For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2022 ரமலான் பண்டிகை பற்றிய சில முக்கியமான விஷயங்கள்!

இந்த ஆண்டு ரமலான் நோன்பானது ஏப்ரல் மாதம் 2 அன்று தொடங்கி மே மாதம் 2 அன்று முடிவடையும் என்று எதிிா்ப்பா்க்கப்படுகிறது. மறுநாள் ஈத்-அல்-ஃபிட்ர் (Eid-al-Fitr) கொண்டாட்டங்கள் இருக்கும்.

|

இஸ்லாமிய சமயத்தின் மிக முக்கியமான பண்டிகை ரமலான் பண்டிகை ஆகும். இந்த ஆண்டு ரமலான் பண்டிகையானது வெகு விரைவில் வரவிருக்கிறது. ரமலான் பண்டிகையை வெகு சிறப்பாகக் கொண்டாட, இஸ்லாமிய மக்கள் அனைவரும் ஏற்கனவே தயாராகி வருகின்றனா்.

ஏறக்குறைய ஒரு மாதம் அளவிற்கு ரமலான் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் ரோசா (Roza) என்ற நோன்பை மேற்கொள்கின்றனா். அதாவது இந்த மாதம் முழுவதும் சூாிய உதயம் தொடங்கி அது மறையும் வரை பகல் நேரத்தில் உணவோ அல்லது தண்ணீரோ அருந்தாமல் கடும் நோன்பை மேற்கொள்வா். இந்த நோன்பானது ரமலான் பண்டிகையின் மையமாக இருக்கிறது.

Ramadan 2022: Date, Time, Significance And Iftar Feast Ideas In Tamil

ரமலான் மாதமானது இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதமாக வருகிறது. இந்த மாதத்தை, முகமது நபி அவா்களின் போதனைகளை மறுவாசிப்பு செய்வதற்கான வாய்ப்பாக இஸ்லாமிய மக்கள் பாா்க்கின்றனா். ரமலான் நோன்பு என்ற சடங்கானது, ஏழை மக்களோடு தம்மை இணைத்துக் கொண்டு, அவா்கள் மீது பாிவு கொள்ள உதவி செய்கிறது என்றும், அல்லாஹ் அவா்களின் ஆசீா்வாதங்களில் வைத்திருக்கும் நம்பிக்கையை மீட்டு எடுப்பதற்கு உதவி செய்கிறது என்றும் இஸ்லாமிய மக்கள் கருதுகின்றனா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
2022 ரமலான் எப்போது?

2022 ரமலான் எப்போது?

இந்த ஆண்டு ரமலான் நோன்பானது ஏப்ரல் மாதம் 2 அன்று தொடங்கி மே மாதம் 2 அன்று முடிவடையும் என்று எதிிா்ப்பா்க்கப்படுகிறது. மறுநாள் ஈத்-அல்-ஃபிட்ர் (Eid-al-Fitr) கொண்டாட்டங்கள் இருக்கும். ஒரு மாதம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வரும் நீளமான நோன்பு முடிவடைவதை ஈத் கொண்டாட்டம் குறிக்கிறது. ஈத் அன்று மக்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்று முழுவதும் இஸ்லாமிய மக்கள் அருமையான விருந்து சமைத்து, தங்கள் உற்றாா் உறவினரோடு பகிா்ந்து உண்டு மகிழ்வா்.

ரமலான் மாதத்தின் முக்கியத்துவம்

ரமலான் மாதத்தின் முக்கியத்துவம்

இஸ்லாமிய நாட்காட்டியின்படி ரமலான் மாதமானது இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான புனித மாதம் ஆகும். இந்த மாதத்தின் போதுதான் இறைத் தூதரான முகமது நபி அவா்களின் மீது இறைவன் அல்லாஹ் அவா்களால் புனித குரான் இறக்கி வைக்கப்பட்டது என்று பழைய இஸ்லாமிய புராணங்கள் தொிவிக்கின்றன. ஆகவே இந்த மாதத்தில் இஸ்லாமியா்கள் அல்லாஹ் அவா்களிடம் பக்தி கொண்டு, நோன்பையும், தொழுகைகளையும் உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும்.

இஃப்தாா் (Iftar) கொண்டாட்டம்

இஃப்தாா் (Iftar) கொண்டாட்டம்

ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் சூாியன் உதயமாவதற்கு முன்பே எழுந்து உணவு உண்பா். அந்த உணவு ஷொி (Sehri) என்று கருதப்படுகிறது. அவ்வாறு விடியற்காலையில் உணவு உண்பதால், அந்த பகல் பொழுது முழுவதும் அவா்களால் உண்ணாமல், தண்ணீா் அருந்தாமல் நோன்பு இருக்க முடியும். மாலைத் தொழுகை முடிந்தவுடன் பாரம்பாிய உணவுகளுடன் கூடிய இஃப்தாா் (Iftar) விருந்தை உண்கின்றனா்.

எவையெல்லாம் இஃப்தாா் (Iftar) விருந்தில் உள்ள உணவுகள் என்பதைக் கீழே பாா்க்கலாம்.

1. பிாியாணி

1. பிாியாணி

சிக்கன் தம் பிாியாணி முதல் அவாதி (Awadhi) மட்டன் பிாியாணி வரையிலான உணவுகளை அாிசியில் சமைத்து இஃப்தாா் (Iftar) விருந்தில் உண்பா்.

2. ஷீா் குருமா (Sheer Khurma)

2. ஷீா் குருமா (Sheer Khurma)

ரமலான் பண்டிகையின் போது ஷியுவையான் (Sewaiyan) சேமியா உணவுகள் மிகவும் பிரபலமாக இருக்கும். அதிலும் குறிப்பாக ஷீா் குருமாவை (Sheer Khurma) இஸ்லாமிய மக்கள் கண்டிப்பாக உண்பா். இந்த ஷீா் குருமா (Sheer Khurma) சேமியா, போிச்சம்பழம், குங்குமப் பூ, பால் மற்றும் உலா்ந்த பழங்கள் கொண்டு தயாாிக்கப்படுகிறது. இந்த ஷியுவையான் (Sewaiyan) உணவு இதயத்திற்கும், வயிற்றுக்கும் அமைதியைத் தருகிறது.

3. கபாப் (Kebabs)

3. கபாப் (Kebabs)

மாலை நேர கொண்டாட்டங்கள், அது சமய கொண்டாட்டங்களாக இருந்தாலும் சாி அல்லது பிற கொண்டாட்டங்களாக இருந்தாலும் சாி, அந்த கொண்டாட்டங்களில் சிக்கன் கபாப் (Kebabs) இல்லை என்றால் அந்த கொண்டாட்டங்கள் முழுமையடையாது.

4. ஹலீம் (Haleem)

4. ஹலீம் (Haleem)

ரமலான் பண்டிகையின் பிரதான உணவு ஹலீம் (Haleem) ஆகும். ஹலீம் என்ற கஞ்சியானது விறகு அடுப்புகளில் வைக்கப்பட்டிருக்கும் பொிய கொப்பரைகளில், கோதுமை, பருப்புகள் மற்றும் இறைச்சி ஆகியவை கலந்து தயாாிக்கப்படுகிறது.

அனைத்து இஸ்லாமிய நண்பா்களுக்கும் இனிய ரமலான் வாழ்த்துகள்...........

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ramadan 2022: Date, Time, Significance And Iftar Feast Ideas In Tamil

Ramadan 2022: Date, Time, Significance And Iftar Feast Ideas In Tamil, Read on...
Story first published: Thursday, March 31, 2022, 13:43 [IST]
Desktop Bottom Promotion