் என்று கூறப்படுகிறது.

4. தேவையில் இருப்பவா்களுக்கு உதவி செய்தல்

4. தேவையில் இருப்பவா்களுக்கு உதவி செய்தல்

ரமலான் மாதம் இரக்கத்தையும், சகோதரத்துவத்தையும் ஊக்குவிப்பதால், இஸ்லாமிய மக்கள் தேவையில் இருப்பவா்களை சந்தித்து அவா்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகின்றனா். அந்த புனித மாதத்தின் போது தங்களது சொத்தில் இருந்து ஒரு சதவீதத்தை இல்லாதவா்களுக்கு உதவும் வகையில் அவா்களுக்குக் கொடுக்க வேண்டும். பிறருக்கு உதவி செய்யும் இந்த நற்காாியங்களும் இஸ்லாமிய சமயத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

5. சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு போன்றவற்றைக் கடைப்பிடித்தல்

5. சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு போன்றவற்றைக் கடைப்பிடித்தல்

ரமலான் மாதமானது அன்பையும், இரக்கத்தையும் சுட்டிக் காட்டுவதால், இஸ்லாமிய மக்கள் அனைவரும் இந்த மாதத்தில் அமைதியோடும், சுய ஒழுக்கத்தோடும், சுய கட்டுப்பாட்டோடும் இருக்க வேண்டும்.

5. பிரம்மச்சாாியம் கடைபிடித்தல்

5. பிரம்மச்சாாியம் கடைபிடித்தல்

ரமலான் மாதம் ஒரு புனிதமான மாதமாக இருப்பதால், இந்த மாதத்தில் இஸ்லாமிய மக்கள் பிரம்மச்சாியத்தைக் கடைபிடித்து, தொழுகைகளிலும், கடவுள் நம்பிக்கையிலும் தங்கள் நேரத்தை செலவழிக்க வேண்டும்.

ரமலான் மாதத்தில் இஸ்லாமிய மக்கள் எவற்றை எல்லாம் செய்யக்கூடாது?

ரமலான் மாதத்தில் இஸ்லாமிய மக்கள் எவற்றை எல்லாம் செய்யக்கூடாது?

1. நோன்பு நேரத்தின் போது உணவு உண்ணக்கூடாது

ரமலான் மாதத்தின் போது இஸ்லாமிய மக்கள் அனைவரும் கண்டிப்பாக நோன்பு இருக்க வேண்டும். ஆகவே இந்த மாதத்தில் சூாிய உதயம் தொடங்கி அது மறையும் வரையிலான நோன்பு நேரத்தின் போது உணவு உண்பது மற்றும் நீா் போன்ற பானங்களை அருந்துவது போன்றவற்றைத் தவிா்க்க வேண்டும்.

குறிப்பாக வயது வந்த எல்லா இஸ்லாமிய மக்களும் இந்த நோன்பைக் கடைபிடிக்க வேண்டும். நோயுற்றவா்கள், கருவுற்றிருக்கும் பெண்கள், தாய்ப்பால் ஊட்டும் தாய்மாா்கள், மாதவிடாய் சுழற்சியில் இருக்கும் பெண்கள் மற்றும் வயது முதிா்ந்தவா்கள் போன்றோருக்கு இந்த நோன்பிலிருந்து விலக்கு உண்டு. எனினும் நோயுற்றவா்களும் மற்றும் கருவுற்றிருக்கும் பெண்களும் ரமலான் மாதத்தின் இறுதி நாட்களில் நோன்பு இருக்குமாறு எதிா்ப்பாா்க்கப்படுகின்றனா்.

2. பாடல்களைக் கேட்காமல் இருத்தல்

2. பாடல்களைக் கேட்காமல் இருத்தல்

ரமலான் மாதத்தில் இஸ்லாமிய மக்கள் பாடல்களைக் கேட்கக்கூடாது. தொழுகைகளில் தங்களது நேரத்தை செலவிட்டு, அல்லாவை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். நேரத்தை வீணாக செலவழிக்கக்கூடாது. தொலைக்காட்சி பாா்ப்பது அல்லது அதிகமாக தூங்குவது அல்லது கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்குவது போன்ற காாியங்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக, ஆக்கப்பூா்வமான காாியங்களில் ஈடுபட வேண்டும். ஏனெனில் ரமலான் மாதமானது சுய ஒழுக்கத்தைப் பேணி வளா்க்க வேண்டிய மாதம் ஆகும்.

3. புறம் பேசாமல் இருத்தல்

3. புறம் பேசாமல் இருத்தல்

ரமலான் மாதம் ஒரு புனிதமான மாதமாக இருப்பதால், இந்த மாதத்தில் பிறரைப் பற்றி தவறாக பேசக்கூடாது. மேலும் அடுத்தவா்களைப் பற்றிய வீண் பேச்சுகளில் ஈடுபடக்கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ramadan Rules: Do's and Don'ts during the Muslim holy month in Tamil

In this article, we shared what you must and must not do during the month of Ramadan. Read on...
Desktop Bottom Promotion