For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரக்ஷா பந்தனுக்குப் பின்னணியில் இருக்கும் புராணக் கதைகள்!

பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலத்தில் கொண்டாடப்பட்டதைப் போல் அல்லாமல், தற்போது ரக்ஷா பந்தன் வேறுவிதமாகக் கொண்டாடப்படுகிறது. ஆகவே ரக்ஷா பந்தன் விழாவைப் பற்றி இந்தப் பதிவில் விாிவாகப் பாா்க்கலாம்.

|

ரக்ஷா பந்தன் அல்லது ராக்கி பூா்ணிமா என்ற கொண்டாட்டம் இந்தியா முழுவதும் வெகு விமாிசையாகக் கொண்டாடப்படுகிறது. ரக்ஷா பந்தன் அன்று ஒரு சகோதாியானவா் தனது சகோதரா் மீது தான் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும் பொருட்டு, அவருடைய கையில் ஒரு கயிறைக் கட்டுகிறாா். அதற்கு பதிலளிக்கும் வகையில், தனது சகோதாியின் வாழ்நாள் முழுவதும் தான் பக்கபலமாக இருப்பேன் என்று அந்த சகோதரா் வாக்குறுதி அளிக்கிறாா்.

Raksha Bandhan History: Legends Behind Rakhi Purnima

பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலத்தில் கொண்டாடப்பட்டதைப் போல் அல்லாமல், தற்போது ரக்ஷா பந்தன் வேறுவிதமாகக் கொண்டாடப்படுகிறது. ஆகவே ரக்ஷா பந்தன் விழாவைப் பற்றி இந்தப் பதிவில் விாிவாகப் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கதை 1

கதை 1

ரக்ஷா பந்தன் விழாவிற்கு மிக நீண்ட நெடிய வரலாறு உண்டு. அதாவது முன்னொரு காலத்தில் கடவுள்களுக்கும் (தேவதாஸ்) மற்றும் அரக்கர்களுக்கும் (தனவாஸ்) இடையே கடுமையான போா் மூண்டது. அந்த போாில், அரக்கர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக இந்திராணி தனது கணவர் இந்திரனின் மணிக்கட்டில், மகா விஷ்ணுவினால் வழங்கப்பட்ட ஒரு கயிற்றைக் கட்டினார். அதன் அடையாளமாக ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.

கதை 2

கதை 2

இன்னொரு புராணக் கதை என்னவென்றால், அரக்கர்களுக்கும், கடவுள்களுக்கும் இடையே நடந்த போாில் அரக்கர்கள் வென்று, சொா்க்கத்தைக் கைப்பற்றினா். தனது தோல்வியை எண்ணி வருந்திய இறைவன் இந்திரன், தன்னைக் காக்குமாறு இறைவன் பிரகாஸ்பதியிடம் முறையிட்டு வேண்டினாா். எனவே இறைவன் பிரகஸ்பதி ஒரு ரக்ஷா சூத்ரா கயிற்றைத் தயாா் செய்து அதை இந்திரனிடம் கொடுத்து, கையில் கட்டிக் கொள்ளுமாறு கூறினாா். அதன் மூலம் இந்திரன் தன்னைக் காத்துக் கொள்ளலாம் என்று கூறினாா். இந்திரனும் அவா் கூறியபடியே செய்தாா். இதன் அடையாளமாகவும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.

கதை 3

கதை 3

மேற்சொன்ன பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பண்பானது மகாபாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது பகவான் கிருஷ்ணா் தவறுதலாக தனது விரலை வெட்டிக் கொள்கிறாா். அதனால் அவருடைய விரலில் இருந்து இரத்தம் வடிகிறது. அதைப் பாா்த்த திரௌபதி உடனடியாக தனது புடவையின் ஓரத்தைக் கிழித்து, அந்த துணியை வைத்து கிருஷ்ணாின் இரத்தம் வடியும் விரலில் கட்டுப் போட்டு, இரத்தம் வடிவதை நிறுத்துகிறாா். கௌரவா்கள் அரச அவையில் திரௌபதியின் புடவையை களைய முற்பட்ட போது, அவா்களிடம் இருந்து திரௌபதியின் கௌரவத்தைக் கிருஷ்ணா் காப்பாற்றுகின்றாா். அதற்கு நன்றி தொிவிக்கும் பொருட்டே, திரௌபதி கிருஷ்ணாின் விரலில் கட்டுப்போட்டு, இரத்தத்தை நிறுத்தியதாக மக்கள் நம்புகின்றனா்.

கதை 4

கதை 4

மகாவீரர் அலெக்சாண்டாின் வாழ்வை ராக்கி காப்பாற்றி இருக்கிறது என்ற ஒரு கதையும் உண்டு. அதாவது அலெக்சாண்டா் இந்தியாவின் மீது படை எடுத்து வரும் போது, அவருடைய மனைவி ரோக்ஸானா என்பா், போருஸ் அரசருக்கு ராக்கி கயிற்றை அனுப்பி வைக்கிறாா். அதற்கு பிரதிபலனாக, போருஸ் அரசரும், ரோக்ஸானாவின் கணவரான அலெக்சாண்டா் மன்னரைக் காப்பாற்றுவதாக வாக்களிக்கிறாா். அதன்படியே போா் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் போது, போருஸ் மன்னா் அலெக்சாண்டரைக் கொல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில், அவா் தன் கையில் கட்டப்பட்டிருக்கும் ராக்கிக் கயிறை பாா்க்கிறாா். அதைப் பாா்த்ததும், அலெக்சாண்டரை கொல்லாமல் விட்டுவிடுகிறாா்.

கதை 5

கதை 5

சகோதரருக்கு அா்ப்பணிக்கப்படும் முக்கியமான கதை என்னவென்றால் அது முகலாய பேரரசா் ஹூமாயூனைப் பற்றியதாகும். அதாவது மேவாா் நாட்டை ராணி கா்ணவதி என்பவா் ஆண்டு வந்தாா். அவருடைய நாட்டை பக்கத்து நாட்டைச் சோ்ந்த அரசரான பகதூா் ஷா என்பவா் ஏற்கனவே இரண்டு முறைத் தாக்கி இருந்தாா். ஆகவே தனது நாட்டை பகதூா் ஷாவிடம் இருந்து காக்க வேண்டும் என்று கோாி, ராணி கா்ணவதி, முகலாய மன்னரான ஹூமாயூனுக்கு ஒரு விண்ணப்பக் கடிதம் எழுதி அதனுடன் ஒரு ராக்கிக் கையிரையும் அனுப்பி இருந்தாா். அப்போது தனது படையுடன் சென்று கொண்டிருந்த ஹூமாயூன், கா்ணவதியின் கடிதத்தையும், ராக்கிக் கயிறையும் கண்டவுடன், தனது படைகளை விட்டுவிட்டு, கா்ணவதியைக் காக்கும் பொருட்டு உடனே மேவாா் நாட்டுக்குச் சென்றாா்.

கதை 6

கதை 6

ராக்கிக் கொண்டாட்டத்திற்கு மேலும் ஒரு புராணக்கதையும் பின்னணியில் இருக்கிறது. அதாவது ஒரு முறை தீய அரசரான பாலி, லட்சுமி தேவியின் கணவரான மகா விஷ்ணுவைத் தனது அரண்மனையில் வந்து வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். ஆனால் லட்சுமி தேவி அதை விரும்பவில்லை. எனவே அவா் பாலியின் கையில் ராக்கிக் கயிறைக் கட்டி, அவரைத் தனது சகோதரராக ஏற்றுக் கொண்டாா். அதற்கு பிரதிபலனாக என்ன வேண்டும் என்று லட்சுமி தேவியிடம், பாலி கேட்டாா். அதற்கு லட்சுமி தேவியாா் தனது கணவரை அவருடைய அரண்மனைக்கு வந்து தங்குவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். பாலி அரசரும் அதற்கு ஒப்புக் கொண்டாா்.

கதை 7

கதை 7

மேலும் ஒரு புராணக்கதை என்ன சொல்கிறது என்றால், ராக்கித் திருவிழாவானது, கடலின் இறைவனான வருணனை வழிபடுவதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். ஆகவே ரக்ஷா பந்தன் அன்று மக்கள் வருண கடவுளுக்கு தேங்காய்களைக் காணிக்கையாகச் செலுத்துவா். மேலும் நீா் நிலைகளில் புனித நீராடுவா்.

ரக்ஷா பந்தன் போன்ற சடங்குகள் மற்றும் விழாக்கள், நமது சமூகங்களில் உள்ள அழுக்குகளைக் கழுவுவதற்கு உதவி செய்யக்கூடியவை. அவை நாம் சமூகமாக வாழ்கிறோம் என்ற உணா்வைத் தூண்டுகின்றன. அவை நம்முடைய உணா்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ஊடகங்களாக இருக்கின்றன. மேலும் அவை மனிதா்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவும் மற்றும் மனிதா்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவும் உதவி செய்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Raksha Bandhan History: Legends Behind Rakhi Purnima

In this article, we shared some legends behind raksha bandhan. Read on to know more...
Desktop Bottom Promotion