Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
ரக்ஷா பந்தன் அன்று இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் 2022 ஆகஸ்ட் 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ரக்ஷா பந்தன் நாளில் உங்கள் ராசியின் படி எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவலாக உள்ளீர்களா? கீழே 2022 ரக்ஷா பந்தன் ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ரக்ஷா பந்தன் என்பது சகோதர சகோதரிகளுக்கு இடையேயான பந்தத்தைப் போற்றும் ஒரு அற்புதமான நாளாகும். இந்நாளில் சகோதரிகள் தங்கள் சகோதரர்கள் வளமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அவர்களின் கையில் ராக்கியைக் கட்டுவார்கள். பதிலுக்கு சகோதரனும் தனது சகோதரியுடன் கடினமான சூழ்நிலைகளிலும் உடனிருந்து பாதுகாப்பேன் என்று உறுதி அளித்து, பரிசுகளை வழங்குவார்கள்.

இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் 2022 ஆகஸ்ட் 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ரக்ஷா பந்தன் நாளில் உங்கள் ராசியின் படி எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவலாக உள்ளீர்களா? கீழே 2022 ரக்ஷா பந்தன் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ரக்ஷா பந்தன் நாளில் முயற்சிகளுக்கு ஏற்ப பலன் கிடைக்கும். சில நிதி நன்மைகளையும் பெறலாம். வேலையைப் பொறுத்தவரை, எந்த ஒரு பிரச்சனைகளையும் சந்திக்கமாட்டீர்கள். மேலும், இன்று மிகவும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெறுவீர்கள். உங்கள் உடன்பிறந்தவர்களின் ஆதரைவைப் பெறுவீர்கள். இது உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! ரக்ஷா பந்தன் நாளில் நீங்கள் உடன் பிறப்புகளுக்கு ஆலோசனைகளை வழங்குவீர்கள். அவர்களுக்கு வாழ்வில் சரியான பாதையை வழங்க முடிந்தவரை முயற்சிப்பீர்கள். அவர்களும் சொந்த நலனுக்காக நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள். ஒட்டுமொத்தமாக, இந்நாளை நீங்கள் நன்கு அனுபவிப்பீர்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ரக்ஷா பந்தன் நாளில் உடன்பிறந்தவர்களுடனான உறவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இருக்காது. உங்களின் சொந்த வாழ்வில் பிஸியாக இருப்பீர்கள். உங்கள் உறவுகள் முன்பைப் போன்றே இருக்கும். எதையும் செய்வதற்கு போதுமான நேரம் இருக்காது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ரக்ஷா பந்தன் நான் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்நாளில் உங்கள் உடன்பிறந்தவர்கள் தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். இந்நாளில் உங்கள் சகோதரர் அல்லது உடன்பிறந்தவர்களின் வெற்றியைக் கொண்டாடுவீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் ரக்ஷா பந்தன் நாளில் தங்கள் உடன் பிறந்தவர்களுடன் நிதி மற்றும் தொழில் வாழ்க்கையைக் குறித்த உரையாடல்களைக் கொண்டிருப்பீர்கள். இந்நாளில் நீங்கள் அதிகம் விவாதிப்பது பணத்தை எப்படி மேம்படுத்துவது என்பதாகவே இருக்கும். இருந்தாலும், ஒருவருக்கொருவர் ஆதரவு மற்றும் கடின உழைப்பால் நிதி நன்மைகளைப் பெறுவீர்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ரக்ஷா பந்தன் நாளில் புதிதாக எதுவும் நடக்கப் போவதில்லை. இந்நாளில் உடன்பிறந்தவர்களுடனான பந்தம் மாறாமல் இருக்கும். இருப்பினும் இந்நாளில் எந்த தவறையும் செய்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் வருத்தப்படுவீர்கள். எனவே இந்நாளில் சற்று எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

துலாம்
துலாம் ராசிக்காரர்களே! ரக்ஷா பந்தன் நாளில் உங்கள் பெற்றோரின் வற்புறுத்தலால் உங்கள் உடன்பிறந்தவர்களுடனான உறவை மேம்படுத்த முயற்சிப்பீர்கள். இந்த முயற்சி நிச்சயம் ஒரு நல்ல பலனை அளிக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ரக்ஷா பந்தன் நாள் சாதனைகள் மற்றும் கொண்டாட்டங்களின் நாளாகும். தொழில் வாழ்க்கையில் நல்ல வெற்றி கிடைக்கும். இந்நாளில் உங்களின் சாதனைகளை உங்கள் உடன்பிறந்தவர்களுடன் கொண்டாட மகிழ்வீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ரக்ஷா பந்தன் நாளில் வாழ்க்கையை முன்னேற்றும் சில புதிய யோசனைகள் வரக்கூடும். உங்களின் தொழில் முயற்சிகளால் இன்று உங்கள் நிதி நிலை மேம்பட்டு சிறப்பாக இருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களே! ரக்ஷா பந்தன் நாளில் உங்களுக்கும் உங்கள் உடன்பிறந்த சகோதரருக்கும் இடையே இருந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். உடன்பிறந்தவர்களுடனான உறவு படிப்படியாக மேம்படும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ரக்ஷா பந்தன் நாள் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். வியாபாரத்தை மேம்படுத்த சில அற்புதமான வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். பணிபுரிபவராக இருந்தால், பணியிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.

மீனம்
மீன ராசிக்காரர்கள் ரக்ஷா பந்தன் நாளன்று நிதி ஆதாயம் பெறுவார்கள். உங்கள் உடன் பிறந்தவர்களின் பரிசு இந்நாளை சிறப்பானதாக மாற்றும். உங்கள் சகோதரர்களின் முழு ஆதரவு கிடைப்பதால், உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும்.



Click it and Unblock the Notifications